பழம்பெரும் நடக நடிகர் “அடடே மனோகர்” காலமானார் !
பழம்பெரும் நடக நடிகர் “அடடே மனோகர்” காலமானார் !
சென்னை 28 பிப்ரவரி 2024 கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அடடே மனோகர் இன்று காலமானார்.
அவருடைய தற்போது வயது
இதையடுத்து மனோகர் உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அடடே மனோகர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்தனர்.
ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றியவாறே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இதுவரை மேடையேறியது 3500 முறைக்கும் மேல். அவற்றில், இவரே எழுதி, இயக்கி, நடித்தவை 6 – ஒவ்வொன்றும் 50 லிருந்து 70 முறை மேடையேறியவை.
நகைச்சுவை மேலோங்கி நிற்கும் பாத்திரங்களே இவர் விரும்பி ஏற்பது. மேடையிலேயே நேரடியாய் பாடி நடிப்பது இவரது தனிச்சிறப்பு.
பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் நடித்துமுள்ள இவர் இதுவரை கிட்டதட்ட 15 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்;
அவற்றில் இவரே எழுதி, இயக்கியவை முன்று அவற்றிலும் இவருக்கு ‘அடடே மனோகர்’ என்ற செல்லப் பெயரை வாங்கித் தந்தது இவருடைய சிறந்த படைப்பான- தமிழ் பேசும் அனைவரையும் 1986 மற்றும் 1993ல் வாய்விட்டு சிரிக்க வைத்த – ‘அடடே மனோகர்’ தொடர்.
சுமார் 25 திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.
ஒன்பது வருடங்களுக்கு முன் 12 வருடங்களுக்கு முன்பு மனைவி இழந்த இவருக்கு மூன்று பிள்ளைகள். தன் 86 வயதான தாயாருடன் இவர் தனியே வசித்து வந்தார்.











