’மேட் இன் கொரியா’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பிரியங்கா அருள் மோகன், பார்க் ஹை-ஜின், நோ ஹோ-ஜின், ரிஷிகாந்த், ஜாங் ஜேஹியோன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ரா. கார்த்திக்.
ஒளிப்பதிவாளர் :- பிரசன்ன குமார்.
படத்தொகுப்பாளர் :- அந்தோணி.
இசையமைப்பாளர் :- ஹேஷாம் அப்துல் வஹாப்.
தயாரிப்பு நிறுவனம் :- ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்.
தயாரிப்பாளர் :- ஸ்ரீநிதி சாகர்.
மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா.
ரேட்டிங் :- 2.5./5.
தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை பிரியங்கா மோகன், தற்போது தனது புதிய திரைப்படமான ‘மேட் இன் கொரியா’ (Made in Korea) மூலம் மீண்டும் ரசிகர்கள் கவனம் ஈர்த்து வருகிறார்.
சிறுவயதில் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கொரியா நாட்டின் இசை மற்றும் நடனத்தால் ஈர்க்கப்பட்டு கதாநாயகி பிரியங்கா அருள் மோகன், கொரியா நாட்டிற்கு ஒரு முறையாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆசையை மனதில் ஆழமாக வளர்த்துக் கொள்கிறார்.
கொரியா நாட்டிற்கு செல்லும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கதாநாயகி பிரியங்கா அருள் மோகன்,, தன்னுடைய வாழ்க்கையில் காதல், அதனால் வரும் பிரச்சனைகள் என்று பல விசயங்களை எதிர்கொண்டாலும், கொரியா நாட்டிற்கு செல்லும் ஆசையை மட்டும் கைவிடாமல் இருக்கிறார்.
இந்த நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கதாநாயகி பிரியங்கா அருள் மோகன், கொரியா நாட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தனது தந்தையின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய காதலனால் ஏமாற்றப்பட்டு, திரும்பவும் தன்னுடைய குடும்பத்தில் சேர முடியாமல் தவிக்கிறார்.
கதாநாயகி பிரியங்கா அருள் மோகனின் வாழ்க்கையில் கொரியா எத்தகைய மாற்றங்களை நிகழ்த்தியது,
கதாநாயகி பிரியங்கா அருள் மோகன் ஆசைப்பட்ட கொரியா நாட்டிற்கு சென்றாரா?, செல்லவில்லையா?, என்பதுதான் இந்த‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன், அளவான நடிப்பு மூலம் திரைப்படத்தை முழுவதையும் தனி ஆளாக தனது தோளில் சுமந்திருக்கிறார்.
மகிழ்ச்சி, பிரிவு, ஏமாற்றம், சிரிப்பு, அழுகை, காதல், சோகம், தயக்கம், தன்னம்பிக்கை என அனைத்து உணர்வுகளையும் தனது அளவான நடிப்பின் மூலம் மிகவும் நேர்த்தியாக
திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரிஷிகாந்த், முக்கியமான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜாங் ஜேஹியான் (Jang Jaehyeon) பார்க் ஹே-ஜின் (Park Hye‑jin), நோஹூ ஜின் (No Ho‑jin), ஆகிய கொரியா நாட்டிலுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் கதாநாயகி பிரியங்கா அருள் மோகன் பெற்றோராக நடித்திருக்கும் தமிழ் நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் ஒளிப்பதிவு மூலம் மூணாறு மற்றும் கொரியா நாட்டில் உள்ள லொகேஷன்கள் மற்றும் கதாபாத்திரங்களையும் அழகாக காட்சிப்படுத்தி முழு திரைப்படத்தையும், திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக ரசிக்க வைத்திருக்கிறார்
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், மற்றும் பின்னணி இசை மென்மையாகவும் பயணித்து, திரைக்கதை ஓட்டத்தில் சிறப்பு சேர்த்திருக்கிறார்,
வாழ்க்கையில் எதிர்மறையான சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை நேர்மறையான எண்ணத்தோடு எதிர்கொண்டால் அவை நம் வாழ்வை வசந்த காலமாக மாறும் என்ற நம்பிக்கையை விதைத்து வெற்றி பயணங்கள் மூலம் சாதித்து மற்றும் புதிய உறவுகளின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் அழகாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.
மொத்தத்தில், ‘மேட் இன் கொரியா’ கண்டிப்பாக திரைப்பட ரசிகர்களுக்கு பிடிக்கும்.











