‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஜீவா, தம்பி ராமையா, இளவரசு,  பிராத்தனா நாதன், ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி, ஜெயவந்த், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நிதிஷ் சஹாதேவ்.

ஒளிப்பதிவாளர் :- பப்லு அஜு.

படத்தொகுப்பாளர் :- அர்ஜுன் பாபு.

இசையமைப்பாளர் :- விஷ்ணு விஜய்.

தயாரிப்பு நிறுவனம் :- கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- கண்ணன் ரவி, தீபக் ரவி.

ரேட்டிங் :-  3.75./5.

பஞ்சாயத்து தலைவரான கதாநாயகன் ஜீவா, அந்த கிராமத்தில் உள்ள மக்களின் வாக்குகளுக்காக அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் திருமணம் விசேஷங்கள் முதல் துக்கம் நிகழ்வு வரை அனைத்தையும் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஒரு அந்த கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டில் இருக்கும் இளவரசு தம்பி ராமையா இளவரசுவின் மகள் பிராத்தனா நாதன், திருமணம் மறுநாள் காலை நடக்க இருப்பதால் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கதாநாயகன் ஜீவா ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இளவரசு வீட்டின் பக்கத்து வீட்டில் உள்ள நோய்வாய்ப்பட்ட படுத்த படுக்கையாக இருந்த தம்பி ராமையாவின் தந்தை இறந்து விடுகிறார். 

தம்பி ராமையா மற்றும் இளவரசு  இருவருக்கிடையே ஏற்கனவே பகை இருப்பதால், இளவரசுவின் மகள் பிராத்தனா நாதன், திருமணம் நடைபெறும் அதே காலை நேரத்தில் தான், தனது தந்தையின் இறுதி சடங்கு மற்றும் ஊர்வலமும் நடக்க வேண்டும், என்று தம்பி ராமையா பிடிவாதமாக இருக்கிறார்.

தன் மகள் திருமணம் தனது வீட்டில் தான் திருமணம் நடக்க வேண்டும், என்பதில் இளவரசுவும் உறுதியாக இருக்கிறார். 

இளவரசுவின் மகள் பிராத்தனா நாதன் திருமணம் நடந்ததா?, நடக்கவில்லையா?, தம்பி ராமையாவின் தந்தையின் இறுதி சடங்கு மற்றும் ஊர்வலம் நடந்ததா?,  நடக்கவில்லையா?,

இந்த நிலையில் இரண்டு குடும்பங்களையும் சமாதானப்படுத்தி, இரண்டு நிகழ்ச்சிகளையும் சரியாக நடத்தும் பொறுப்பை ஏற்று பஞ்சாயத்து செய்யும் கதாநாயகன் ஜீவா, இந்த இரண்டு நிகழ்ச்சிகள் நடத்துவதில் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?, என்பதுதான் இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஜீவா நடித்திருக்கிறார்.

மிகவும் கலகலப்பான மற்றும் பொறுப்பான கதபாத்திரத்தில் மிகவும் சரியாக பொருந்தியிருக்கும் கதாநாயகன் ஜீவா, தனது இயல்பான நடிப்பு மூலம் முழு திரைப்படத்தையும் தனது தோளில் ஒற்றை ஆளாக சுமந்திருக்கிறார்.

கதாநாயகன் ஜீவாவை தவிர  திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக்கதையில் முக்கியத்துவம் பெற்று, திரைப்பட ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், கதாபாத்திரங்கள்  அனைவரையும் தலைமை தாங்கி வழி நடத்தும் தலைவராக கதாநாயகன் ஜீவா முத்திரை பதித்துள்ளார்.

‘பார்க்கிங்’’ திரைப்படத்தில் எம் எஸ் பாஸ்கர் அவர்களின்  மகளாக ரசிகர்கள் கவனம் ஈர்த்த பிரார்த்தனா நாதன், இந்தத் திரைப்படத்தில் மணமகள் கதாபாத்திரத்தில் எளிமையான அழகு மற்றும் சிறப்பான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதை கவர்கிறார். 

திரைப்படத்தின் கதையின் மையப்புள்ளிகளாக நடித்திருக்கும் இளவரசு மற்றும் தம்பி ராமையா இயல்பான நடிப்பின் மூலம் திரைக்கதையில் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படத்தில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள். 

திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி அனைவரும் திரைப்படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பப்ளு அஜு ஒளிப்பதிவு மூலம்  திரைப்படத்தை முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி யிருக்கிறார்.

இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் கொண்டாட்டம் ரகம். பின்னணி இசை திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை, ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனில் கதை பயணித்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் திரைப்படத்தை வேகமாக மகத்துவதற்கும் சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ்.ஓ.பி ஆகியோரது திரைக்கதை எளிமையான கதைக்கருவுக்கு மிகப்பெரிய வலிமையாக அமைந்திருக்கிறது.

மலையாள இயக்குநர் நித்திஷ் சகாதேவ், எதார்த்தமான வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மிக நேர்த்தியான காட்சிகள் மூலம் நகைச்சுவையாக இருக்கிறப்பதோடு  குறிப்பாக திரைப்படம் முழுவதையும் மலையாளத் திரைப்படம் போன்று கையாண்டது தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

மொத்தத்தில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இந்த வருட பொங்கலுக்கு மக்கள் மனதில் ஆட்சி அமைப்பது உறுதி.

error: Content is protected !!