ஆகஸ்ட் 16 1947 திரைவிமர்சனம் ரேட்டிங்:- 4.25./5.

நடிகர் & நடிகைகள் :- கெளதம் கார்த்திக், ரேவதி ஷர்மா, புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேசன் ஷா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- N.S. பொன்குமார்.

ஒளிப்பதிவு :- செல்வகுமார் எஸ்.கே.

படத்தொகுப்பு :-  ஆர்.சுதர்சன்.

இசை :- ஷான் ரோல்டன்.

தயாரிப்பு நிறுவனம் :- ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ். பர்பிள் புல் என்டர்டெயின்மென்ட். காட் பிளஸ் என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- ஏ.ஆர். முருகதாஸ். ஓம் பிரகாஷ் பட். நர்சிராம் செளத்ரி.

ரேட்டிங் :- 4.25 / 5.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி, அந்தக் காலகட்டங்களில் கம்மியான திரைப்படங்கள் மட்டுமே வந்திருக்கிறது.

அவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையில் உள்ள திரைப்படங்கள்தான் அதிகமாக வந்திருக்கிறது.

ஆனால் இநத ஆகஸ்ட் 16, 1947 நிரைப்படத்தை கற்பனையான ஒரு கதையை வைத்து அருமையான திரைக்கதை அமைத்து திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்.எஸ்.பொன்குமார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் அடுத்துள்ள செங்காடு எனும் கிராமத்தில் மட்டும் உயர்தரப் பருத்தி கிடைக்கிறது.

பருத்தி நூல் உற்பத்தி செய்யும் வேலையை பிரதான தொழிலாக கிராமத்தில் உள்ள மக்கள் செய்து வருகின்றனர்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் செங்காடு கிராம மக்களின் உழைப்பை பிரிட்டிஷ் அதிகாரி ரிச்சர்ட் ஆஷ்டன் அதிக அளவில் சுரண்டி அவர்களை அடிமைகளாக நடத்துகின்றனர்.

பிரிட்டிஷ் அதிகாரி ரிச்சர்ட் ஆஷ்டன் கிராமத்தில் உள்ள மக்களிடம் தினமும் 16 மணிநேரம் வேலைஸவாங்கி பருத்தி வியாபாரத்தில் பெரும் லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறார்.

பிரிட்டிஷ் அதிகாரி ரிச்சர்ட் ஆஷ்டன் செங்காடு கிராமத்தில் உள்ள மக்களை வேலை நேரத்தைவிட அதிக நேரம் அவர்களின் உழைப்பை வாங்கிக் கொண்டு சுய லாபத்திற்காக மக்களை கொடுமை படுத்துகிறார்.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க போகும் விஷயம் செங்காடு கிராம மக்களுக்கு தெரியாத அளவுக்கு மக்களை அடிமையாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

அது ஒருபுறம் இருக்க பிரிட்டிஷ் அதிகாரி ரிச்சர்ட் ஆஷ்டன் மகன் அந்த ஊரில் சிறுவயதில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறான்.

பிரிட்டிஷ் அதிகாரி ரிச்சர்ட் ஆஷ்டன் மகனிடம் இருந்து கிராமத்தில் உள்ள இளம் பெண்களை பாதுகாப்பதே ஊர் மக்களுக்கு பெரிய வேலையாகவும் இருக்கிறது.

தங்களின் பெண் பிள்ளைகளை இறந்துவிட்டதாக கூறியும் ஆண் வேடத்திலும் பெண் குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வருகின்றனர்.

அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் திருடனாக நினைத்திருக்கும் கதாநாயகன் கவுதம் கார்த்திக், அந்த ஊர் தலைவரின் மகளை சிறுவயதிலிருந்தே ஒருதலையாக காதலித்து வருகிறார்.

கதாநாயகன் கவுதம் கார்த்திக் காதலிக்கும் பெண்ணிடம் பிரிட்டிஷ் அதிகாரி ரிச்சர்ட் ஆஷ்டன் மகன் தவறாக நடக்க முயற்சிக்கிறார்.

இறுதியில் பிரிட்டிஷ் அதிகாரி ரிச்சர்ட் ஆஷ்டன் மகனிடம் இருந்து தான் காதலிக்கும் பெண்னை கதாநாயகன் கவுதம் கார்த்திக் காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா! அடிமைகளாக இருக்கும் கிராமத்தில் உள்ள மக்களை மீட்டாரா? மிட்கவில்லையா? என்பதுதான் இந்த ஆகஸ்ட் 16, 1947 திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஆகஸ்ட் 16, 1947 திரைப்படத்தில் கவுதம் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

காதல், கோபம், உற்சாகம் என அனைத்து உணர்வுகளை சரியாக வெளி காண்பித்து கைத்தட்டல் பெறுகிறார்.

இந்த திரைப்படத்தில் மிக அருமையான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கதாநாயகன் கவுதம் கார்த்திக்கு இந்த திரைப்படம் அவரின் திரையுலக பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது.

அறிமுக கதாநாயகி ரேவதி ஷர்மா அவருடைய பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

அறிமுக கதாநாயகி ரேவதி ஷர்மா காதல் காட்சிகளில் கூடுதல் கைத்தட்டல் பெறுகிறார்.

இந்த திரைப்படத்தில் புகழின் கதாபாத்திரம் மிகவும் அருமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புகழின் வசன உச்சரிப்பு உடல் மொழி அனைத்தையும் சரியாக கொடுத்துள்ளார்.

புகழின் நடிப்பு தமிழ் திரைப்பட உலகில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பது உறுதி.

திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களின் தேர்வு மிக்ச்சிறப்பு.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்கே அருமையான ஒளிப்பதிவு மூலம் காட்சிகளின் அந்த வாழ்வியலுக்கு கொண்டு சென்றுவிட்டார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் மட்டும் மனதில் நிற்கும் படி இல்லை என்பது வருத்தமாக உள்ளது.

கிராமத்தில் நடக்கும் கதையை சுவாரசியமான திரைக்கதையை அமைத்து இயக்குனர் என்.எஸ்.பொன்குமார்
கவனிக்க வைத்துள்ளார்.

1947 சுதந்திரத்திற்கு முன்பு காலகட்டத்தில் நடந்த மக்களின் அடிமைத்தனத்தை காதல் கலந்த அருமையான திரைப்படமாக கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் என்.எஸ்.பொன்குமார்.

கதாநாயகன் கவுதம் கார்த்தி அடிமைத்தனத்திலிருந்து அந்த கிராமத்தில் உள்ள மக்களை மீட்க போராடும் இடங்களில் வரும் வசனங்களில் இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் கைத்தட்டல் பெறுகிறார்.

மொத்தத்தில் ஆகஸ்ட் 16, 1947 – திரைப்படம் தமிழ் திரைப்பட உலகின் பொக்கிஷம்.