12/06/2025 இன்றைய ராசிபலன்கள்
12-06-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் இன்றைய ராசிபலன்கள்.
தமிழ் ஆண்டு, தேதி – விசுவாசுவ, வைகாசி 29
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ பிரதமை – Jun 11 01:13 PM – Jun 12 02:28 PM
கிருஷ்ண பக்ஷ துவிதியை – Jun 12 02:28 PM – Jun 13 03:19 PM
நட்சத்திரம்
மூலம் – Jun 11 08:10 PM – Jun 12 09:57 PM
பூராடம் – Jun 12 09:57 PM – Jun 13 11:20 PM
கரணம்
கௌலவம் – Jun 12 01:54 AM – Jun 12 02:28 PM
சைதுளை – Jun 12 02:28 PM – Jun 13 02:56 AM
கரசை – Jun 13 02:56 AM – Jun 13 03:19 PM
யோகம்
சுபம் – Jun 11 02:03 PM – Jun 12 02:04 PM
சுப்ரம் – Jun 12 02:04 PM – Jun 13 01:47 PM
வாரம்
வியாழக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:06 AM
சூரியஸ்தமம் – 6:33 PM
சந்திரௌதயம் – Jun 12 7:41 PM
சந்திராஸ்தமனம் – Jun 13 7:32 AM
அசுபமான காலம்
இராகு – 1:53 PM – 3:26 PM
எமகண்டம் – 6:06 AM – 7:39 AM
குளிகை – 9:12 AM – 10:46 AM
துரமுஹுர்த்தம் – 10:15 AM – 11:04 AM, 03:13 PM – 04:03 PM
தியாஜ்யம் – 04:45 AM – 06:28 AM, 08:13 PM – 09:56 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:54 AM – 12:44 PM
அமிர்த காலம் – 03:08 PM – 04:51 PM
பிரம்மா முகூர்த்தம் – 04:30 AM – 05:18 AM
ஆனந்ததி யோகம்
தர்மம் Upto – 09:57 PM
பிரபாபதி
வாரசூலை
சூலம் – South
பரிகாரம் – தைலம்
சூர்யா ராசி
சூரியன் ரிஷபம் ராசியில்
சந்திர ராசி
தனுசு (முழு தினம்)
வியாழன் கிழமை ஹோரை
காலை
06:00 – 07:00 – குரு – சுபம்
07:00 – 08:00 – செவ் – அசுபம்
08:00 – 09:00 – சூரி – அசுபம்
09:00 – 10:00 – சுக் – சுபம்
10:00 – 11:00 – புத – சுபம்
11:00 – 12:00 – சந் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சனி – அசுபம்
01:00 – 02:00 – குரு – சுபம்
02:00 – 03:00 – செவ் – அசுபம்
மாலை
03:00 – 04:00 – சூரி – அசுபம்
04:00 – 05:00 – சுக் – சுபம்
05:00 – 06:00 – புத – சுபம்
06:00 – 07:00 – சந் – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
12-06-2025 இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
அக்கம், பக்கத்து வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். பணியாட்களின் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : தேடல்கள் உண்டாகும்.
கிருத்திகை : லாபம் மேம்படும்.
ரிஷபம்
தம்பதிகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். விதண்டாவாதப் பேச்சுக்களைக் குறைத்துக்கொள்ளவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எதிர்காலம் நிமித்தமான புதிய தெளிவு உண்டாகும். புதியவர்களின் வருகையால் சுப விரயங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
ரோகிணி : தெளிவு ஏற்படும்.
மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
மிதுனம்
பிற மொழி பேசும் மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நன்மை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : சுறுசுறுப்பான நாள்.
புனர்பூசம் : சிந்தனைகள் பிறக்கும்.
கடகம்
தந்தைவழித் தொழிலில் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். புதிய துறை சார்ந்த கலந்தாய்வில் பங்குகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : மேன்மையான நாள்.
பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம், பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். நினைத்த பணிகளை திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : மாற்றமான நாள்.
கன்னி
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். திறமைக்கேற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : உதவிகள் சாதகமாகும்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். நவீன சாதனங்கள் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
சித்திரை : குழப்பங்கள் நீங்கும்.
சுவாதி : தோற்றப்பொலிவு அதிகரிக்கும்.
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
விருச்சிகம்
கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். சில வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். அமைதி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
விசாகம் : கையிருப்புகள் மேம்படும்.
அனுஷம் : லாபம் உண்டாகும்.
கேட்டை : பாதைகள் புலப்படும்.
தனுசு
புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டால் காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. விளையாட்டு விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : ஆர்வம் உண்டாகும்.
பூராடம் : நெருக்கடியான நாள்.
உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.
மகரம்
வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பாக சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உயர் அதிகாரிகளால் சில மாற்றமான தருணம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : செல்வாக்கு உயரும்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : வாதங்கள் மறையும்.
கும்பம்
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சேமிப்பு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.
மீனம்
நம்பிக்கையானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த பணிகளை முடிப்பீர்கள். முதலீடு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்



