11/06/2025 இன்றைய ராசிபலன்கள்.
11-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் இன்றைய ராசிபலன்கள்.
தமிழ் ஆண்டு, தேதி – விசுவாசுவ, வைகாசி 28
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ பௌர்ணமி – Jun 10 11:35 AM – Jun 11 01:13 PM
கிருஷ்ண பக்ஷ பிரதமை – Jun 11 01:13 PM – Jun 12 02:28 PM
நட்சத்திரம்
கேட்டை – Jun 10 06:01 PM – Jun 11 08:10 PM
மூலம் – Jun 11 08:10 PM – Jun 12 09:57 PM
கரணம்
பவம் – Jun 11 12:27 AM – Jun 11 01:13 PM
பாலவம் – Jun 11 01:13 PM – Jun 12 01:54 AM
கௌலவம் – Jun 12 01:54 AM – Jun 12 02:28 PM
யோகம்
ஸாத்தியம் – Jun 10 01:44 PM – Jun 11 02:03 PM
சுபம் – Jun 11 02:03 PM – Jun 12 02:04 PM
வாரம்
புதன்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.
சூரியோதயம் – 6:05 AM
சூரியஸ்தமம் – 6:33 PM
சந்திரௌதயம் – Jun 11 6:47 PM
சந்திராஸ்தமனம் – Jun 12 6:37 AM
அசுபமான காலம்
இராகு – 12:19 PM – 1:52 PM
எமகண்டம் – 7:39 AM – 9:12 AM
குளிகை – 10:46 AM – 12:19 PM
துரமுஹுர்த்தம் – 11:54 AM – 12:44 PM
தியாஜ்யம் – 04:45 AM – 06:28 AM
சுபமான காலம்
அமிர்த காலம் – 10:33 AM – 12:18 PM
பிரம்மா முகூர்த்தம் – 04:29 AM – 05:17 AM
ஆனந்ததி யோகம்
துர்வாஞ்சம் Upto – 08:10 PM
துவஜ
வாரசூலை
சூலம் – North
பரிகாரம் – பால்
சூர்யா ராசி
சூரியன் ரிஷபம் ராசியில்
சந்திர ராசி
ஜூன் 11, 08:10 PM வரை விருச்சிகம் ராசி, பின்னர் தனுசு
புதன்கிழமை ஹோரை
காலை
06:00 – 07:00 – புத – சுபம்
07:00 – 08:00 – சந் – சுபம்
08:00 – 09:00 – சனி – அசுபம்
09:00 – 10:00 – குரு – சுபம்
10:00 – 11:00 – செவ் – அசுபம்
11:00 – 12:00 – சூரி – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சுக் – சுபம்
01:00 – 02:00 – புத – சுபம்
02:00 – 03:00 – சந் – சுபம்
மாலை
03:00 – 04:00 – சனி – அசுபம்
04:00 – 05:00 – குரு – சுபம்
05:00 – 06:00 – செவ் – அசுபம்
06:00 – 07:00 – சூரி – அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
11-06-2025 இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
பலம் பலவீனங்களைப் புரிந்துகொள்வீர்கள். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். விதண்டாவாதப் பேச்சுகளைக் குறைத்துக் கொள்ளவும். வாடிக்கையாளர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
அஸ்வினி : அலைச்சல்கள் ஏற்படும்.
பரணி : பேச்சுகளில் கவனம் வேண்டும்.
கிருத்திகை : கையிருப்புகள் குறையும்.
ரிஷபம்
இழுபறியான சில விஷயங்களைத் தீர்ப்பதற்கான சூழல் அமையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். நலம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.
ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் உண்டாகும்.
மிதுனம்
உறவுகள் மத்தியில் மதிப்பு உயரும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பணவரவுகள் சாதகமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : மதிப்பு உயரும்.
திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
கடகம்
விமர்சனப் பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். தள்ளிப்போன சில காரியங்கள் முடியும். சவாலான செயலைச் செய்வீர்கள். அக்கம், பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
பூசம் : காரியங்கள் கைகூடும்.
ஆயில்யம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
சிம்மம்
உறவுகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களைச் சமாளிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : திருப்தி ஏற்படும்.
உத்திரம் : குழப்பங்கள் குறையும்.
கன்னி
சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பழைய சிக்கல்கள் விலகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
உத்திரம் : நம்பிக்கை பிறக்கும்.
அஸ்தம் : துரிதம் ஏற்படும்.
சித்திரை : ஆர்வம் மேம்படும்.
துலாம்
பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான இடமாற்றச் சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
சித்திரை : அனுபவம் உண்டாகும்.
சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.
விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
விருச்சிகம்
மூத்த உடன்பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவது நல்லது. கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். அமைதி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : தெளிவு பிறக்கும்.
தனுசு
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். வெளியூர் தொடர்பான கல்வி வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத வரவுகளால் பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். எதிர்மறையான விஷயங்களில் தெளிவு ஏற்படும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மூலம் : பொறுமை காக்கவும்.
பூராடம் : பொருளாதாரம் மேம்படும்.
உத்திராடம் : தெளிவு ஏற்படும்.
மகரம்
புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இழுபறியான விஷயங்களுக்கு திடீர் முடிவு எடுப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : அனுபவம் வெளிப்படும்.
அவிட்டம் : முடிவு பிறக்கும்.
கும்பம்
சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மருத்துவப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் காணப்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் செல்வாக்கு அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
சதயம் : லாபம் மேம்படும்.
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
மீனம்
ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த முயற்சிகளில் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : தீர்வுகள் கிடைக்கும்.
ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.


