ரத்னம் திரைவிமர்சனம்
|
நடிகர் & நடிகைகள் :- விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, விஜய குமார், டெல்லி கணேஷ், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், ஜெயபிரகாஷ், முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார், “நான் கடவுள்” ராஜேந்திரன்- கஜராஜ், VTV கணேஷ், ஒய்.ஜி. மகேந்திரன், மோகன்ராம், சி.ரங்கநாதன், கணேஷ் வெங்கட்ராம், ‘கும்கி’ அஸ்வின், அஞ்சலி தேவி, துளசி, மற்றும் பலர். எழுத்து & இயக்கம் :- ஹரி. ஒளிப்பதிவாளர் :- M. சுகுமார். படத்தொகுப்பாளர் :- T.S. ஜெய். இசையமைப்பாளர் :- தேவி ஶ்ரீ பிரசாத். தயாரிப்பு நிறுவனம்:- ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்டுடியோஸ் & இன்வெனியோ ஆரிஜின். தயாரிப்பாளர்கள்:- கார்த்திகேயன் சந்தானம், அலங்கார் பாண்டியன், |
சிறு வயதிலேயே அப்பா அம்மாவை இழந்த அனாதையாக இருக்கும் கதாநாயகன் விஷால், வேலூர் பகுதியில் உள்ள மார்கெட்டில் தாதாவாக இருக்கும் சமுத்திரகனியின் ஒரு பிரச்சனையில் உயிரை காப்பாற்ற அதன் பிறகு சிறை சாலையில் சென்று தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வரும் கதாநாயகன் விஷால் தாதாவாக இருக்கும் சமுத்திரகனியன் ஆதரவில் வளர்கிறார்.
வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனி சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கடையை பார்த்துக் கொள்ளவும் கதாநாயகன் விஷால் செய்து வருகிறார்.
இதற்கிடையே வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் கதாநாயகி பிரியா பவானி சங்கரை முதல் முறையாக பார்த்தவுடன் கதாநாயகன் விஷால் பின் தொடர்கிறார்.
அப்போது ஒரு கும்பல் தேர்வு எழுத செல்லும் நேரத்தில் கதாநாயகி பிரியா பவானி சங்கரை அந்த கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது.
அந்த கொலை செய்ய வந்த கும்பலிடம் இருந்து கதாநாயகி பிரியா பவானி சங்கரை கதாநாயகன் விஷால் காப்பாற்றுகிறார்.
தொடர்ந்து கதாநாயகி பிரியா பவானி சங்கருக்கு அந்த கும்பல் மூலம் பிரச்சனை வருகிறது.
கதாநாயகி பிரியா பவானி சங்கரின் பிரச்சனையை கதாநாயகன் விஷால் தனது பிரச்சனையாக கையில் எடுத்து, எதிரிகளை வீழ்த்த கிளம்புகிறார்.
இறுதியில் கதாநாயகி பிரியா பவானி சங்கரை கொலை செய்ய வந்த அந்த மர்ம கும்பல் யார்? கதாநாயகி பிரியா பவானி சங்கரை
துரத்த காரணம் என்ன? கதாநாயகி பிரியா பவானி சங்கரை கதாநாயகன் விஷால் காப்பாற்றுவதற்கான காரணம் என்ன? என்பதுதான் இந்த “ரத்னம்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ரத்னம் திரைப்படத்தில் கதாநாயகனாக விஷால் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஷால், சென்டிமென்ட், ஆக்ஷன், பாசம் கோபம் என நடிப்பில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிங்கிள் ஷாட் ஆக்க்ஷன் காட்சியில் மிகச்சிறப்பாக கதாநாயகன் விஷால் நடித்து இருக்கிறார்.
கதாநாயகன் விஷால் முழு திரைப்படத்தையும் தனது தோள் மீது சுமந்திருக்கிறார்.
கதாநாயகன் விஷால் ஒவ்வொரு காட்சிகளிலும் புயலை விட வேகமாக பயணித்திருக்கிறார்.
கதாநாயகன் விஷால் கடுமையாக உழைத்திருப்பது அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.
இந்த ரத்னம் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கருக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்து இருக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கதாநாயகி பிரியா பவானி சங்கர் கதாநாயகன் விஷால் மீது அக்கறை காட்டும் காட்சிகளில் கவனிக்க வைத்துவிட்டார்.
தாதாவாகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நடித்திருக்கும் சமுத்திரகனியின் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
இயஙகவுதம் வாசுதேவ் மேனன் ஒரு சில காட்சிகளில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் .
யோகி பாபு ஒரு சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.
அவரை தொடர்ந்து வரும் மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் போன்றவர்களின் நகைச்சுவை என்ற பெயரில் கடுப்பேற்றுகிறது.
முரளி சர்மா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
இவருக்கு உறுதுணையாக வரும் ஹரிஷ் பெரடி, முத்துகுமார் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
விஜய குமார், டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், கஜராஜ், VTV கணேஷ், ஒய்.ஜி. மகேந்திரன், மோகன்ராம், சி.ரங்கநாதன், கணேஷ் வெங்கட்ராம், ‘கும்கி’ அஸ்வின், அஞ்சலி தேவி, துளசி, உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஒளிப்பதிவு மூலம் ஆக்ஷன் காட்சிகளை ஆக்ரோஷமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
திரைப்படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் வருவதால், ஒன்றை மட்டும் ஒரே ஷாட்டில் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு அதன் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி விட்டார்கள்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
இயக்குநர் ஹரி தனது வழக்கமான பாணியிலான கதையை, அதே வழக்கமான கமர்ஷியலோடும், வேகத்தோடும் சொல்லியிருந்தாலும், கதாநாயகன் மற்றும் கதாநாயகி இடையில் வித்தியாசமான திருப்பத்தை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, தாய் செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தையும் அளவாக கையாண்டு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் திரைப்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஹரி.
மொத்தத்தில், இந்த ‘ரத்னம்’ திரைப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.
ரேட்டிங் :- 3.5/5












