‘வித் லவ்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சரவணன், தேனி முருகன், “கலைமாமணி” சரவணன்,
ஹரிஷ் குமார், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணா, சித்தார்த் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மதன்.
ஒளிப்பதிவாளர் :- ஷ்ரேயாஸ் கிருஷ்ணா.
படத்தொகுப்பாளர் :- K.சுரேஷ் குமார்.
இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.
தயாரிப்பு நிறுவனங்கள் :- சீயோன் பிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்.
தயாரிப்பாளர்கள் :- சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான்.
மக்கள் தொடர்பு – யுவராஜ்.
ரேட்டிங் :- 4/5.
நடிகர் சசிகுமார் சிம்ரன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியை தமிழ் திரைப்பட உலகிற்கு தேடிக்கொடுத்த திரைப்படம் மட்டுமல்லாமல் ஆஸ்கரை நோக்கி படையெடுத்த தமிழ்த் திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’.
இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார்.
மேலும் இந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அடுத்து யாரை வைத்து திரைப்படத்தை இயக்கப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ‘வித் லவ்’ திரைப்படத்தின் கதாநாயகனாக களமிறங்கி திரைப்பட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
சிறுவயது பள்ளி பருவத்தில் மற்றும் கல்லூரியில் வரும் முதல் காதல் பலருடைய வாழ்க்கையில் தோல்வியில் மட்டுமே முடிந்திருக்கிறது.
அந்தக் காதல் தோல்வியில் முடிந்தாலும் இருவருக்குமே அதன் நினைவுகள் மட்டும் ஏதாவது ஒரு தருணத்தில், இதயத்தை வருடிக் கொண்டே இருக்கும்.
அப்படி நமது வாழ்வில் நடந்த ஒவ்வொரு தருணத்திலும் நமது முதல் காதலை நினைவுபடுத்துவது மட்டுமின்றி, அந்தக் காதலையும் காதலன் காதலியையும் மீண்டும் தேடிச் செல்லும் ஒரு இனிமையான பயணத்தை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் பள்ளிப் பருவத்தில் நடந்த காதலை மனதளவில் தூண்டுவது தான் இந்த ‘வித் லவ்’ திரைப்படத்தின் கதை.
கதாநாயகன் அபிஷன் ஜீவிந்த் திருமணத்திற்காக தனது அக்கா பார்த்த கதாநாயகி அனஸ்வரா ராஜனை ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்கும் நிலையில் இருவரும் தங்களைப் பற்றிய விபரங்களை பரிமாறி கொண்டிருக்கும் போது, தங்களுடைய முதல் காதல் மற்றும் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் கதாநாயகி அனஸ்வரா ராஜானுக்கு திடீரென ஒரு யோசனை தோன்ற அதன் மூலம், கதாநாயகன் அபிஷன் ஜீவிந்த், கதாநாயகி அனஸ்வரா ராஜன், இருவரும் இணைந்து தங்களது முதல் காதலில் கிடைத்த காதலன் காதலியை தேடிச் செல்கிறார்கள்.
கதாநாயகன் அபிஷன் ஜீவிந்த், கதாநாயகி அனஸ்வரா ராஜன், இருவரும் இணைந்து தேடிய முதல் காதலில் கிடைத்த காதலன் காதலியை தேடி கண்டு பிடித்தார்களா?, கண்டு பிடிக்கவில்லையா?,
கதாநாயகன் அபிஷன் ஜீவிந்த், கதாநாயகி அனஸ்வரா ராஜன், இருவரும் இணைந்து முதல் காதல் தேடுதல் பயணத்தில் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததா?, காதல் மலரவில்லையா?, என்பதுதான், இந்த ‘வித் லவ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘வித் லவ்’ திரைப்படத்தின் கதையின் நாயகனாக அபிஷன் ஜீவிந்த், நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அபிஷன் ஜீவிந்த், பள்ளிப் பருவம் மற்றும் இளமை பருவம் என இரண்டு தோற்றங்களுக்கும் கனக்கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருப்பதோடு, நடிப்பின் மூலம் திரைப்பட ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அபிஷன் ஜீவிந்த், இவரை பார்த்த உடனே பிடிக்கவில்லை என்றாலும், பார்க்க பார்க்க கண்டிப்பாக பிடித்துப் போகும், அளவிற்கு தமிழ் திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடும் அம்சங்கள் நிறைந்தவராக இருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அபிஷன் ஜீவிந்த், தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராகவும் வெற்றி பெற்ற இவர் கதையின் நாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார்.
இந்த ‘வித் லவ்’ திரைப்படத்தின் கதையின் நாயகியாக அனஸ்வரா ராஜன், நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், மிகவும் எளிமையான அழகோடு, அசத்தலான அருமையான நடிப்பின் மூலம் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், பின்னணி குரலில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் அவரது உடல் மொழி அனைத்தும் அழகான அசைவுகளுக்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கும்.
அனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவ்யா அனில், சிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் முதல் காதல் நினைவுகளை மலரச் செய்யும் மாயாஜாலத்தை தன் சிறப்பான நடிப்பின் மூலம் நிகழ்த்தியுள்ளார்.
கதையின் நாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பருத்திவீரன்’ சரவணன், கதையின் நாயகனின் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், கதையின் நாயகி பள்ளி தோழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டிம்பிள் கண்ணா, சாச்சனா, கதையின் நாயகனின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி அனைவரது கதாபாத்திரங்களின் பயணம் சிறியதாக இருந்தாலும், திரைக்கதையில் ஓட்டத்திற்கு ஏற்றவாறு அனைவரும் சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் பள்ளி பருவத்தில் இழந்த காதல் நினைவுகளோடு பயணிக்க வேண்டும், என்பதில் அதிக அளவில் கவனம் செலுத்தியது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின், ஒளிப்பதிவு கூட சில இடங்களில் காதல் பேசியிருப்பது திரைப்படத்தில் தெரிகிறது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருந்தாலும், திரைப்படத்தில் பின்னணி இசை முதல் காதல் போல் இனிமையாக உள்ளது.
முதல் பள்ளிப் பருவக் காதல் அனுபவங்களை மனதில் அசைபோடும் நினைவுகளை கூறும் கதைகள் தமிழ் திரைப்பட உலகில் ஏற்கனவே வெளியான பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பாக கையாண்டிருந்தாலும், தற்போது உள்ள காலக்கட்ட இளைஞர்களுக்கு ஏற்றபடியான காட்சிகளை வடிவமைத்து திரைப்பட ரசிகர்களை மகிழ்விப்பது எப்படி என்பதின் மூலம் இந்த திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் மதன்.
மொத்தத்தில், ‘வித் லவ்’ திரைப்படம் பள்ளி பருவத்தில் வரும் முதல் காதலும் துள்ளி கொண்டு ரசிகர்கள் மனதில் கொள்ளை கொள்ளும் அளவிற்கு கவிதையாக சொல்லியிருக்கிறார்.











