“ரத்னம்” திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளில் வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளம்பி வருகிறது குஷியில் நடிகர் விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்!
“ரத்னம்” திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளில் வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளம்பி வருகிறது குஷியில் நடிகர் விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்!
சென்னை 27 ஏப்ரல் 2024 தமிழ் திரைப்பட உலகில் முண்ணனி நடிகராக நடிகர் விஷால் வலம் வருகிறார்.
இந்த “ரத்னம்” திரைப்படத்தை ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக இணைந்து, அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் இணைந்து பணியாற்றிய தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய திரைப்படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆக அமைந்தது.
அதன் பின் நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் இணைந்து ‘ரத்னம்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளதால் நடிகர் விஷால் ரசிகர்கள் மத்தியில் ரத்னம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புக்குள் ஆகி உள்ளது.
உலகம் முழுவதும் ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி அன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த ரத்னம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து மக்களும் கொண்டாடும் வகையில் இருப்பதாக திரைப்படம் பார்த்தவர்கள் அனைவரும் கொண்டாடிய வருகின்றனர்.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து ஊர்களிலும் இந்த ரத்னம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அந்த வரிசையில் ரத்னம் திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரியும் என தெரிவிக்கின்றனர்.
நடகர் விஷாலின் திரைப்பயணத்தை ரத்னம் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.











