டபுள் டக்கர் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனீஸ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மீரா மகாதி.
ஒளிப்பதிவாளர் :- கௌதம் ராஜேந்திரன்.
படத்தொகுப்பாளர் :- வெற்றிவேல் ஏ.எஸ்.
இசையமைப்பாளர் :- வித்யா சாகர்.
தயாரிப்பு நிறுவனம்:- ஏர் ஃபிளிக்.
தயாரிப்பாளர் :- ஏர் ஃபிளிக்.
கதாநாயகன் தீரஜ் சிறுவயதிலேயே தனது தாய் தந்தையை மிகப்பெரிய விபத்தில் இழந்து அந்த விபத்தின் போது கதாநாயகன் தீரஜின் முகத்தில் தீ காயங்களுடன் உயிர் தப்பிக்கிறார்.
கதாநாயகன் தீரஜின் முகத்தில் தீ காயம் இருப்பதால் முகத்தை யாருக்குமே காட்டாமல் இருந்து வருகிறார்.
பிரபல தாதாவான மன்சூர் அலிகான் மகள் கதாநாயகி ஸ்மிருதி வெங்கட்டை கதாநாயகன் தீரஜ் ஒரு தலை ராகம் காதலித்து வருகிறார்.
கதாநாயகன் தீர்ஜின் காதலை கதாநாயகி ஸ்மிருதி வெங்கட், காதலை ஏற்க மறுக்கிறார்.
கதாநாயகி ஸ்மிருதி வெங்கட், காதலை ஏற்க மறுத்ததால் கதாநாயகன் தீரஜ் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.
அவர் தற்கொலை முயற்சியில் உயிர் பிரிவதற்கு முன்பு ரைட் லெப்ட் என்னும் இரண்டு தேவதைகள் கதாநாயகன் தீரஜ் இறந்து விட்டதாக நினைத்து உயிரை எடுத்து விடுகிறார்கள்.
கதாநாயகன் தீரஜ் ரைட், லெப்ட் தேவதைகளிடம் எனது உயிரே எதற்காக எடுத்தீர்கள் என்று சண்டை போடும் நேரத்தில், கதாநாயகன் தீரஜ் இறந்த உடல் காணாமல் போகிறது.
தற்காலிமாக மருத்துவமனையில் பிணவறையில் இருக்கும் வேறொரு உடலுக்குள் கதாநாயகன் தீரஜ் ஆத்மா புகுந்துக்கொள்ள காணாமல் போன கதாநாயகன் தீரஜ் உடலை தேடுகிறார்கள்.
இறுதியில் கதாநாயகன் தீரஜின் உடல் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? கதாநாயகன் தீரஜ் சடலத்தை திருடியவர்கள் யார்? கதாநாயகன் தீரஜ், கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் காதல் கைக்கூடியதா? காதல் கை கூட வில்லையா? என்பதுதான் இந்த டபுள் டக்கர் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த டபுள் டக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நீரஜ் நடித்திருக்கிறார்.
இந்த டபுள் டக்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் தீரஜ், இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.
முகத்தில் தீ காயத்துடன் உள்ள கதாநாயகன் தீரஜ் பரிதாபத்தையும், மற்றொரு கதாநாயகன் தீரஜ் துறுதுறுவான நடிப்பையும் வெளிப்படுத்தி மிக அருமையாக நடித்திருக்கிறார்.
குறிப்பாக கதாநாயகன் தீரஜ் காதல், காமெடி காட்சிகளில் அவருடைய நடிப்பின் மூலம் கவனிக்க வைத்து இருக்கிறார்.
இந்த டபுள் டக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ரைட்டாக வரும் முனிஸ்கான் லெப்டாக வரும் காளி வெங்கட் இருவரும் காமெடி செய்து சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.
சுனில் ரெட்டி, ஷாரா இருவரும் டைமிங் காமெடியில் கவனிக்க வைத்து வைத்து இருக்கிறார்கள்.
தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோவை சரளா, பைத்தியக்கார டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
படத்தொகுப்பாளர் வெற்றிவேலின் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு மிக கச்சிதம் அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் வித்யாசாகர் பின்னணி இசை திரைப்படத்திற்கு ஏற்றார் போல் அமைத்து உள்ளது.
கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ரைட் லெப்ட் பேசும் வசனங்கள், வரும் காட்சிகள் மேலும் ரைட் லெப்ட் அனிமேஷன் கதாபாத்திரத்தில் ரஜினி, சூர்யா கதாபாத்திரத்தில் தோன்றி வருவது மிகவும் அருமையாக உள்ளது.
திரைப்படம் ஆரம்பம் காட்சி முதல் இறுதி காட்சி வரை காமெடியால் ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் மீரா மஹாதி.
அனிமேஷன், கிராபிக்ஸ் காட்சிகள் சுவாரஸ்யமாகவும், கலர்புல்லாகவும் அமைந்து இருக்கிறது.
ஃபேண்டஸி காமெடியை மையமாக வைத்து காமெடியான திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மீரா மஹாதி.
மொத்தத்தில் இந்த டபுள் டக்கர் திரைப்படம் குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.
ரேட்டிங் 3.5/5.