’அஸ்திரம்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஷாம், நிரா, ரஞ்சித் டி.எஸ்.எம், வென்பா, நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அரோல் டி சங்கர், விடேஷ் ஆனந்த், மாஸ்டர் மார்டின், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அரவிந்த் ராஜகோபால்.
ஒளிப்பதிவாளர் :- : கல்யாண்
வெங்கட்ராமன்.
படத்தொகுப்பாளர் :- பூபதி வேதகிரி.
இசையமைப்பாளர் :- சுந்தரமூர்த்தி கே.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- பெஸ்ட் மூவீஸ்.
தயாரிப்பாளர் :- டி.எஸ்.எம். தனசன்முகமணி.
ரேட்டிங்:- 3.5./5.
வித்தியாசமான முறையில் தொடர்ந்து தன்னைத்தானே உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலைகள் அடிக்கடி நடந்து வர அதன் பின்னணியில் ஏதோ ஒரு மிகப்பெரிய மர்மம் உள்ளதாக அறிந்து கொள்ளும் காவல்துறை அதிகாரி கதாநாயகன் ஷாம் அந்த விசித்திரமான வழக்கை விசாரிக்க உயர் அதிகாரியிடம் விருப்பம் தெரிவிக்கிறார்.
உயர் அதிகாரியும் கதாநாயகன் ஷாமுக்கு அந்த விசித்திரமான வழக்கை விசாரிக்க அனுமதி வழங்குகிறார்.
கதாநாயகன் ஷாம் தன்னுடன் பணியாற்றும் ஒரு காவலரின் உதவியோடு விசாரணையை தொடங்கினார்.
இந்த விசாரணையில் எந்தவிதமான துப்பும் துலங்காமல் இருக்கும் நிலையில், தன்னுடன் கல்லூரி படித்த நண்பர் ஒருவர் கதாநாயகன் ஷாமை சந்திக்கிறார்.
கதாநாயகன் ஷாம் விசாரித்துக் கொண்டிருக்கும் அந்த விசித்திரமான வழக்கை பற்றி தற்கொலை சம்பவங்கள் பற்றியும் பல அதிர்ச்சியான தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று கதாநாயகன் ஷாம், நண்பர் மற்றும் அவரை தேடி வரும் மற்றொருவரும் அதே விசித்திரமான முறையில் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இதனால், காவல்துறையில் மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட அந்த விசித்திரமான வழக்கில் இருந்து கதாநாயகன் ஷாம், கட்டாய விடுமுறையில் விட்டிற்கு அனுப்பப்படுகிறார்.
கட்டாய விடுமுறையில் இருந்தாலும் தன்னை சுற்றி நடந்து கொண்டிருக்கும் தொடர் விசித்திரமான தற்கொலை சம்பவங்களும், அந்த தற்கொலைகள் பற்றிய சில தடயங்கள் மற்றும் தகவல்கள் தன்னை தேடி வருவதற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்பதை கண்டுபிடிக்கும் கதாநாயகன் ஷாம், அதன் விசாரணையில் முழுமையான பின்னணியை கண்டுபிடிக்க முயலும் போது, பல விதமான அதிர்ச்சிகரமான சம்பவங்களும் உண்மைகளும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் கதாநாயகன் ஷாம் நடந்து கொண்டிருக்கும் விசித்திரமான தற்கொலைகளை பற்றி கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘அஸ்திரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அஸ்திரம் திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாம் நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கதாநாயகன் ஷாம் காக்கி சீருடை அணியாமல் காவல்துறை அதிகாரியாக வலம் வந்தாலும், கம்பீரமான நடிப்பு மூலம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த அஸ்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நிரா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நிராவுக்கு திரைக்கதையில் முக்கிய பங்கு இல்லை என்றாலும், இந்த சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ஷாம் உடன் பயணிக்கும் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுமந்த் எனற புதுமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாத வகையில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மனநல மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது பணிகளை மிகச்சிறப்பாக நடித்து திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன், ஒளிப்பதிவு மூலம் திரைக்கதைக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்றவாறு கொடுத்திருக்கிறார்..
ஜப்பான் மன்னன் பற்றிய ஒரு கதையை கையில் எடுத்து விறுவிறுப்பான திரைக்கதையை கொடுத்து மற்றும் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் திரைப்படத்தை மிக அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.
மொத்தத்தில், ‘அஸ்திரம்’ அருமையான கிரைம் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது.