’வெளவல்ஸ்’ (Vowels) திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- யுகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் அய்யப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நந்து, தீபக் பரமேஷ், காஜல் சவுத்ரி, பீட்டர் கே, ஷரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜேதா வஷிதா, சித்து குமரேசன், பரத் போபண்ணா,
விஜ்யேத வசிஸ்ட், தர்ஷினி, அருள் குமார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- திலிப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன்.
ஒளிப்பதிவாளர் :- கீர்த்தன் பூஜாரி, சந்தீப் அலுரி.
படத்தொகுப்பாளர் :- ஹரிஷ் கொம்மே.
இசையமைப்பாளர் :- சர்வணா சுப்ரமணியம்.
தயாரிப்பு நிறுவனம் :- .
தயாரிப்பாளர் :- ரித்தி சித்தி பிலிம்ஸ் – ராஜு ஷெரேகர்.
மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா.
ரேட்டிங் :- 2.5../5.
ஐந்து கதைகளை ஜந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கும் திரைப்படங்களை ஒன்றிணைத்து இதை ஒரு முழு நீளத் திரைப்படமாக கொடுத்திருப்பது தான் இந்த ’வெளவல்ஸ்’ (Vowels).
ஐந்து திரைப்படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால் காதலை மையமாக வைத்துக் கொண்டு எழுதப்பட்ட கதை மற்றும் திரைக்கதை மட்டுமே, அதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த கதைகளில் இல்லை.
இந்த ஐந்து கதைகளும் உயிர் தொடர்புடையது என்பதால் மட்டுமே ’வெளவல்ஸ்’
(உயிரெழுத்துக்கள்) என்று இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
முதல் கதையில் கற்பனை கலந்த காட்சியை நிஜமாக்க நினைக்கும் முட்டாள்தனமான காதலால் நடக்கும் கொலைகள் தான் இந்த கதை!
இரண்டாவது கதையில் ஆபத்தான பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான காதலால், தான் பாதிக்கப்படுவதோடு, தன்னை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பை உணர்த்துவது தான் இந்த கதை!
மூன்றாவது கதையில் காதல் பிரிவால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கும் முட்டாள் மனிதர்களின் மனங்களை உணர்வுப்பூர்வமான காதல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிதான் இந்த கதை!
நான்காவது கதையில் அன்பு செலுத்துபவர்கள் மீது சந்தேகப்படாமல், எந்தவிதமான யோசனையும், தயக்கமும் இன்றி அவர்களுடனும், அவர்களது காதல் உடனும் பயணிக்க வைப்பதுதான் இந்த கதை!
ஐந்தாவது கதையில் உதடுகள் சொல்லும் காதல் பொய், உள்ளத்தில் இருக்கும் காதலே மெய், என்பதை எண்ணங்களின் பிரதிபலிப்பான கனவுகள் மூலம் உணர்த்துவதுதான் இந்த கதை?
இப்படிப்பட்ட ஐந்து கதைகள் மூலம் காதலின் வெவ்வேறு கோணத்தில் உணர்வுகளை பார்வையாளர்களின் மனதுக்கு இறக்கும் முயற்சி தான் இந்த ’வெளவல்ஸ்’ (Vowels) திரைப்படம்.
ஐந்து கதைகளில் நடித்திருக்கும் நடிகர்கள் யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் யூகி சேதுவின் கதாபாத்திரம் காட்சிகள் பேசும் பேசும் வசனங்களும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது. கல்லூரி மாணவராக பல திரைப்படங்களில் நடித்த சின்னி ஜெயந்த், கல்லூரி பேராசிரியாக நடித்திருப்பதும், அவரது முதிர்ச்சியான வயதில் வரும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை சொல்லியிருக்கும் விதத்திற்கான தனி பாராட்டுகளை கொடுக்கலாம்.
ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி, ஐந்து கதைகளையும் வித்தியாசப்படுத்தி ஒளிப்பதிவு மூலம், முதல் மற்றும் ஐந்தாவது கதைகளுக்கு பயன்படுத்திய வண்ணம் மற்றும் கோணங்கள் கவனம் ஈர்க்கும்படியாக உள்ளது.
இசையமைப்பாளர் சரவண சுப்பிரமணியத்தின் இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
திரைப்படத்தின் தொடக்கம் முதல் மற்றும் முடிவு வரை குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் சொல்ல வேண்டிய விசயங்களை மிக சுவாரஸ்யமாகவும், தெள்ளத் தெளிவாகவும் ஐந்து இயக்குநர்களும் சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஐந்தாவதாக இடம்பெறும் கதை மட்டும் சில இடங்களில், சிலருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இயக்குனர்கள் திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஆளுக்கொரு கதையை எழுதியிருந்தாலும், அனைவரும் காதலை கருப்பொருளாக கொண்டு எழுதியிருக்கும் கதை, மற்றும் திரைக்கதை அதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்த விதம், முழு திரைப்படத்தையும் தொய்வின்றி நகர்த்தி சென்றாலும், எந்த கதையும் அழுத்தமாக இயக்கி இருக்கிறார்கள்.
மொத்தத்தில், ’வெளவல்ஸ்’ (Vowels) தமிழ் திரைப்படம் உலகில் புதிய முயற்சி.











