’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மாறன், ரெடின் கிங்ஸ்லி மொட்டை ராஜேந்திரன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.பிரேம் ஆனந்த்.
ஒளிப்பதிவாளர் :- தீபக் குமார் பதி.
படத்தொகுப்பாளர் :- பரத் விக்ரமன்.
இசையமைப்பாளர் :- ஆப்ரோ.
தயாரிப்பு நிறுவனம்:- தி ஷோ பீப்பிள், நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்.
தயாரிப்பாளர் :- ஆர்யா,
ரேட்டிங் :- 2.5./5.
திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை கிஸ்ஸா 47 என்ற பெயரில் யூடியுப் மூலம் விமர்சனம் செய்யும் திரைப்பட விமர்சகராக இருக்கும் கதாநாயகன் சந்தானத்திற்கு ஒரு தமிழ் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு உங்களது குடும்பத்துடன் வரவேண்டும் என கதாநாயகன் சந்தானத்திற்கு அழைப்பு வருகிறது.
அந்த சிறப்புக் காட்சிக்கு அழைப்பின் பேரில் கதாநாயகன் சந்தானத்தின் குடும்பம் அப்பா நிழல் ரவி, தங்கை யாஷிகா ஆனந்த், அம்மா கஸ்தூரி குடும்பமாக அந்த திரையரங்கத்திற்கு சிறப்பு காட்சி காண்பதற்காக செல்கிறார்கள்.
அந்த சிறப்பு காட்சி நடக்கும் திரையரங்கில் ஆபத்து இருப்பதை உணர்ந்த கதாநாயகன் சந்தானம் அப்பா நிழல் ரவி, தங்கை யாஷிகா ஆனந்த், அம்மா கஸ்தூரி தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கதாநாயகன் சந்தானம் அந்த திரையரங்குக்கு செல்கிறார்.
அந்த திரையரங்கில் திரையிடப்படும் சிறப்பு காட்சியில் கதாநாயகன் சந்தானம் அப்பா நிழல் ரவி, தங்கை யாஷிகா ஆனந்த், அம்மா கஸ்தூரி குடும்பமும், அந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி இந்த திரைப்படத்தின் கதைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும், திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை தெரிந்து கொள்ளும் கதாநாயகன் சந்தானம், அந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? கதாநாயகன் சந்தானம் தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா?, என்பதுதான் இந்த ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தனம் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சந்தானம் தன்னுடைய உருவம் சிகை அலங்காரம் உடை நடை பேச்சு ஆகியவற்றில் மாற்றம் செய்திருக்கும் கதாநாயகன் சந்தானம் நடிப்பில் எந்தவித மாற்றத்தையும் காட்டாமல் தனது வழக்கமான பாணியில் தன்னுடைய அணியினருடன் சேர்ந்து, வழக்கமான காமெடிகளை கொடுத்து திரைப்படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்.
தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு இடம் கொடுத்து நடிப்பதற்கான வாய்ப்பையும் கொடுத்து பார்வையாளர்களை சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
இந்த ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் கதாநாயகியாக கீதிகா திவாரி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கீதிகா திவாரி கதாநாயகி மட்டுமின்றி பேயாகவும் நடித்திருக்கும் கீதிகா திவாரியின் கதாபாத்திரம் பெயருக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
புதியதாக கதாநாயகன் சந்தானம் கூட்டணியில் இணைந்திருக்கும் இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
கதாநாயகன் சந்தானத்தின் தந்தையாக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, தாயாக நடித்திருக்கும் கஸ்தூரி, தந்தையாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் காமெடி கூட்டணி மற்றும் மொட்டை ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி என பழைய காமெடி கூட்டணியும் சேர்ந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறார்கள்.
ஆனால், இந்தக் கூட்டணியில் முயற்சி முழுவதுமாக வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவு மூலம் அனைத்து காட்சிகளை கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருந்தாலும், திரைப்பட ரசிகர்களை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை.
காமெடி கதையாக இருந்தாலும், திரைப்படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் கதாநாயகன், என்ற பாணியில் புத்திசாலித்தனமான யோசனைகள் மூலம் திரைப்படத்தை சுவாரஸ்யமாகும் மிக அருமையாக இருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த்.
மொத்தத்தில், ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ சிரிக்கும் அளவிற்கு எந்த ஒரு காமெடி காட்சிகளில் இல்லை.











