மெரி கிறிஸ்மஸ் திரைவிமர்சனம் ரேட்டிங்:-3./5.

நடிகர் & நடிகைகள் :- விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், கவின் பாபு, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், ராதிகா ஆப்தே, ராஜேஷ், பரி மகேஷ்வரி ஷர்மா, அஷ்வினி கால்சேகர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஸ்ரீராம் ராகவன்.

ஒளிப்பதிவாளர்கள் :- மது நீலகண்டன் (ISC).

படத்தொகுப்பாளர் :- பூஜா லதா சுர்தி.

இசையமைப்பாளர் :- ப்ரீத்தம் – டேனியல் B ஜார்ஜ்.

தயாரிப்பு நிறுவனம்:- டிஐபிஎஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் & மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர்கள் :-  ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜயா தௌராணி, கேவல் கர்க்.

ரேட்டிங் :- 3./ 5.

திரைப்படத்துறையில் ஜெயிக்க வேண்டுமென்றால் கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் மிகப்பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி.

இவருடைய நடிப்புத் திறமையாலும் இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘மெரி கிறிஸ்துமஸ்’.

இந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.

இந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 2024 ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளி வருகிறது.

துபாயில் பணிபுரிந்து விட்டு கதாநாயகன் விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு பின் மும்பையில் உள்ள தன் வீட்டிற்கு வருகிறார்.

மறுநாள் காலை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் ஊரே கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் மிக விமர்சியாக கொண்டாடி கொண்டிருக்க, கதாநாயகன் விஜய் சேதுபதி ஒரு உணவகத்துக்கு செல்கிறார்.

அந்த உணவகத்தில் கதாநாயகி கத்ரினா கைஃப் மற்றும் தன் மகளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.

கதாநாயகன் விஜய் சேதுபதி, கதாநாயகி கத்ரினா கைஃப்பை சந்தித்ததும், அவர் செல்லும் பல இடங்களுக்கு பின் தொடர்ந்து செல்கிறார்.

ஒரு கட்டத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதி கதாநாயகி கத்ரினா கைஃப் அறிமுகம் இல்லாத இருவரும், ஒன்றாக பயணிக்கிறார்கள்.

தங்களது வாழ்க்கைப் பற்றி கூறும்போது கதாநாயகி கத்ரினா கைஃப் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக வாழ்வதை சொல்ல, கதாநாயகன் விஜய் சேதுபதி தனது காதலியை விட்டு பிரிந்ததை பற்றி கூறுகிறார்.

இதற்கிடையே, கதாநாயகி கத்ரினா கைஃப் தன் மகளை தூங்க வைத்துவிட்டு, கதாநாயகன் விஜய் சேதுபதியுடன் மீண்டும் தனது வாட்ச் தொலைந்து விட்டது என கூறி மீண்டும் வெளியை சென்றுவிட்டு, வீடு திரும்பும் போது கதாநாயகி கத்ரினா கைஃபின் கணவர் தன் கை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடக்கிறார்.

இந்த நிலையில் கதாநாயகி கத்ரினா கைஃப் கணவர் எப்படி இறந்தார் யார் கொன்றார்கள் கதாநாயகி கத்ரினா கைஃப் கணவர் கொலையை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த “மெரி கிறிஸ்மஸ்” திரைப்படத்தின் மீதி கதை.

இந்த மெரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

ஆல்பர்ட் ஆரோக்கியசாமி என்ற கதாபத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனம் ஈர்க்கிறார்.

எந்த ஒரு காட்சிகளிலும் ஓவராக நடிப்பை வெளிக்காட்டாமல் மிக சர்வ சாதாரணமாக அசால்டாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தன கதாபாத்திரத்தை கண்களின் மூலமாகவே, சோகம் பதற்றம், பயம், காதல் என இறுதிக்கட்ட காட்சிகளில் கூட பல உணர்வுகளை வெளிக்காட்டி நடிப்பின் மூலம் அருமையாக அசத்தியிருக்கிறார்.

இறுதி கட்ட காவல் நிலையத்தில் நடக்கும் காட்சியில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புரிந்துக்கொண்டு அவர் எடுக்கும் முடிவும், அந்த காட்சியில் அவர் நடித்த விதமும் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடையே கைதட்டல் அதிர வைக்கிறது.

இந்த இந்த மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக கத்ரினா கைஃப் நடித்துள்ளார்

கதாநாயகியாக நடித்திருக்கும் கத்ரினா கைஃப் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கவின் பாபு, காவல்துறையை சேர்ந்த காவலராக வரும் ராதிகா சரத்குமார், காவல்துறை அதிகாரியாக வரும் சண்முகராஜா, கதாநாயகன் விஜய் சேதுபதியின் முன்னாள் காதலியாக வரும் ராதிகா ஆப்தே, ராஜேஷ், குழந்தை நட்சத்திரம் பரி மகேஷ்வரி ஷர்மா, அஷ்வினி கால்சேகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பவர்கள் நடித்த காட்சிகள் குறைவு என்றாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ஓவியம் வரைந்தது போல் உள்ளது.

இரவு நேரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதாலும் , சிவப்பு வண்ண சீரியல் விளக்கு ஒளியாலும் காட்சிகளை அலங்கரித்து ஒளிப்பதிவு மூலம் அழகு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையில், யுகபாரதியின் பாடல் வரிகளில் அனைத்தும் அருமையாக உள்ளது.

இசையமைப்பாளர் டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் வழக்கமான பாணியிலான திரைப்படமாக இல்லாமல் பேண்டஸி பாணியில் கதையும், காட்சிகளும் அமைந்திருப்பது அருமையாக உள்ளது.

மொத்தத்தில், ‘மெறி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் இதுவரை நாம் பார்த்திராத ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

error: Content is protected !!