‘அகத்தியா’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-  ஜிவா, ராஷி கன்னா, அர்ஜுன், எட்வர்ட் சோனன்ப்ளிக், மாடெல்டா, யோகி பாபு, வி.டி.வி கணேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பா.விஜய்.

ஒளிப்பதிவாளர் :- தீபக் குமார் பதி.

படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்.

இசையமைப்பாளர் :- யுவன் ஷாங்கர் ராஜா.

தயாரிப்பு நிறுவனம்:- வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,  வாமிண்டியா.

தயாரிப்பாளர் :- ஐசரி கே. கணேஷ், அனீஷ் அர்ஜுன் தேவ்.

ரேட்டிங் :- 3.5./5.

சினிமாவில் கலை இயக்குநராக பணியாற்றி வரும் கதாநாயகன் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்’ என்று சொல்லக்கூடிய பயங்கரமான பங்களா ஒன்றை உருவாக்கி, அதை  பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

மக்களிடம் அந்த பங்களா சிறப்பான வரவேற்பை பெறும் அந்த பங்களாவில் நிஜமாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதோடு, அங்கிருந்து கதாநாயகன் ஜீவாவை அந்த அமானுஷ்ய சக்திகள் கதாநாயகன் ஜீவாவை விரட்டி அடிக்கிறது.

இந்த நிலையில், அந்த பங்களாவில் ஏதோ ஒரு அமானுஷ்யா மர்மம் இருப்பதையும், தனக்கும் அந்த பங்களாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக அறிந்துக் கொள்கிறார் கதாநாயகன் ஜீவா,

அதன் பங்களாவில் இருக்கும் அமானுஷ்யா மர்மத்தை முழு பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார் கதாநாயகன் ஜிவா.

அந்த பங்களாவில் நடக்கும்  அமானுஷ்ய மர்மம் என்ன? என்பதுதான் இந்த ‘அகத்தியா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த அகத்தியா திரைப்படத்தில் கதாநாயகனாக ஜீவா நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஜீவா மாஸ் காட்டுவது காதல் செய்வது என பயணிக்கும் கதாபாத்திரம் இல்லை என்றாலும், மர்மத்தை கண்டுபிடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில், பெற்ற தாய்க்காக எப்படிப்பட்ட பேயையும் எதிர்கொள்ள களத்தில் இறங்கும் கதாநாயகன் ஜீவா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

ஆனால், கிளைமாக்ஸ் காட்சிகளை பார்க்கும் போது, ஜீவாவை காட்டிலும் அவரது அனிமேஷன் உருவம் அதிகம் உழைத்திருக்கிறது.

இந்த அகத்தியா திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா, நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா, திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை கதாநாயகனின் காதலியாக வந்தாலும், அதற்கான எந்தவித காட்சியும் திரைப்படத்தில் இல்லாதது கதாநாயகன் ராஷி கண்ணா, மட்டும் அல்ல திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம் தான் மிச்சம்.

பிரெஞ்சு நாட்டு தமிழ் வாழ் தமிழராக சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் அனுபவமான நடிப்பு மற்றும் கதாபாத்திரம் திரைப்படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு தேவையில்லாத ஒரு கதாபத்திரமாக ரெடின் கிங்ஸ்லி சில காட்சிகளில் வலுக்கட்டாயமான வசனங்களை பேசி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை எரிச்சலடைய செய்கிறார்.

எட்வர்ட் சோனென்ப்ளிக், மாடில்டா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறார்கள்.

செந்தில், யோகி பாபு, விடிவி கணேஷ் என சிறப்பு  கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் காமெடி நடிகர்கள் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி,  இன்றைய காலக்கட்டத்தில் ஏற்றவாறு படும் பயங்கரமாக காட்சிப்படுத்தி ரசிகர்களை பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில்  அம்மா பாடல் மற்றும் ”என் இனிய பொன் நிலாவே…” ரீமிக்ஸ் பின்னணி இசை கவிக்கு ஏற்றவாறு மிக சிறப்பாக பயணித்திருக்கிறார்.

நமது பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் சித்தர்களின் வலிமையை  வைத்துக்கொண்டு, அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய  திகில் கலந்த ஃபேண்டஸி திரைப்படத்தில் மிக அருமையாக ஏழதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் பா விஜய்.

மொத்தத்தில், ‘அகத்தியா’ திரைப்படம் சித்த மருத்துவம் சித்தர்களையும் போற்றும் திரைப்படம்.

error: Content is protected !!