அடுத்தடுத்த பல்வேறு தடைகளை தாண்டி ‘ஜனநாயகன்’ திரைக்கு வருமா ?
அடுத்தடுத்த பல்வேறு தடைகளை தாண்டி ‘ஜனநாயகன்’ திரைக்கு வருமா ?
சென்னை 09 ஜனவரி 2026 ஜனநாயகன்’ தளபதி நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் இறுதியான திரைப்படம் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட உலகில் நடிக்கும் கடைசித் திரைப்படம் என்பதால் இந்த ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் இதுவரை வெளியான நான்கு பாடல்களும் மிகப்பெரிய அளவில் செம ஹிட். குறிப்பாக தளபதி கச்சேரி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது.
ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட, டிரெய்லரில் தளபதி விஜய்யின் அரசியல் வருகை உறுதி செய்யப்படும் அளவிற்கு மறைமுகமான வசனங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் தற்போது வரை தணிக்கை குழுவினர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை
கடந்த டிசம்பர் 19 2025 அன்று திரைப்படத்தை தணிக்கை குழுவினர் பார்வைக்கு அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தணிக்கை குழுவினரால் சில காட்சிகளில் உள்ள வசனங்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் திரைப்படம் தணிக்கை குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
ஆனால், திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த திரைப்படத்தைத் தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அதோடு அந்த திரைப்படத்தை மறுஆய்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.
அப்போது, “பாதுகாப்புப் படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்புத் துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது.
தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது” என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு கே.வி.என். புரொடக்சன் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி பிறப்பிக்க உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இதனிடையே தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஜன நாயகன் லிரைப்படம் திரைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இதற்கிடையே ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வரவேண்டும் என திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் வலுவாகக் குரல் கொடுத்தனர்.
இதுவரை மவுனம் காத்து வந்த விஜய் தரப்பினர், இப்போதாவது மவுனம் கலைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.










