டைனோசர்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75./ 5.
நடிகர் & நடிகைகள் :- உதய் கார்த்திக், ரிஷி,மாரா, சாய் பிரியா தேவா, மானேக்ஷா, ஜானகி, அருண், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எம் ஆர் மாதவன்.
ஒளிப்பதிவு :- ஜோன்ஸ் வி ஆனந்த்.
படத்தொகுப்பு :- ஆர் கலைவாணன்.
இசை :- போபோ சசி.
தயாரிப்பு நிறுவனம்:- கேலக்ஸி பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்.
ரேட்டிங் :- 2.75./ 5.
தந்தை இல்லாத ரிஷி மற்றும் உதய் கார்த்திக் கணவரை இழந்த ஜானகிக்கு இருவரும் மகன்களாக இருக்கிறார்கள்.
கதாநாயகன் உதய கார்த்திக், ரிஷி ஆகியோர் அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள்.
தனது அண்ணன் ரிஷிக்கு மாறா என்ற பெரிய ரவுடி உயிர் நண்பனாக இருக்கிறார்.
ரிஷியின் உயிர் நண்பன் மாறா பிரபல ரெளடியான வில்லன் மானேக்ஷாவிடம் அடியாளாக இருந்து வந்தார்.
வில்லன் மனேக்ஷாவிடம் அடியாளாக இருக்கும் மாறா திருமணத்திற்குப் பிறகு திருந்தி வாழ்வதற்கு வில்லன் மானேக்ஷாவிடம் இருந்து வெளியே வர முடிவு செய்கிறார்.
ரெளடியாக இருந்தபோது செய்த ஒரு கொலைக்காக பல மாதங்கள் கழித்து மாறா மற்றும் அவரது ஆட்கள் எட்டு பேரை சரண்டர் ஆக கூறுகிறார் வில்லன் மானேக்ஷா.
தனது நண்பன் மாறாவிற்காக அந்த எட்டு பேருடன் ரிஷி அந்த கொலை பழியை எற்று கொண்டு ஜெயிலுக்குச் செல்கிறார்.
இது பிடிக்காத வில்லன் மனேக்ஷா திட்டம் போட்டு தனது எதிரியை வைத்து மாறாவை போட்டுத் தள்ளி திட்டம் தீட்டுகிறார்.
மாறாவால் படுகொலை செய்யப்பட்டவர் மனைவியின் சகோதரர் ஒரு ரெளடிதான் இவரிடம் சிக்கி மாறா படுகொலை செய்யப்படுகிறார்.
மாறாவின் படுகொலைக்கு எதிர்பாராத விதமாக ரவுடிசம் சுத்தமாக பிடிக்காத கதாநாயகன் உதய் கார்த்திக்கும் இந்த கொலைக்கு காரணமாகி விடுகிறார்.
மாறாவை படுகொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்கினார்களா? வாங்கவில்லையா? என்பதுதான் இந்த டைனோசர்ஸ்
திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த டைனோசர்ஸ் திரைப்படத்தில் உதய் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.
புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கும் உதய் கார்த்திக், மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
புதுமுக கதாநாயகன் உதய் கார்த்திக் அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அளவான நடிப்பை கொடுத்து நம்மை வெகுவாகவே கவர்ந்திருக்கிறார்.
புதுமுக நாயகன் உதய் கார்த்திக் மிக எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார்.
இந்த டைனோசர்ஸ் சாய் பிரியா தேவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
நடிகை சாய் ப்ரியா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு அழகாக வந்து ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார்.
கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அனைத்தையும் கனக்கச்சிதமாக கொண்டு வந்து நிவர்த்தி செய்திருக்கிறார்.
மாறாவிற்க்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக அருமையாக செய்து முடித்திருக்கிறார்.
அட்டு ரிஷி. முதல் காட்சியிலேயே தனது கையில் வைத்திருந்த கத்திரிகோலை பிடித்து பேசும் வசனம் சூப்பர்.
ரிஷி மற்றும் உதய் கார்த்திக் தாயாக நடித்திருக்கும் ஜானகி, மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் மானேக்ஷா இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையான தேர்வு.
வில்லனாக நடித்திருக்கும் மானேக்ஷா நடிப்பு இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் மானேக்ஷா தமிழ் திரைப்பட உலகிற்க்கு அருமையான வில்லன் கிடைத்துவிட்டார்.
மானேக்ஷா வில்லனாக மிக அருமையான மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவரும் இவர் கூட்டாளிகளும் மற்றும் எதிரி கேங்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜான் சீன் ஒளிப்பதிவில் லோக்கல் சென்னை அழகு சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் போபோ சசி இசையில் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளது.
வட சென்னையின் எதார்த்த முகங்களை அச்சுப் பிசகாமல் அப்படியே பதிவு செய்து இருக்கிறார் இயக்குநர் மாதவன்.
முதல் பாதியை எதார்த்த மனிதர்களோடு ஆரம்பித்து பின் சீரியஸ் கதைக்குள் பயணித்து அட்டகாசமான அதிரடி நிறைந்த இடைவேளை காட்சியோடு முடித்துள்ளார்.
மொத்தத்தில் டைனோசர்ஸ் திரைப்படம் வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறது.











