‘வா வாத்தியார்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- கார்த்தி, கிருத்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்தராஜ், ஜி. எம். சுந்தர், கருணாகரன், ஷில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக், நிழல்கள் ரவி, யார் கண்ணன், நிவாஸ் ஆதிதன், பி. எல். தேன்னப்பன், வித்யா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- நலன் குமாரசாமி.
ஒளிப்பதிவாளர் :- ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC.
படத்தொகுப்பாளர் :- வெற்றி கிருஷ்ணன்.
இசையமைப்பாளர் :- சந்தோஷ் நாராயணன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டுடியோ கிரீன்.
தயாரிப்பாளர்கள் :- கே. ஈ. ஞானவேல்ராஜா, நேஹா ஞானவேல்ராஜா.
ரேட்டிங் :- 3.5./5.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என இரண்டு தரமான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் நலன் குமாரசாமி பல வருடங்கள் கழித்து இயக்கியிருக்கும் திரைப்படம் வா வாத்தியார்.
ராஜ்கிரண் தீவிர புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பக்தனாக வாழ்ந்து வருகிறார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் திரையரங்கில் புரட்சித்தலைவரின் குடியிருந்த கோவில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இறுந்துவிட அதே நாளில், அதே நேரத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பக்தனான ராஜ்கிரணுக்கு பேரன் கதாநாயகன் கார்த்தி பிறக்கிறார்.
தனது பேரன் கதாநாயகன் கார்த்தியை எம்ஜிஆரின் அடுத்த அவதாரமாக பார்க்கும் ராஜ்கிரண் மிகவும் நேர்மையாக வளர்க்கிறார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் நடிப்பது போலவே சிறந்த குணத்துடன் வளர்க்க வேண்டும் என ராஜ் கிரண் நினைக்கிறார்.
தன் தாதா ராஜ்கிரண் வேண்டுகோளுக்கு இணங்க பேரன் கதாநாயகன் கார்த்திக்குள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆராகவே வளர்கிறார்.
நடிகர் நம்பியார் கதாபாத்திரத்தின் மீது இன்ஸ்பியராகி. காவல்துறையில் வேலைக்கு இருக்கும்,பேரன் கதாநாயகன் கார்த்தி தவறான வழியில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்,
அரசாங்கத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்கும் மஞ்சள் குழு என்ற அமைப்பின் மீது அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்வதற்காக காவல்துறை குழுவில் கதாநாயகன் கார்த்திக்கும் இணைகிறார்.
கதாநாயகன் கார்த்தி பகல் நேரங்களில் நம்பியார் போல் கெட்டியாகவும் இரவு நேரங்களில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் போல் நல்லவராகவும் கெட்அப் மாற்றி கொண்டு மஞ்சள் குழுவுக்கு உதவி செய்கிறார்.
ஒரு கட்டத்தில் மஞ்சள் குழுவுக்கு உதவி செய்து கொண்டு இருப்பதை தெரிந்து கொண்ட காவல் துறையினர் கதாநாயகன் கார்த்தியை நெருங்குகிறது.
அரசுக்கு எதிராக பணி புரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் குழுவை காவல்துறையினர் கைது செய்தார்களா?, கைது செய்யவில்லையா?,
மஞ்சள் குழுவுக்கு உதவி செய்து கொண்டு இருப்பதை தெரிந்து கொண்ட காவல்துறையினரிடம் கதாநாயகன் கார்த்தி சிக்கினாரா?, சிக்கவில்லையா?,
இந்த வா வாத்தியார் திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருக்கிறார்.
ராமு என்கிற ராமேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கார்த்தி ஆரம்ப காட்சிகளில் லஞ்சம் வாங்குவது, ரவுடிகளுக்கு உதவுவது என்று நம்பியார் வேலைகளை செய்கிறார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கதை என கூறிவிட்டு கதாநாயகன் கார்த்தியை இப்படி காட்டுகிறார்களே என்று சற்று அதிர்ச்சி ஏற்படுகிறது.
ஆனால் அதே கதாபாத்திரம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரமாக மாறுவது எதிர்பார்க்காத திருப்பமாக உள்ளது.
கதாநாயகன் கார்த்தி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல் ஹேர் ஸ்டைல் காஸ்ட்யூம் எல்லாமே பொருந்தி இருந்தாலும் கதாநாயகன் கார்த்தியின் முகம்தான் இந்த கதாபாத்திரத்தில் தெரிகிறது.
இந்த வாத்தியாரே திரைப்படத்தின் கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டிக்கு திரைக்கதையோடு பயணிக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும், நடிப்பை விடவும், அழகு மற்றும் நடனம் மூலமாக மட்டுமே ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ரசிகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், வழக்கம் போல் தனது அழுத்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், மீண்டும் தனது தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத், நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பி.எல்.தேனப்பன், யார் கண்ணன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாபி சிம்ஹா என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக உள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் சிறப்பாக உள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை திரைப்படத்திற்கு ஒரு கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது.
கதைக்களம் மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களின் வடிவமைப்பையும் மிக வித்தியாசமாக மிக சிறப்பாகவும் கையாண்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார்.
அரசியல் அம்சத்தோடு பயணிக்கும் திரைக்கதையில் எம்.ஜி.ஆர் அம்சம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை மிகவும் கமர்ஷியலாக சொல்லி, அழுத்தமான அரசியலையும் அலட்டிக் கொள்ளாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.
மொத்தத்தில், ‘வா வாத்தியார்’ புரட்சித்தலைவரின் ரசிகர்கள் மத்தியில் வாகை சூடும்











