விஜய் திரைப்படத்தால் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் OTT டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது!

விஜய் திரைப்படத்தால் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் OTT டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது!

சென்னை 05 ஜனவரி 2026 ஜனநாயகன்’ தளபதி நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் இறுதியான திரைப்படம் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட உலகில் நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இந்த  ஜனநாயகன் உலகளவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் செம ஹிட். அடித்து எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் 03 ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும்  வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யின் அரசியல் வருகை உறுதி செய்யப்படும் அளவிற்கு  மறைமுகமான வசனங்கள் அதிக அளவில் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

இதனால் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் தற்போது Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘விஜய்’ திரைப்படத்தின் டிரெய்லரில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்ற ‘பகவந்த் கேசரி’  திரைப்படத்துடன் பல காட்சிகள் ஒத்துப் போகிறது !

இதனையடுத்து ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் சுமார் 80% காட்சிகள் ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் மறு ஆக்கம்  எனும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

error: Content is protected !!