‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன்,எம். எஸ். பாஸ்கர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விஜய்.

ஒளிப்பதிவாளர் :- அரவிந்த் கிருஷ்ணா.

படத்தொகுப்பாளர் :- ஆன்டனி.

இசையமைப்பாளர் :- ஹாரிஸ் ஜெயராஜ்.

தயாரிப்பு நிறுவனம் :- டி ஸ்டூடியோஸ், சன்னி டென்வி (டென்வி புரொடக்ஷன்).

தயாரிப்பாளர் :- டி ஸ்டூடியோஸ், சன்னி டென்வி (டென்வி புரொடக்ஷன்) பிரபா பிரேம்குமார்.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

ரேட்டிங் :-  3.5./5.

கதாநாயகன் மதும்கேஷ், தாயிடம் சங்கீதம் கற்றுக் கொள்ளும் கதாநாயகி ஜியா சங்கரை சிறுவயது முதலே தூரத்தில் இருந்து பார்ப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம் என்ற மனநிலையில் வாழ்ந்து வரும்  கதாநாயகன் மதும்கேஷ், கதாநாயகி ஜியா சங்கரை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

கதாநாயகி ஜியா சங்கர், மியூசிக் கிளாசில் இருக்கும் நண்பர் அர்ஜுன் அசோகனை கதாநாயகி ஜியா சங்கர்  காதலிக்கிறார்.

இதற்கிடையே கதாநாயகி ஜியா சங்கர் சிறு விபத்தில் மறதி நோயால்  பாதிக்கப்படுகிறார்.

காலை முதல் இரவு வரை தூங்க சென்று காலையில் எழுந்தால் முந்தைய நாளில் என்ன நடந்தது என்பதை  அனைத்தையும் மறக்கும்  நிலைக்கு சென்று விடுகிறார்

கதாநாயகி ஜியா சங்கருக்கு தான் யார் ? என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தவிக்கும் கதாநாயகி ஜியா சங்கர், காதலன் என்று சொல்லி கதாநாயகன் மதும்கேஷ் அறிமுகமாகி பயணிக்க தொடங்குகிறார்.

கதாநாயகன் மதும்கேஷ்.  கூறும் இந்த பொய், கதாநாயகி ஜியா சங்கரின் வாழ்க்கையில் எப்படியாப்பட்ட  மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கதாநாயகன் மதும்கேஷ்யை கதாநாயகி ஜியா சங்கர் காதலித்தாரா?, காதலிக்கவில்லையா?,

மியூசிக் கிளாசில் இருக்கும் நண்பர் அர்ஜுன் அசோகனை கதாநாயகி ஜியா சங்கர் காதலில் ஒன்று சேர்ந்தார்களா?, காதலில் ஒன்று சேரவில்லையா?,

திரைப்படத்தின் இறுதியில் கதாநாயகி ஜியா சங்கர் காதலில் யாருடன் இணைந்தார் என்பதுதான் இந்த ‘காதல் ரீசெட் ரிப்பீட்‘ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக மதும்கேஷ், நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் மதுமகேஷ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

சிறு வயது முதல் கதாநாயகி ஜியா சங்கர் மீது காதல் இருந்தாலும், அதை கொஞ்சம் கூட வெளிக்காட்டாமல் ஏக்கத்தோடு பயணிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அறிமுக கதாநாயகன் மதுமகேஷ் மிகவும் கச்சிதமாக  பொருந்தியிருக்கிறார்

இந்த ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகியாக ஜியா சங்கர் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஜியா சங்கர், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.

கதையில் முக்கியத்துவம் உள்ள காதல் கதை என்பதால் கதாநாயகி ஜியா சங்கருக்கு  நடிப்பதற்கு இந்த திரைப்படத்தில் அதிக அளவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கதையில் முக்கியமான  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் அசோகன், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

சிறிய கதாபாத்திரம்  என்றாலும் விஜி சந்திரசேகர், மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி ஜியா சங்கரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், போலி டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  எம்.எஸ்.பாஸ்கர் அனைத்து நடிகர்களும் அனுபவம் வாய்ந்த நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  அரவிந்த் கிருஷ்ணா,  திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளிலும் பசுமையை மற்றும் அழகையும் சிந்தாமல் சிதறாமல் தன் ஒளிப்பதிவு மூலம் திரைப்படமாக்கி  காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள், மற்றும் பின்னணி இசை காதல் கதைக்கு உயிரூட்டியிருக்கிறது.

முக்கோண காதல் கதையை மிகவும் எளிமையான காட்சிகளை திரைக்கதையின் முக்கியத்துவம் உள்ள காட்சிகளாக வைத்துக் கொண்டு திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயங்கி ரசிகர்களுக்கு புதிய வடிவில் கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் விஜய்.
 
மொத்தத்தில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ கண்டிப்பாக பார்க்கலாம்.

error: Content is protected !!