பகாசூரன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.25/5.

நடிகர் நடிகைகள் :- செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன் குணாநிதி, ராம்ஸ், சசி லையா ரிச்சா, கூல்ஜெயந்த், விஜய் கார்த்திக், அருணோதயன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மோகன்ஜி.

ஒளிப்பதிவு :- ஃபருக் ஜே பாட்ஷா.

படத்தொகுப்பு :- எஸ்.தேவராஜ்.

இசை :- சாம்.சி.எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- G.M. பிலிம் கார்ப்ரேஷன்.

தயாரிப்பாளர்:- G.M. பிலிம் கார்ப்ரேஷன்.

ரேட்டிங் :- 3.25 / 5.

பழைய வண்ணாரப்பேட்டை, திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர் மோகன்ஜி இயக்குனராக அறிமுகமானார்.

அதன்பின் திரெளபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களை இயக்குநர் மோகன்ஜி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இயக்குநர் மோகன்ஜியின் இயக்கத்தில் மற்றொரு திரைப்படமாக பகாசூரன் வெளி வந்திருக்கிறது.

ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நட்டி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி க்ரைம் சம்பவங்கள் குறித்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவருடைய சொந்த அண்ணன் மகள் ரம்யா திடீரென லிட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

வீட்டில் தன்னை தாய் தந்தை அனைவரும் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ரம்யா தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கேஸை முடித்து விடுகின்றனர்.

ரூத்ர தாண்டவம் திரை விமர்சனம். ரேட்டிங் –2.75 /5

 

தன் அண்ணன் மகள், ரம்யாவின் கைபேசி நடடியிடம் கிடைக்கிறது.

அநத கைபேசியில், ரம்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததையும், திருமணம் செய்து கொண்டாலும் இந்த தொழிலில் இருந்து நீ தப்ப முடியாது என யாரோ ஒருவர் ரமயாவை மிரட்டுவதையும் தெரிந்து கொள்கிறார் நட்டி.

ரம்யாவை மிரட்டிய அநத நபர் யார் என நட்டி தேட ஆரம்பிக்க, பண கஷ்டத்தில் இருக்கும் பல பெண்களை பணத்த ஆசையை காண்பித்து பலவந்தமாகவும் மிரட்டியும் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதையும், நட்டி அறிந்து கொள்கிறார்.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, தன் மகள் சாவுக்கு காரணமானவர்களையும் அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோரையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரையும் கல்லூரி ஒன்றின் ஆசிரியர், பெண் ஹாஸ்டல் பொறுப்பாளர் மற்றும் அதன் வாட்ச்மேன் ஆகிய மூன்று பேரையும் அடுத்தடுத்து மிக கொடூரமாக கொலை செய்கிறார் கதாநாயகன் செல்வராகவன்.

தன் அண்ணன் மகள் தற்கொலைக்கு காரணமானவனை கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
இந்த மூன்று கொலையும் செய்த குற்றவாளியை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த பகாசூரன் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த பகாசூரன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகன் செல்வராகவன் கிராமத்தில் கூத்து கட்டும் கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையாக பொருத்தமாக இருக்கிறார் .

எமோஷனல் காட்சிகளில் இவரின் நடிப்பு பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

தன்னுடைய கதாபாத்திரத்தை முழுமையாக ஏற்று நடித்து பாராட்டை பெறுகிறார்.

நட்டி நட்ராஜ் கொடுத்த வேலையை சிறப்பாகவும் அருமையாகவும் செய்துள்ளார்.

நட்டியின் தேர்ந்த நடிப்பும் கதாபாத்திரம் வலுசேர்க்கிறது.

கதையின் நாயகன் செல்வராகவனின் தந்தையாக தயாரிப்பாளர் கே.ராஜன் நடிப்பு அருமை.

கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஆக வரும் ராதாரவி, நடிப்பு சூப்பர்.

கதையின் நாயகன் செல்வராகவனின் மகளாக ரிச்சா நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

குணாநிதி ஏற்கனவே செல்ஃபி திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாரின் நண்பராக வந்து ரசிகர்களை நடிப்பினால் கலங்க வைத்தவர்

கதையின் நாயகன் செல்வராகவனின் மகளின் காதலனாக வரும் குணாநிதி அசால்டான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கதையின் நாயகன் செல்வராகவனிடம் மகளைப் பற்றி வீடியோவை காண்பித்து விஷயத்தை கூறும் போது கண்கலங்க வைத்து விட்டார் குணாநிதி.

இதைப் பற்றி நட்டியிடம் கூறும் போது கூட மொத்தத்தில் குணாநிதியின் நடிப்பு அருமை.

காவல்துறை ஆய்வாளராக வரும் வரும்தேவதர்ஷினி, பாலியல் தொழில் தரகர்களாக வரும் கூல் ஜெயந்த், ஹாஸ்டல் வார்டனாக சசி லயா வரும் ஹாஸ்டல் வாட்ச்மேன் ஆக வரும் ராம்ஸ் காவல்துறை அதிகாரியாக வரும் தேனப்பன் பெண்களை வைத்து சம்பாதிக்கும் கும்பலுக்கு தலைவனாக வரும் விஜய் கார்த்திக் அனைவரும் குறிப்பிட வேண்டிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் ‘அப்பப்பா’ பாடல் அதிர வைக்கிறது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவாளர் ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் திரைப்படத்தின் தரத்தினை உயர்த்தியுள்ளது.

இருவரது கதையும் வெவ்வேறு வகையில் பயணித்து ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைகிறார் இயக்குனர் மோகன் ஜி.

திரெளபதி திரை விமர்சனம். ரேட்டிங் – 3.5./5

ஆன்ட்ராய்டு மொபைலும், அதிலிருக்கும் டேட்டிங் ஆப்களும் ஆபத்தானவை’ என்பதைச் சொல்லி இளம் பிள்ளைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடவேண்டும் என்ற இயக்குநர் மோகன்.ஜியின் உன்னத முயற்சியை திரைப்படம் புரிய வைக்கிறது.

ஒரு திரைப்படமாக எப்படி இருக்கிறது என்று கேட்டால் முதல் பாதி ஓகே இரண்டாம் பாதி சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

இந்த திரைப்படத்தின நீளத்தை சற்று குறைத்து இருந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த பகாசூரன் திரைப்படம் பெண் குழந்தைகளை பெற்ற தாய் தகப்பனார் பார்க்க வேண்டிய திரைப்படம்.