விடுதலை பாகம் 2 திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர்,அனுராக் காஷ்யப், கென் கருணாஸ்,ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், சேத்தன்,மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வெற்றிமாறன்.

ஒளிப்பதிவாளர் :- ஆர் வேல்ராஜ்.

படத்தொகுப்பாளர் :- ராமர்.

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம்:- ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- எல்ரெட் குமார்.

ரேட்டிங் :- 4.25./5.

அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் கதாநாயகன் விஜய் சேதுபதியை கடைநிலை காவலர் கதாநாயகன் சூரி துப்பாக்கி முனையில் கைது
செய்வதோடு விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் முடிந்திருக்கும் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திற்கான கைது செய்யப்பட்ட தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் கதாநாயகன் விஜய் சேதுபதியை காவல்துறையினர் எவ்வாறு விசாரித்தனர் என்ற திரைப்படத்தை முடித்திருந்தனர்.

தற்போது இன்று வெளியாகி இருக்கும் விடுதலை பாகம் இரண்டில் முடித்த இடத்தில் இருந்து தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் கதாநாயகன் விஜய் சேதுபதி யார்? அவருடைய பின்புலன் என்ன? அவரை காவல்துறை என்ன செய்தனர்? இப்படியா பட்ட அரசியல் தான் ‘விடுதலை – பாகம் 2’.

விடுதலை முதல் பாகத்தில் காவல்துறையின் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் கதாநாயகன் விஜய் சேதுபதி தேடுதல் வேட்டை மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்வியலையும், காவல்துறையினர் மலைவாழ் மக்களை விசாரணை என்ற பெயரில் எவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதையும் அரசியலை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதையும் மிகவும் பிரமாண்டத்தை மட்டும் இன்றி பொழுதுபோக்காகவும் காட்சிப்படுத்திய இயக்குநர் வெற்றிமாறன்.

விடுதலை இரண்டாம் பாகத்தில் பண்ணையார்களின் பண்ணை வீட்டிலும் வயல் வெளிகளிகலும்
அடிமைகளாக வேலை பார்க்கும் இந்த கிராமத்து உள்ள மக்களை அடிமைகளாக நடத்தும் பண்ணையார்களிடம் அனுபவித்த கொடுமைகள், பண்ணையார்களின, அரசியலும் மற்றும் பண்ணையார்களை எதிர்த்து குரல் கொடுத்த கம்யூனிஸம் மற்றும் திராவிட கட்சிகளின் எழுச்சி பற்றி பேசி, தற்போதைய தலைமுறைக்கு மிகப்பெரிய அரசியல் பாடமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரு அப்பாவி பள்ளி வாத்தியார் என தொடங்கி, கம்யூனிச இயக்கவாதி, தொழிற்சங்கவாதி, ஆயுதம் ஏந்தி போராடும் போராளி, தமிழர் மக்கள் படை தலைவர் என்று பல முகங்களோடு பயணித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காதலர் மற்றும் கணவராகவும் தந்தையாகவும் தனது இயல்பான நடிப்பு மூலம் விடுதலை பாகம் 2 திரைப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக அவரை மலையில் இருந்து காவல்துறை அதிகாரி அதிகாரியான சேத்தன் மற்றும் சூரி உள்ளிட்ட காவல் துறையினர் மலைமேல் இருந்து கீலே அழைத்து வருகிறார்கள்.

அழைத்து செல்லும் வழியில் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் கதாநாயகன் விஜய் சேதுபதி தான் எப்படி மக்கள் படை தலைவனாக மாறினார் என்பதை சொல்லிக் கொண்டே வருகிறார்.

மேலும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் கதாநாயகன் விஜய் சேதுபதியின் கூட்டாளிகள் துப்பாக்கி சூடு நடத்தி அவரை விடுவிக்க திட்டம் போடுகிறார்கள்.

இறுதியில் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் கதாநாயகன் விஜய் சேதுபதியை காவல் துறையினர் கீழே அழைத்து வந்து ஜெயிலில் அடைத்தார்களா? அடைக்கவில்லையா? தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் கதாநாயகன் விஜய் சேதுபதியை அவருடைய கூட்டாளிகள
காப்பாற்றினார்களா? காப்பாற்றினார்களா காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி, பெருமாள் வாத்தியாராக வாழ்ந்து இருக்கிறார்.

கெட்டதை தட்டி கேட்க ஆரம்பித்து, கட்சியில் இணைந்து மக்களுக்காக போராடும் தலைவனாக மாறி எதார்த்த நிலையை நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த விடுதலை இரண்டாம் பாகத்தில் கதையின் நாயகியாக மஞ்சுவாரியார் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகியாக நடித்து இருக்கும் மஞ்சு வாரியர், தவறு செய்யும் தன் குடும்பத்தை, எதிர்த்து போராடும் துணிச்சலான பெண்ணாக நடித்து ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஜோடி பொருத்தமும் காதல் காட்சிகளும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

காவலராக வரும் சூரிக்கு இந்த பாகத்தில் அதிகம் வேலை இல்லை என்றாலும் இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

கதையின் நாயகன் விஜய் சேதுபதியை காவல்துறையிடம் பிடித்து கொடுத்து தவறு செய்து விட்டோம் என்று உணரும் காட்சியில் கவர்ந்து இருக்கிறார்.

பவானி ஶ்ரீயும் குறைந்த காட்சிகளில் மட்டுமே வந்து சென்று இருக்கிறார்.

கம்யூனிச தலைவராகவும், விஜய் சேதுபதியின் அரசியல் ஆசானாக நடித்திருக்கும் கிஷோர், தனது அனுபவம் வாய்ந்த படிப்பு மூலம் திரைப்படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

வங்க போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் அனுராக் காஷ்யப், தலைமை செயலாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜீவ் மேனன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பண்ணையார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் போஸ் வெங்கட், வின்செண்ட் அசோகன் என அனைத்து கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களாக இருக்கிறார்கள்.

தனது கிராமத்து பெண்களை சொந்தம் கொண்டாடும் பண்ணையார்களின் வக்கிர புத்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருப்பன் கருப்பன் கதாபாத்திரத்தில், கென் கருணாஸ் தனது நடிப்பின் மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் பயணிக்க முடியாத இடங்களில் ஒளிப்பதிவாளர் ஆர் வேல்ராஜ் பயணித்து, அடர்ந்த வனப்பகுதியின் ஆபத்தை வியக்கும் வகையில் காட்சிப்படுத்திருப்பது மிக சிறப்பு.

இசையமைப்பாளர்
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கவர்ந்தாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு சற்று வேகத்தடை போல அமைந்திருக்கிறது.

ஆனால், அவருடைய பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு கதாபாத்திரங்களுக்கும் உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்.

முதலாளித்துவம், சர்வாதிகாரம், அடக்குமுறை, ஓடுக்குமுறை, ஜனநாயகம், சோஷலிசம் ஏகாதிப்பத்தியம், வர்க்கம், ஆகியவற்றை படிக்கும் தற்போதைய இளைய தலைமுறையினர், அதன் பின்னணி என்ன? என்பதை ஆத்மார்த்தமாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் மிக அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்

மொத்தத்தில், ‘விடுதலை பாகம் 2’ நாளைய இளைய சமுதாயத்திற்கு எழுச்சியின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.

error: Content is protected !!