‘இன்ஃபினிட்டி’ திரைவிமர்சனம் ரேட்டிங்:-1.5/5.
நடிகர் & நடிகைகள் :- நட்டி நடராஜன்,வித்யா பிரதீப், முனிஷ்காந்த், தா. முருகானந்தம், சார்லஸ் வினோத், வினோத் சாகர், நிகிதா, ஜீவா ரவி, மோனா பெத்ரே, ஆதவன், சிந்துஜா, கிருஷ்ணராஜு, பாலபாஸ்கரன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சாய் கார்த்திக்.
ஒளிப்பதிவு :- சரவணன் ஸ்ரீ.
படத்தொகுப்பு :- எஸ்.என்.ஃபாசில்.
இசை :- பாலசுப்ரமணியன்.ஜி.
தயாரிப்பு நிறுவனம் :- மென்பனி புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- வி.மணிகண்டன், யு.பிரபு, கே.அற்புதராஜன் & டி.பாலபாஸ்கரன்.
ரேட்டிங் :- 1.5/5.
சென்னை மாநகரத்தின் ஒரே நாளில் இரண்டு கொலைகள் நடக்கிறது.
இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அதை காவல் துறை துப்பு துலக்குவதற்கு முன் அடுத்தடுத்து சில முக்கிய பிரமுகர்களும் கொலை செய்யப்படுகின்றனர்.
அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளரும் கொலை செய்யப்படுகிறார்.
சி.பி.ஐ. அதிகாரியான நட்டி நட்ராஜிடம் அந்தக் கொலைகளைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
அவரும் கொலையாளியை பிடிக்க முடியாமல் சி.பி.ஐ. அதிகாரியான நட்டி நட்ராஜ் தடுமாறுகிறார்.
அது ஒரு புறம் இருக்க அரசு மருத்துவரான வித்யா பிரதீப் சிகிச்சை அளிக்கும் குழந்தைகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
இதனால் அவரையும் கண்காணிக்க ஆரம்பிக்கிறார் நட்டி நட்ராஜ்.
இறுதியில் கொலையாளியை நட்ராஜ் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? வித்யா பிரதீப்பை சுற்றி நடக்கும் மர்மம் என்ன? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
நட்டி நட்ராஜ் இந்த இன்ஃபினிட்டி’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சி.பி.ஐ. அதிகாரி கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் மிக கச்சிதமாக பொருந்துகிறார்.
நட்டி நட்ராஜுக்கு ஏற்ற மிடுக்கான துடிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். யூனிபார்ம் போடாமலேயே திரைப்படம் முழுக்க படு வேகமாக நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
குறிப்பாக அவர் அந்த வழக்கை அணுகும் விதமும் ஒவ்வொருவரிடமும் அவர் பேசும் விதமும் அந்த கதாபாத்திரத்தை இன்னும் செம்மைப்படுத்துகின்றது.
மொத்தத்தில் வழக்கமான வட்டி நடராஜாக இல்லாமல் கதாபாத்திரத்தை மிகவும் அபாரமாக நடித்துள்ளார்.
மருத்துவராக வரும் வித்யா பிரதீப் அழகாலும், அளவான நடிப்பை கொடுத்து மனதைத் தொடுகிறார்.
காவலர் கதாபாத்திரத்தில் முனீஸ்காந்த் சிரிக்க வைக்கிறார்.
நட்டி நட்ராஜின் நண்பராக வரும் முருகானந்தம், இளம்பெண்ணின் தந்தையாக வரும் ஜீவா ரவி, தாயாக வரும் மோனா பேடர், நிகிதா, ஆதவன், சிந்துஜா என அத்தனை கதாபாத்திரங்களும் அருமையான நடிப்பு மூலம் கவனிக்க வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு திரைப்படத்தின் தரத்தை முடிந்தளவுக்கு காப்பாற்றி இருக்கிறார்.
இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஜி இசையில் இரண்டு பாடல்களும் பின்னணி இசையிலும் கதையை நகர்த்த உதவுகிறது.
இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன்.ஜி கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், க்ரைம் த்ரில்லர் ஜானர் திரைப்படத்திற்கான எந்த ஒரு புதிய விஷயத்தையும் செய்யாமல் மிக எளிமையாக பணியாற்றியிருக்கிறார்.
சி.பி.ஐ. விசாரணைகள், கூடவே பயணிக்கும் குற்றவாளிகளின் கதை என க்ரைம் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாய் கார்த்திக்.
விசாரணை காட்சிகளையும், சிபிஐ அலுவலகம் மற்றும் அதனை சுற்றி நகரும் காட்சிகளை இயக்குநர் சாய் கார்த்திக் சிறுபிள்ளைத்தனமாக கையாண்டிருக்கிறார்.
மொத்தத்தில் இன்பினிட்டி திரைப்படம் அண்ணன் தங்கை உறவை கொச்சைப்படுத்தும் திரைப்படம்.











