வெப் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75/ 5.

நடிகர் & நடிகைகள் :- நட்டி, ஷில்பா மஞ்சுநாத், மொட்ட ராஜேந்திரன், முரளி, அனன்யா மணி, ஷாஸ்வி பாலா, சுபப்ரியா மலர் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஹாரூன்.

ஒளிப்பதிவு :- கிறிஸ்டோபர் ஜோசப்.

படத்தொகுப்பு :- சுதர்சன் ஆர்.

இசை :- கார்த்திக் ராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- வேலன் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- வி.எம். முனிவேலன்.

ரேட்டிங் :- 2.75/ 5.

ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நான்கு இளம்பெண்கள் பல விதமான போதை பழக்கத்திற்கு அடிமையாகி இரவு நேரங்களில் வீக் என்ட் பார்ட்டியில் மது மயக்கத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என ஜாலியாக இருந்து வருகின்றனர்.

தனது நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரியும் புதிதாக திருமணம் ஆன அனன்யா மணியை இவர்கள் இரவு பார்ட்டிக்கு அழைத்து சென்று மது பழக்கத்திற்கு ஆளாக்கி கும்மாளம் போடுகிறார்கள்.

இரவு பார்ட்டியை முடித்து விட்டு மரண போதையுடன் வெளியே வரும் காரில் செல்லும் போது மர்ம நபரால் நான்கு இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர்.

அந்த நான்கு இளம் பெண்களையும் கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? அந்த நான்கு இளம் பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, இல்லையா? என்பதுதான் இந்த வெப் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வெப் திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சைக்கோத்தனம் கலந்த கதாநாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், நடிப்பில் வித்தியாசம் காட்டி நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.,

தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என மாறுபட்ட நடிப்பை கொடுத்து விட வேண்டும் என்று கடைசிவரை போராடுகிறார்.

இந்த வெப் திரைப்படத்தில் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார்.

ஷில்பா மஞ்சுநாத் ஐடி பணிபுரியும் பெண்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்களோ அப்படி நடிப்பில் ரகளை செய்திருக்கிறார்.

சாஷ்வி பலா, சுபபிரியா மலர், அனன்யா மணி ஆகியோர் மிக அருமையாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சிறிது நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களில் உள்ளவர்கள் அனைவரும் பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிரிஷ்டோபர் ஜோசப் அவரின் பணியை சரியாக செய்துள்ளார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும்படி இருக்கிறது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பின்னணி இசையில் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

நாகரீகம் என்ற பெயரில் திசை மாறும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஹாரூன்.

நல்ல மெசஜை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஹாரூன்.

மொத்தத்தில், இந்த வெப் திரைப்படம் நாகரீகம் என்ற பெயரில் திசை மாறும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படம்.

CLOSE
CLOSE
error: Content is protected !!