குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3 / 5
நடிகர் & நடிகைகள் :- ஹிருது ஹாரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அருண் & அரவிந்த், சுப்புராயன், பெங்காலி, அண்ணாச்சி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிருந்தா.
ஒளிப்பதிவு :- பிரியேஷ் குருசாமி.
படத்தொகுப்பு :- பிரவீன் ஆண்டனி.
இசை :- சாம். சி. எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- HR பிச்சர்ஸ். ஜியோ ஸ்டுடியோ.
தயாரிப்பாளர்:- ரியா ஷிபு, மும்தாஸ் எம்.
ரேட்டிங் :- 3. / 5.
மலையாள திரைப்பட உலகில் 2018ஆம் ஆண்டு வருடம் வெளிவந்த ‘ஸ்வாதன்த்ரியம் அர்த்தராத்ரியில்’ என்ற திரைப்படத்தை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழல் வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ .
நடன இயக்குனர் பிருந்தா இயக்கவிருக்கும் இரண்டாவது திரைப்படம் இந்த ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’.
கதாநாயகன் ஹ்ரிது ஹாரூன் மீது பணத்தை திருடிவிட்டதாக சொல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்.
சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்த சிறையில் இருக்கும் கைதிகள் சிலர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயலும்போது கதாநாயகன் ஹ்ரிது ஹாரூன் தப்பிச் செல்லாமல் தடுத்து விடுகிறார்
இந்தநிலையில் காவல துறை அதிகாரிகளிடம் நல்ல மதிப்பு அதிகரிக்கவும் தப்பிச்செல்ல நினைத்த சிறை கைதிகளிடம் கோபத்துக்கு ஆளாகிறார்.
சிறைச்சாலையில் உள்ள தனது சிறையில் நடக்கும் சிம்ஹாவின் பிரச்சினையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டும், காவல் துறையினரின் நன்மதிப்பை பயன்படுத்திக் கொண்டு, சிறையிலிருந்து தப்பிச்செல்ல புது திட்டம் திட்டுகிறான் கதாநாயகன் ஹ்ரிது ஹாரூன்.
இறுதியில் சிறையிலிருந்து தப்பிச்செல்ல போட்ட திட்டம் நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? என்பதுதான் இநத குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஹ்ரிதுஹாரூன் அறிமுகமாகிறார்.
பல திரைப்படங்களில் நடித்து தேர்ச்சி பெற்ற நடிகர்கள் போல் கதாநாயகன் ஹ்ரிது ஹாரூன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இவரின் நடிப்பு புதுமுக நடிகர் போல் தெரியவில்லை
அந்த கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஹ்ரிது ஹாரூன் மிகவும் கச்சிமாக பொருந்தி இருக்கிறார்.
இநத குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரைப்படத்தில் அனஸ்வரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
கதாநாயகி அனஸ்வரா அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் அழகிலும் நடிப்பிலும் வந்து செல்கிறார்.
அப்படியான நடிகர் முதன்மை கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
சிம்ஹா கோபப்படும் காட்சி ஒன்றில் அவரது கன்னம் தனியே நடிக்கிறது.
மிகவும் கலரான காவல்துறை அதிகாரியாக ஆர்.கே.சுரேஷ் வழக்கமான தனது முரட்டுத் தனமான நடிப்பை பதியவைக்கிறார்.
முனிஷ்காந்த் கதாபாத்திரம் மெருகேற்றப்பட்டிருக்கிறது.
நகைச்சுவை கதாபாத்திர சாயலிருந்து விலகியதொரு முனீஷ்காந்த் கதாபாத்திரத்திம் ஈர்க்கிறார்.
சிறைக்கைதிகளா நடித்திருக்கும் அனைவரும் நடிப்பு இயல்பாக உள்ளது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம்.
அனைத்து காட்சிகளை ரம்மியமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி.
படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு கச்சிதம்.
சிறைச்சாலையை களமாக்கி அதிலிருந்து சிறைகைதிகள் தப்பிக்கும் திட்டத்தை திரைப்படமாக்கியிருக்கும் விதம் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லை.
காவல்துறையை சேர்ந்த அதிகமான காவலர்கள் உள்ள மிகப்பெரிய சிறை சாலையில் பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி தப்பித்தது எல்லாம் நம்பும் படியாக இல்லை.
ஒரு காவலர்கள் கூடவா தெரியாமல் போய்விடும் நம்பகத்தன்மையற்ற காட்சிகள் திரைப்படத்தை ரசிக்க வைக்கவில்லை.
மொத்தத்தில் குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரைப்படம் ஓகே ரகம்.