’மெஸன்ஜர்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் நடிகைகள்:- ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, பாத்திமா நஹும், வைஷாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரமேஷ் இளங்கமணி.

ஒளிப்பதிவாளர் :- பால கணேசன் ஆர்.

படத்தொகுப்பாளர் :- பிரசாந்த் ஆர்.

இசையமைப்பாளர் :- அபுபக்கர் எம்.

தயாரிப்பு நிறுவனம் :-  பிவிகே பிலிம் பேக்டரி.

தயாரிப்பாளர் :- பி.விஜயன்.

ரேட்டிங் :- 2.5./5.

தான் உயிருக்கு உயிராய் காதலித்த தனது காதலி மனிஷா ஸ்ரீ, தன்னை விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால்  தன்னுடைய காதல் தோல்வியால் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை செய்து  கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக் முகநூலில் இருந்து  குறுந்தகவல் தொடர்ந்து  வந்து கொண்டே இருக்கிறது.

கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக் முகநூலில் இருந்து வந்த குறுந்தகவலை திறந்து பார்க்கிறார்.

முகநூலில் இருந்து வந்த குறுச்செய்தியில் நீங்கள் “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில்  இருப்பார்கள்” என்ற செய்தி உள்ளது.

அதை விட மிகப்பெரிய அதிர்ச்சிகரமான விஷயம்  என்னவென்றால், கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக்கு குறுச்செய்தி அனுப்பிய அந்த பெண் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விபத்தில் இறந்து விட்டார் என தகவல் கிடைக்க இறந்த அந்த பெண் தனக்கு எப்படி  குறுந்தகவல் அனுப்பு முடியும் என கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக் அதிர்ச்சி அடைகிறார்.

குறுச்செய்தியை அனுப்பிய அந்த பெண் உண்மையில் இறந்து விட்டாரா  என்பதை அந்த பெண்ணின் சொந்த கிராமத்தில் சென்று விசாரிக்க தொடங்கும் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக்கு மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது.

குறுச்செய்தியை அனுப்பிய அந்த பெண் உண்மையிலே இறந்து விட்டாரா?, இறக்கவில்லையா?, அந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் என்ன ?  என்பதுதான் இந்த ‘மெஸன்ஜர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “மெஸன்ஜர்”  திரைப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் நடித்திருக்கிறார்.
 
கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் தன்னுடைய நடிப்பு மூலம் அனைத்தையும் மிக தனக்கு கொடுக்கப்பட்ட  கதாபாத்திரத்திற்கு முழுமையாக உழைத்திருக்கிறார்.

இந்த “மெஸன்ஜர்”  திரைப்படத்தில் கதாநாயகியாக மனிஷா ஸ்ரீ நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

இந்த “மெஸன்ஜர்”  திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக பாத்திமா நஹும், நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் பாத்திமா நஹும், கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற அழகோடும் முகத்தோடும்,  எதிர்பார்ப்புகளோடும் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் பாத்திமா நஹுமின், தோழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன், மிக அழகாக  திரைப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்.

மற்றொரு கதாநாயகி பாத்திமா நஹும், தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா ரவி, காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், மற்றொரு கதாநாயகி பாத்திமா நஹும், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியதர்ஷினி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும்  கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பொருத்தமான தேர்வுவாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் பால கணேசன்.ஆர், ஒளிப்பதிவு மூலம் அனைத்து காட்சிகளையும் ரசிக்க வைத்திருப்பதோடு, மட்டுமல்லாமல் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளையும் பளிச்சென்று மிகச்சிறப்பாக  காண்பித்திருக்கிறார். 

இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும்  மற்றும் காட்சிகளை ரசிக்க வைக்கும் விதத்தில் பயணித்திருக்கிறார்.

பார்க்காத காதல், ஒருவர் பார்த்து மற்றொருவர் பார்க்காத காதல் என்று தமிழ் திரைப்பட உலகில் பல காதல் கதைகள் பார்த்திருக்கிறோம், ஆனால், இந்த காதல், இதுவரை யாரும் சிந்திக்காத கதை ஒன்றை மிகவும் சிறப்பாக இயக்கி தரமான திரைப்படத்தை மிகவும் வித்தியாசமான கதைக்கருவோடு கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி.

மொத்தத்தில், ’மெஸன்ஜர்’  திரைப்படம் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கிறது.

error: Content is protected !!