கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்! வதந்திகளை பரப்பவும் வேண்டாம் நம்பவும் வேண்டாம் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!!
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்! வதந்திகளை பரப்பவும் வேண்டாம் நம்பவும் வேண்டாம் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!!
சென்னை 02 டிசம்பர் 2023 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நவம்பர் 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடைய உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது.
இன்று மாலை கூட ஏராளமான காவல்துறையினர் மருத்துவமனையை வளாகத்தை சுற்றி குவிக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியது.
இது அரசியல் வட்டாரத்திலும் திரையுலக வட்டாரத்திலும் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
வெகு விரைவில் கேப்டன் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார்.
நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் தயவுசெய்து வதந்திகளை பரப்பவும் வேண்டாம், வதந்திகளை நம்பவும் வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.











