‘அன்பே டயானா’  ( ‘Anbe Diana’ ) திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி, செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாரி இளவழகன்.

ஒளிப்பதிவாளர் :- ஷெல்லி கேலிஸ்ட்.

படத்தொகுப்பாளர் :- பார்த்தா MA.

இசையமைப்பாளர் :- பரத் சங்கர்.

தயாரிப்பு நிறுவனம் :- மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ்’, இரா என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர்கள்:- சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

ரேட்டிங் :-  4./5.

சென்னையில் உள்ள பெரம்பூர் பின்னணியில் நடக்கும் ஒரு தெலுங்கு பையனுக்கும், ஆங்கிலோ-இந்தியன் (Anglo-Indian) பெண்ணுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான காதல் கதையாக இந்த ‘அன்பே டயானா’ (Anbe Diana) தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஜமா’ திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்த பாரி இளவழகன் மீண்டும் கதையெழுதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17ம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை, பெரம்பூர் பகுதியில் கதாநாயகன் பாரி இளவழகன், தன் தந்தை சேத்தன், மற்றும் தாய் ரோஜா அக்கா இஸ்மத் பானு, தம்பி சுதர்சன் காந்தி, உடன் வசித்து வருகின்றார்.

அதே பெரம்பூர் பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியன் கதாநாயகி ரம்யா ரங்கநாதனை கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து கதாநாயகன் பாரி இளவழகன், காதலித்து வருகிறார்.

கதாநாயகன் பாரி இளவழகனின் காதலை ஏற்க மறுக்கும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் நட்புடன் பழகி வருகிறார்.

ஒரு தலை காதலாக பல ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் பாரி இளவழகனின் காதலுக்கு கதாநாயகி ரம்யா ரங்கநாதன் சம்மதம் தெரிவிக்கிறார்.

இந்த நிலையில், கதாநாயகி ரம்யா ரங்கநாதனின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க நிலையில் கதாநாயகன் பாரி இளவழகன் காதலை ஏற்க திடீரென்று தயக்கம் காட்டுகிறார்.

கதாநாயகன் பாரி இளவழகன், கதாநாயகி ரம்யா ரங்கநாதனின் காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல்  விலகி விலகி செல்கிறார்.

கதாநாயகி ரம்யா ரங்கநாதனின் காதலை ஏற்க மறுப்பது ஏன்?, கல்லூரி காலங்களில் இருந்து காதலித்த கதாநாயகி ரம்யா ரங்கநாதனின் விலகி விலகி  செல்வது ஏன்?,

கதாநாயகன் பாரி இளவழகன், கதாநாயகி ரம்யா ரங்கநாதன் இருவரும்  உயிருக்கு உயிராய் காதலித்த இருவரும் காதலில் ஒன்றிணைந்தார்களா?, காதலில் ஒன்றிணைவில்லையா?, என்பதுதான் இந்த ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் கதாநாயகனாக பாரி இளவழகன், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், நாம் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் பையன் போல் மிகவும் எளிமையான தோற்றத்தோடும், மிக மிக இயல்பான நடிப்பில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

கல்லூரியில் தனது காதல் ஆசையை ஆரம்பித்து பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்த காதல் கைகூடும் வேலையில், பலவிதமான குழப்பங்களால் அந்த காதலை ஏற்க மறுப்பது தன்னுடைய காதலியை  சந்திக்க தயக்கம் காட்டுவது முதலில் கண்டிப்பான தாய்க்கு கட்டுப்படும் மகனாக தன்னுடைய காதலை தன்து தாயிடம் சொல்ல முடியாமல் தவிப்பது வரை, எல்லா விதமான நடிப்பையும் பந்தா இல்லாமல் அனைத்தையும் அசால்டாக நடித்து மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இந்த ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ இந்தியன் பெண் கதாபாத்திரத்தில் மிக மிக கச்சிதமாக பொருந்துவதோடு, ஆங்கிலம் கலந்த சென்னை தமிழை அசத்தலாக உச்சரித்து அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தன்னிடம் இருந்து தன்னுடைய காதலன்  விலகிச்செல்ல முயற்சிக்கும் போது காதலனை மிரட்டுவது, காதலரின் தந்தையிடம் அதிரடியாக பேசுவது என்று என்னுடைய நடிப்பின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து  தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம்  திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம்  சேர்த்திருக்கிறார்.

கதாநாயகன் பாரி இளவழகன், தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், இவ்வளவு நாளாக தமிழ் திரைப்பட உலகில் இவரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

காலையில் மனைவி ரோஜாவிற்க்கு பயந்த கணவனாக, மாலை ஆறு மணிக்கு மேல் அனைவருக்கும் பயப்படும்   குடும்ப தலைவர் என்ற சாதாரண கதாபாத்திரத்தை தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் திரைப்படம் பார்க்க ரசிகர்களை கலகலப்பாக  வைத்திருக்கிறார்.

கதாநாயகன் பாரி இளவழகன், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஜாவின், கம்பீரமான தோற்றம், தெலுங்கு தமிழ் கலந்த வசன உச்சரிப்பு, என  கம்பீரமான நடிப்பை  வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

தனது தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சியிலும் தன் அனுபவம் வாய்ந்த நடிப்பில் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

கதாநாயகன் பாரி இளவழகன், நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி, பெங்களூர் தமிழர் கதாபாத்திரத்தில் திரைப்படம் முழுவதும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

கதாநாயகன் பாரி இளவழகன், தாய் மாமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல் முருகன், ஒரு சில காட்சிகளில் வந்தாலும் தன்னுடைய பங்கிற்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

கதாநாயகன் பாரி இளவழகன், தாய் மாமன் மகள் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் நிகிலா சங்கர், கதாநாயகன் பாரி இளவழகன், சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இஸ்மத் பானு, தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுதர்சன் காந்தி, கதாநாயகி  தாய் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகை என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், இருந்தாலும் அற்புதமான நடிப்பை கொடுத்து மிகவும் சிறப்பாக முறையில் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், இதுவரை பார்த்திராத பெரம்பூர் பகுதியை அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்.

சென்னை பெரம்பூர் பகுதியை பார்த்து பழக்கப்பட்ட இடங்களாக இருந்தாலும், தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் அப்பகுதியின் அழகியலை அதிகரிக்க  வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மனதிற்கு இதமாக உள்ளது.

பின்னணி இசை திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்.

இந்த அன்பே டயானா திரைப்படத்தை  இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பரிதி இளவழகன், மிகவும் சாதாரண காதல் கதை என்றாலும், இயல்பான திரைக்கதை மூலம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் கதாநாயகன் பாரி இளவழகன்.

மொத்தத்தில், இந்த ‘அன்பே டயானா’ குடும்பத்தோடு கொண்டாட வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!