வல்லமை திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பிரேம்ஜி, திவதர்ஷினி, தீபா சங்கர், வழக்கு என் முத்துராமன், சி.ஆர்.ரஜித், சூப்பர்குட் திலீபன், சுப்ரமணி, சுப்பிரமணியன், விது, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கருப்பையா முருகன்.
ஒளிப்பதிவாளர் :- சூரஜ் நல்லுசாமி.
படத்தொகுப்பாளர் :- சி கணேஷ் குமார்.
இசையமைப்பாளர் :- ஜி.கே.வி.
தயாரிப்பு நிறுவனம் :- பேட்லர்ஸ் சினிமா.
தயாரிப்பாளர் :- கருப்பையா முருகன்.
ரேட்டிங்:- 2.5./5.
தன் காதல் மனைவியை இழந்து சொந்த ஊர் மற்றும் சொந்த பந்தங்களை விட்டு விட்டு கிராமத்தில் இருந்து கதாநாயகன் பிரேம்ஜி தனது மகள் திவதர்ஷினி அழைத்துக் கொண்டு சென்னைக்கு பயணப்படுகிறார்.
தன் காதல் மனைவியை இழந்த துக்கத்தால் கதாநாயகன் பிரேம்ஜி இரண்டு காதுகளும் கேட்காமல் அடுத்தவர்கள் பேசுவதை கேட்பதற்காக சிறப்பு கருவி பொருத்தி பிறர் பேசுவதை கேட்டுக்கொள்கிறார்.
சென்னையில் மிகக் குறைவான வாடகையில் வீடு ஒன்று எடுத்துகொண்டு தன் மகள் திவதர்ஷினியை தங்க வைத்து கொண்டு கதாநாயகன் பிரேம்ஜி போஸ்டர் ஓட்டும் வேலையை செய்து கொண்டு தனது மகள் திவதர்ஷினியை படிக்க வைத்து தனது பிழைப்பை நடத்திக் கொண்டு வருகிறார்.
தனது மகள் திவதர்ஷினி படிக்கும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது மகள் திவதர்ஷினி தனது பிறப்புறுப்பில் ரத்தம் வந்ததாக கூற உடனடியாக மகள் திவதர்ஷினியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.
மருத்துவமனைக்கு சென்று தனது மகள் திவதர்ஷினி பூப்பெய்து விட்டதாக மருத்துவமனிடம் கூறி அதற்கு என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என கதாநாயகன் பிரேம்ஜி மருத்துவரிடம் அறிவுரை கேட்கிறார்.
மகள் திவதர்ஷினியை பரிசோதித்த மருத்துவர் உங்கள் மகள் திவதர்ஷினி பூப்படையவில்லை எனவும் யாரோ ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார் என மருத்துவர் கூறுகிறார்.
இதனால் உடைந்து போகும் கதாநாயகன் பிரேம்ஜி அடுத்து என்ன செய்தார் மகள் திவதர்ஷினியின் பாலியல் சீண்டலுக்கு காரணமானவர்கள் யார்? தன் மகளின் பாலியல் சீண்டலுக்கு காரணமானவர்களை கதாநாயகன் பிரேம்ஜி பழி தீர்ந்தாரா? பழி தீர்க்கவில்லையா? என்பதுதான் இந்த வல்லமை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வல்லமை திரைப்படத்தில் கதாநாயகனாக பிரேம்ஜி நடித்திருக்கிறார்.
மிக எளிமையான கதாபாத்திரத்தில் நடிகர் பிரேம்ஜி நடிப்பின் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
திரைப்படத்துறைக்கு நடிப்பதற்கு அந்த காலங்களில் இருந்து இப்படியொரு கதாபாத்திரத்தில் பிரேம்ஜி இதற்கு முன் நடித்ததில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த வல்லமை திரைப்படத்தில் தனது மகளுக்கு கடந்த கொடுமையை எப்படி எல்லாம் பழி தீர்க்க வேண்டும்.
தனது மகளுக்கு பொறுப்புள்ள தந்தையாக மிகவும் உருக்கமான ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
கதாநாயகன் பிரேம்ஜி மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவதர்ஷினி மிகவும் எதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருந்தார்.
தனது தந்தையோடு அமர்ந்து பேசும் காட்சிகளில் இருக்கட்டும், தனது தந்தையின் மடியில் படுத்துக் கொண்டு கவலைப்படும் காட்சிகளாக இருக்கட்டும் என பல காட்சிகளில் மிக அருமையாக நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார்.
திரைப்படத்தில் நடித்திருக்கும் தீபா சங்கர், வழக்கு என் முத்துராமன், சி.ஆர்.ரஜித், சூப்பர்குட் சுப்ரமணி, சுப்பிரமணியன், விது, திலீபன், மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்
இசையமைப்பாளர் ஜி.கே.வி. இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
ஒரு நல்ல அருமையான கதையை கையில் எடுத்த இயக்குனர் கருப்பையா முருகன் மிகப புதுமையான திரைக்கதையை அமைத்து இருந்தால் மிக பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.
திரைப்படத்திற்கு மற்றொரு பலம் என்றால் அது வசனம் மட்டுமே ஆங்காங்கே, தனது வசனத்தின் மூலம் சாட்டையடி கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர்.
திரைப்படத்தில் ஒரு சில குறைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும் இப்படி ஒரு கதையை கருவிற்காக உருவாக்கிய இயக்குனர் கருப்பையா முருகன் பாராட்டலாம்.,
மொத்தத்தில் – வல்லமை திரைப்படம் பெண் குழந்தைகளைப் பெற்ற தந்தைகளின் வலி..











