‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன்,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- R.மகாலட்சுமி முருகன்.

ஒளிப்பதிவாளர் :- என்.எஸ்.  சதீஷ் குமார்.

படத்தொகுப்பாளர் :- ஸ்ரீகாந்த் என்.பி.

இசையமைப்பாளர் :- அஷ்வமித்ரா.

தயாரிப்பு நிறுவனம் :- ஜேபி பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- பி.ரகு.

மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)

ரேட்டிங் :-  2.5./5.

மார்வாடி வீட்டுப் பெண் கதாநாயகி சிம்ரன், தாயை, இழந்து தந்தையின் அரவணைப்பில் வளரும், நிலையில் கதாநாயகி சிம்ரன், படிக்கும் அதே கல்லூரியில்  படித்து வருகிறார்.

கதாநாயகி சிம்ரன், படிக்கும் அதே கல்லூரியில் கதாநாயகன் ஆதவ் கிருஷ்ணா படித்து வரும் நிலையில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் கதாநாயகன் ஆதவ் கிருஷ்ணா, கதாநாயகி சிம்ரனின் காதலை முதலில் புறக்கணித்தாலும், அவரது உண்மையான காதலை  புரிந்துக் கொண்டு காதலிக்க தொடங்குகிறார்.

இதற்கிடையே, கதாநாயகன் ஆதவ் கிருஷ்ணாவின் தாய் தந்தையை நேரில் சந்தித்து, தங்களது இருவருடைய காதலைப் பற்றி பேசி சம்மதம் பெறும் கதாநாயகி சிம்ரன், தன்னையும் தன்னுடைய  தந்தையையும் விட்டு பிரிந்த காசியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தனது தாயை சந்தித்து, தன்னுடைய காதலை  தெரிவிக்க விரும்புகிறார்.

இந்த நிலையில், கதாநாயகன் ஆதவ் கிருஷ்ணாவும், கதாநாயகி சிம்ரனும் தன்னுடைய தாயை சந்திக்க காசிக்கு செல்கிறார்கள்.

காசிக்கு சென்ற கதாநாயகி சிம்ரன் தன்னுடைய தாயை  சந்தித்து தன் காதல் பற்றி தெரிவித்து விட்டு கதாநாயகி  சிம்ரன் காசியில் காணாமல் போய்விடுகிறார்.

மறுபக்கம் காணாமல் போன  கதாநாயகி சிம்ரன் தேடும் கதாநாயகன் ஆதவ் கிருஷ்ணாவும் பலவிதமான சிக்கல்களை சந்திக்கிறார்.

காசில் காணாமல் போன கதாநாயகி சிம்ரன் கிடைத்தாரா?,  கிடைக்கவில்லையா?,

காதலர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?, ஒன்று சேரவில்லையா?, என்பதுதான் இந்த “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” திரைப்படத்தில் அறிமுக  கதாநாயகனாக ஆதவ் கிருஷ்ணா, நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆதவ் கிருஷ்ணா, காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” திரைப்படத்தில் அறிமுக  கதாநாயகியாக சிம்ரன் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சிம்ரன், மிகவும் அழகாகவும் புத்துணர்ச்சியோடும், துடிதுடிப்போடும் நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனத்தை  ஈர்க்கிறார்.

காதலனிடம் மட்டும் இன்றி, அவரது பெற்றோரிடத்திலும் தன் காதலை விவரித்து சம்மதம் பெறுபவர், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் தன் காதல் மீதும், காதலர் மீதும் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை அழுத்தமாக வெளிக்காட்டியிருக்கிறார். 

கதாநாயகன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படவா கோபி, மற்றும் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோதினி  பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
 
கதாநாயகி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் நடிகர், ஜாவா சுந்தரேசன்,  உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  என்.எஸ். சதீஷ்குமார், ஒளிப்பதிவு மூலம் இயல்பான காட்சிகளில் திரைப்படமாக்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். 

இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இசையில் பாடல்கள் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

காதல் கதை என்றாலும், தாய் – மகள் உறவு, குடும்ப உறவு ஆகியவற்றை பின்னணியாக கொண்டு நேர்மையான திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.மகாலக்‌ஷ்மி முருகன்,

மொத்தத்தில், ‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ திரைப்படம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அனைவரையும் லைக் பண்ணும்.

error: Content is protected !!