கேப்டன் மில்லர் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25/5

நடிகர் & நடிகைகள் :- தனுஷ், ஷிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன், காளி வெங்கட், எட்வர்ட் சானென்ப்ளிக், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன், அதிதி பாலன், விஜி சந்திரசேகர், ஜெயபிரகாஷ், இளங்கோ குமாரவேல் போஸ் வெங்கட், மூர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அருண் மாதேஸ்வரன்.

ஒளிப்பதிவாளர் :- சித்தார்த்தா நுனி.

படத்தொகுப்பாளர் :- நாகூரான்.

இசையமைப்பாளர் :- G.V.பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- சத்யஜோதி ஃபிலிஸ்

தயாரிப்பாளர்கள் :- T.G. தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், G. சரவணன்,  சாய் சித்தார்த்.

ரேட்டிங் :- 3.25./ 5.

வசந்த ரவி நடிப்பில் ராக்கி, இயக்குனர் செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில்  சாணிக்காயிதம் என சில திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

தற்போது தனுஷுடன் கைகோர்த்து ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன்  இயக்கியிருக்கிறார்.

இந்தியா சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷ் ஆதிக்க இந்தியாவில் தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் வாழும் கதாநாயகன் தனுஷ்,  தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் தனுஷ்.

அந்த கிராமத்தில் உள்ளவர்கள் கோயிலுக்குள்ளேயே கிராம மக்களை அனுமதிக்காத அரசன்.

நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிமையாக ராஜாக்களும், இவர்களுக்கு அடிமையாக மக்களும் இருப்பதை விரும்பாமல்,

ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த கதாநாயகன் தனுஷ், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிமைத்தனமாக வாழ்வதை விட, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து மரியாதையாக வாழலாம் என்று நினைத்து ராணுவத்தில் சேருகிறார்.

ஒரு கட்டத்தில் கதாநாயகன் தனுஷ் சுதந்திரத்திற்காக போராடும் போராட்டகாரர்களை கிராமத்து மக்களையே ஆங்கிலேயர்களின் கட்டாயத்தின் பெயரில் சுட்டுக் கொல்லும் சூழ்நிலை உருவாகிறது.

அதன் பின்னர் நமது மக்களை நாமே சுட்டு கொன்று விட்டோமே என மனவேதனை பட்டு சுட சொன்னவரை சுட்டு கொலை செய்துவிட்டு கொள்ளை கூட்டத்தில் சேர்கிறார் கதாநாயகன் தனுஷ்.

கதாநாயகன் தனுஷ் பிடிக்க ஆங்கிலேயர்கள் தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், ஊர் கோயிலில் பழமையான பொக்கிஷத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எடுத்து சென்றுவிடுகிறார்கள்.

இதை பிரிட்டிஷ் அரசாங்கத்தை சேர்ந்தவர்களிடமிருந்து பழமை வாய்ந்த பொக்கிஷத்தை திருட அந்த ஊர் ராஜாவான  ஜெயபிரகாஷ் கதாநாயகன் தனுஷ் உதவியை நாடுகிறார்.

பொக்கிஷத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து திருடிய கதாநாயகன் தனுஷ், அதை ராஜாவிடம் கொடுக்காமல் பொக்கிஷத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிடுகிறார்.

இதனால் கோபமடையும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஊர் மக்களை சித்ரவதை செய்து கொல்கிறார்கள்.

இறுதியில் ஊர் மக்களை கதாநாயகன் தனுஷ் காப்பாற்றினாரா? மக்களை  காப்பாற்றவில்லையா என்பதுதான் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் தனுஷ், தான் சிறந்த நடிகர் என்பதை இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

கதாநாயகன் தனுஷ் தன் கிராமத்து மக்களுக்காக ஏங்குவது, மனம் வருந்துவது, போராடுவது என அனைத்திலும் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரிட்டிஷ் ராணுவத்தினால் சுதந்திர போராட்டகாரர்கள் சுடப்பட்ட பிறகு வருந்தும் காட்சியில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை நெகிழ வைத்து இருக்கிறார்.

கதாநாயகன் தனுஷ் மூத்த சகோதரராக நடித்திருக்கும் சிவராஜ் குமார் ஏற்கனவே ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், இந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஓரளவு நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிலும் அவர் உச்சகட்ட காட்சியில் கையில் ஆயுதத்தை எடுத்து வரும் காட்சிகள் மாஸ் மெகா மாஸ்.

கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் சந்தீப் கிஷன் இறுதிக்காட்சியில் தோன்றுவதும் அருமையாக இருக்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகனின் கையிலும் துப்பாக்கியை குறித்து ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வைத்திருப்பது பொருத்தமாகவே உள்ளது.

கதாநாயகி பிரியங்கா அருள் மோகன் டாக்டராகவும், பிற்பாதியில் தனுஷுக்கு உதவுபவராகவும் நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதிகிறார்.

காளி வெங்கட், குமரவேல் இருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வில்லன்களாக நடித்திருக்கும் ஜெய பிரகாஷ் மற்றும் ஜான் கொக்கன் இருவரின் வில்லத்தனத்தில் அருமையாக அசத்தியிருக்கிறார்கள்.

அப்துல் லீ, விஜி சந்திரசேகர், அருணோதயன், நிவேதிதா சதீஷ்,  என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஆக்‌ஷன் காட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிலும் ஒளிப்பதிவின் மூலம் அசத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும்  ரசிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின்
பின்னணி இசை மூலம் திரைப்படத்தின் வேகத்துக்கு ஏற்ப பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார்.

கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் முக்கியமான கதாநாயகன் என்றே ஜிவி பிரகாஷை குமாரை சொல்லலாம்.

இந்தியாவில் அமைதியான முறையில் நடந்த சுதந்திர போராட்டத்தின் போது ஆயுதம் ஏந்தி போராடிய போராட்டக்காரர்களை பற்றியும், அவர்களின் வாழ்வியல் பற்றியும் அவர்கள் தொடர்புடைய இயக்கங்கள் பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மிகப்பெரிய பாராட்டுக்கள்.

தனது முந்தைய  திரைப்படமான ராக்கி மற்றும் சாணிக்காகிதம் ஆகிய இரண்டு திரைப்படங்களை போல் இதையும் ஒரு ஆக்ஷன் படைப்பாக, சமகால அரசியல்,  சமூக நிகழ்வுகள் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

மொத்தத்தில் – கேப்டன் மில்லர் திரைப்படம் அடிமைகளை காப்பாற்றும் அரசன் இந்த ’கேப்டன் மில்லர்’ நிச்சயம் ரசிகர்களை மனதில் கண்டிப்பாக பதியும்.

error: Content is protected !!