தமிழ் சினிமா உலகில் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அவர்கள் மறைவிற்கு தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்,  கலப்பை மக்கள் இயக்கம்  இரங்கல் !

தமிழ் சினிமா உலகில் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அவர்கள் மறைவிற்கு தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்,  கலப்பை மக்கள் இயக்கம்  இரங்கல் !

சென்னை 04 டிசம்பர் 2025 தமிழ் திரைப்பட உலகில் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அவர்கள் மறைவு திரைப்படத் துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.

இந்திய திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று உயர்திரு மெய்யப்ப செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்ட ஏ‌.வி.எம் நிறுவனமாகும்.

தனது தந்தை மெய்யப்ப செட்டியார் பிறகு, அந்த பெரும் நிறுவனத்தை இத்தனை ஆண்டுகளாக கட்டிக் காத்த பெருமைக்கு சொந்தக்காரர் ஏ.வி.எம் சரவணன்.

திரைப்பட உலகில் பல்வேறு மனிதர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டியவர் அவர்.

பாரம்பரியமிக்க ஏ.வி.எம் நிறுவனத்தின் அடையாளமாக இருந்து வந்த உயிர்திரு ஏ.வி.எம் சரவணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி பேரதர்ச்சியாகும்.

திரைப்பட உலகில் தனி சாம்ராஜ்யம் படைத்தவராக இருந்தாலும் கடைசி வரை சிறந்த பண்பாளராக திகழ்ந்தார்.

நான் அவரிடம் இருந்து நல்ல பண்புகளையும், அடுத்தவர்களை மதித்தால் தலை நிமிர்ந்து வாழலாம் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

இந்த நேரத்தில் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இவண, பி.டி.செல்வகுமார், கலப்பை மக்கள் இயக்கம், திரைப்பட தயாரிப்பாளர்.

error: Content is protected !!