“வீரவணக்கம்” திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சமுத்திரக்கனி, பரத் ரித்தேஷ், சுரபிலட்சுமி, பி. கே. மேதினி, பரணி, ஐஸ்விகா, சித்திக், ஆதர்ஷ் தேவன், சித்தாங்கனா, பிரேம்குமார், சாதனா, ரமேஷ் பிஷாரடி, அரிஸ்டோ சுரேஷ், பீமன் ரகு, உல்லாஸ் பந்தளம், பிரமோத் வெளியநாடு, கோப்ரா ராஜேஷ் ரியாஸ் நெடுமங்காடு, சுதீஷ், வி. கே. பைஜு, கோபிகா
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அனில் வி. நாகேந்திரன்.

ஒளிப்பதிவாளர் :- கவியரசு.

படத்தொகுப்பாளர் :-  பி. அஜித் குமார்.

இசையமைப்பாளர் :- எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே. குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார்.

தயாரிப்பு நிறுவனம் :- விசாரத் கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- விசாரத் கிரியேஷன்ஸ்.

ரேட்டிங் :- 2.75./5.

தமிழகத்தில் உள்ள கிராமம் ஒன்றின் மிகப்பெரிய தாத்தா மற்றும் தந்தை காலங்களில் இருந்து மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் சேர்ந்த பரத், மனைவி மகளுடன் ஏழைகளுக்கு நல்லது நினைக்கும் கம்யூசனிவாதியாக வாழ்ந்து வருகிறார்.

அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் பல்வேறு உதவிகளை செய்வதோடு, சாதி, மதம், ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைவரிடத்திலும் மிகவும் சகஜகமாக பழகி வருகிறார்.

இந்த நிலையில், அவரது பக்கத்து கிராமத்தில் கிழ் சாதி மக்களின் வன்கொடுமை மற்றும் பாலியல் பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்கள் அனைவருக்கும் பாதுகாவலனாக நிற்பதோடு, அந்த மக்கள் பிரச்சனைகளை எதிர்த்து நீதி கிடைக்க போராட வேண்டும் என கம்யூனிச போராளிகளை சந்திக்கிறார்.

மிகவும் வயதான பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவக்கிய, முதல் புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாறில் என்னென்ன நடந்தது என்பதை ‘வீரவணக்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வீரவணக்கம் திரைப்படத்தில் கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.

புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, புரட்சிகரமான உணர்வுப் பூர்வமாக வசனங்களை பேசி மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

அந்த புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

ஏழை எளிய மக்களுக்காக போராடிய தியாகிகளை நினைவுப்படுத்தும் விதமாக, உணர்வுப்பூர்வமாகவும் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, திரைப்படத்தில் பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்திற்கும் மிகப்பெரிய அடையாளமாக இருப்பது மட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்

கம்யூனிசவாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரத், தனது வயதுக்கு மீறிய கதாபாத்திரம் என்றாலும் அன்பு கதாபாத்திரத்தை தன்னுடைய நடிப்பின் மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

கம்யூனிச போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்தேஷ், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, பெண் போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுரபி லட்சுமி, புரட்சி பாடகி பி.கே.மேதினி, அதர்ஷ், ஆய்ஷ்விகா என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடுத்திருக்கும் அனைவரும் பொருத்தமான தேர்வாக அமைந்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கவியரசுவின் ஒளிப்பதிவு மூலம் அனைத்து கதாபாத்திரங்களின் உணர்வுகளை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் காட்சிகளை சிறப்பாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள்  எம்.கே. அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் இவர்கள் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறார்கள்.

கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவக்கிய, முதல் புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை உணர்வுப்பூர்வமான மிகச் சிறப்பாக திரைப்படைப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன், . 

மொத்தத்தில், ‘வீரவணக்கம்’ திரைப்படம் புரட்சி வீரரின் வெற்றி முழக்கம்.

error: Content is protected !!