ஆட்சியில் இருக்கும் அதிகார திமிரில் ஆடுறாங்க’ “ரத்னம்” படத்திற்கு நடிகர் விஷாலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு!!

ஆட்சியில் இருக்கும் அதிகார திமிரில் ஆடுறாங்க’ “ரத்னம்” படத்திற்கு நடிகர் விஷாலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு!!

சென்னை 26 ஏப்ரல் 2024 நடிகர் விஷால் நடிப்பில் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள ரத்னம் திரைப்படத்திறஞ  கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவருக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “ரத்னம்”.

இயக்குனர் ஹரி இயக்கியிருக்கும் இந்த ரத்னம் திரைப்படத்தில்  விஷால், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த ரத்தினம் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

நடிகர் விஷால் நடிப்பில் ரத்னம் திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இயக்குநர் ஹரியும், விஷாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களை சந்தித்து ரத்னம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மிக மும்மரமாக ஈடுபட்டனர்.

தாமிரபரணி மற்றும் பூஜை திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷாலை வைத்து  இயக்குனர் ஹரி, இணைந்து
3வது முறையாக ரத்னம் திரைப்படத்தை இயக்கியுள்ளதால் மிகப்பெரும் அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்றைய தினம் நடிகர் விஷால் பற்றிய ஆடியோ பதிவு ஒன்று வெளியானது.

அதில் தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் திரைப்படத்தை வெளியிடுவதில்  கட்டப்பஞ்சாயத்து நடைபெறுவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்கே அவமானம் என்றும், முன்னாள் தயாரிப்பாளரின் மகன் என்ற முறையில் இதனை சொல்வதாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் ரத்னம் திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆனால் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் முதல் காட்சி சிறப்பு காட்சியாக காலை 9 மணிக்கு திரையிடப்படும்.

ஆனால் இந்த ரத்னம் திரைப்படம் சென்னையில் 10 மணிக்கு முதல் காட்சியும், மற்ற ஊர்களில் 11 மணிக்கு தான் திரையிடப்படவும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் சில நாட்கள் முன்பு நேர்காணல் ஒன்றில் நடிகர் விஷால் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட்  நிறுவனத்தை கடுமையாக விமர்சித்தது தான் என நடிகர் விஷாலின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சில தினங்களில் நடிகர் விஷால் அவர்களின் ‘ரத்னம்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வெளியிட விடாமல் ஏன் தடுக்க வேண்டும்? அரசியலுக்கு வருவேன் என்றால் இதுதான் கதியா?

இதுபோன்ற நெருக்கடிகளால் தமிழ் சினிமா மெல்ல மெல்ல தன் இயல்பை இழந்து வருகிறது!

இன்று விஷால் படத்திற்கு என்றால் நாளை தம்பி விஜய் படத்திற்கும் இது தான்! தமிழ் சினிமாவிற்கும் இது தான்! அந்த ஒருவர் நினைக்கும் படம் மட்டும் தான் தமிழ் சினிமாவில் திரையிடப்பட வேண்டும் என்று அதிகார திமிரில் ஆடுகின்றனர்” என கடுமையாக விமர்சித்து நடிகர் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!