கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கௌசிக், பிரதிபா, அருள் சங்கர், சிங்கம் புலி, சிலுமிஷம் சிவன்,  கஞ்சா கருப்பு, அலெக்ஸ் பாண்டியன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அலெக்ஸ் பாண்டியன்.

ஒளிப்பதிவாளர் :- பிரஹத் முனியசாமி.

படத்தொகுப்பாளர் :- லோகேஷ்வர்.

இசையமைப்பாளர் :- என்.ஆர். ரகுநந்தன்.

தயாரிப்பு நிறுவனம் :- லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி.

தயாரிப்பாளர் :-  டாக்டர். ஆர். பிரபாகர் ஸ்தபதி, ஸ்ரீ துர்காதேவி பாண்டியன், கார்த்திக் வீரப்பன்.

ரேட்டிங் :- 2.75/5.

அந்த கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கதாநாயகன் கெளசிக், கதாநாயகி பிரதீபாவை பார்த்தவுடன் காதலில் வசப்படுகிறார்.

கதாநாயகன் கெளசிக்,ஒருதலை காதலை வளர்ப்பதற்காக கதாநாயகி பிரதீபா படித்துக் கொண்டிருக்கும் கல்லூரியில் உடனடியாக சேர்ந்து விடுகிறார்.

கதாநாயகன் கெளசிக், மற்றும் கதாநாயகி பிரதீபா இருவரும் கண்களால் மட்டுமே தங்களுடைய காதலை பரிமாறிக் கொண்டாலும், காதலை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்.

இதற்கிடையே, கதாநாயகன் கெளசிக் தன்னுடைய நண்பனின்  காதலை சேர்த்து வைப்பதற்காக பதிவு திருமணத்திற்கு உதவி செய்யும் விதமாக தன்னுடைய  ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை பதிவு திருமணத்திற்காக கொடுக்கிறார்.

அதேபோல் பெண் சார்பாக கதாநாயகி பிரதீபாவும் தனது ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை கொடுக்கும் நிலையில் பதிவு திருமணம் நடக்க வேண்டிய ஜோடிகளுக்கு பதிலாக கதாநாயகன் கெளசிக் மற்றும் கதாநாயகி பிரதீபாவுக்கு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக திருமண பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டு விடுகிறது.

இந்த பதிவு திருமணம் விசயம்  கதாநாயகி பிரதீபாவின்  குடும்பத்தாருக்கு தெரியவர பெரிய சிக்கலாகி விடுகிறது.

இந்த இந்த பதிவு திருமணம் சிக்கலில் இருந்து கதாநாயகி பிரதீபாவை காப்பாற்ற வேண்டுமென முயற்சியில் ஈடுபடும் கதாநாயகன் கெளசிக்குக்கு கதாநாயகி பிரதீபா பற்றிய வேறு ஒரு தகவல் தெரிய வருகிறது.

அந்த தகவலால் கதாநாயகன் கெளசிக்  பேரதிர்ச்சியடைகிறார்  அந்த தகவல் என்ன ?, கதாநாயகன் கெளசிக்கின் காதல் வெற்றி பெற்றதா? பெறவில்லையா?  என்பதுதான் இந்த ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக கௌசிக் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் கெளசிக், காதல் கதைக்கு எற்ற பொருத்தமான முகமாக இருக்கிறார்.

கிராமத்தில் உள்ள இளைஞராக அருமையான நடிப்பு மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனத்தை ஈர்க்க

தன்னுடைய காதலை கதாநாயகி பிரதீபாவிடம் வெளிக்காட்ட முடியாமல் மனதளவில் தவிக்கும் காட்சிகளிலும், தனக்கே தெரியாமல் நடந்த தவறால் தண்டிக்கப்படும் போதும், அவரது அவருடைய சிறப்பான நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கலங்க வைத்து விடுகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இறுதிக் கட்டக்காட்சியில் தனது  காதலிக்காக கதறும் காட்சியில் ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றுவிடுகிறார்.

இந்த ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிரதீபா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரதீபா குடும்ப பாங்கான முகம், சுமாரான அழகு மற்றும் நடிப்பு. கிறிஸ்டினா என்ற  கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

அருள் டி.சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு  திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சில்மிஷம் சிவா, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படத்தின் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன்  கதாபாத்திரங்களில், நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரஹத்  முனியசாமியின் ஒளிப்பதிவு மூலம், திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார.

இசையமைப்பாளர்  என்.ஆர். ரகுநந்தனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

காதல் கதையை உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாடும் விதமாக சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்.

மொத்தத்தில், ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

error: Content is protected !!