’ஆர்யமாலா’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஆர் .எஸ் . கார்த்திக், மனிஷாஜித், எலிசபெத், சிவசங்கர், ஜேம்ஸ் யுவன், தவசி, மணிமேகலை, ஜாபர், வேல்முருகன், மாரிமுத்து, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர்.எஸ்.விஜய பாலா.
ஒளிப்பதிவாளர் :- ஜெய்சங்கர் ராமலிங்கம்.
படத்தொகுப்பாளர் :- ஹரிஹரன்.
இசையமைப்பாளர் :- செல்வநம்பி.
தயாரிப்பு நிறுவனம் :- ஜனா ஜாய் மூவீஸ்.
தயாரிப்பாளர்கள் :- வடலூர் J சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் (ஜனா ஜாய் மூவீஸ்)
ரேட்டிங் :- 1.75/5
1982-ஆம் ஆண்டு காலகட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாய் தந்தை மற்றும் தங்கையுடன் வசிக்கும் கதாநாயகி மனிஷாஜித்.
கதாநாயகி மனிஷாஜித்தின் கதாநாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் கனவில் வருகிறார்.
கதாநாயகி மனிஷாஜித்தின் கதாநாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் கனவில் கண்டதும் காதல் கொள்ளும் கதாநாயகி மனிஷாஜித் கனவு கலைந்த பின் கதாநாயகன் ஆர்.எஸ். கார்த்திக்கை மனதளவில் நினைத்துக் கொண்டு காதலித்து வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் அருகில் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்காக வரும் தெருக்கூத்து கலைஞரான கதாநாயகன் ஆர்.எஸ்.கார்த்திக், கோவில் திருவிழாவில் தெருக்கூத்து நடத்துவதற்காக கதாநாயகி மனிஷாஜித் இருக்கும் கிராமத்திற்கு கதாநாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் வருகிறார்.
கதாநாயகி மனிஷாஜித் கனவில் வந்த தனது காதலன் நிஜத்தில் கண்டவுடன் தன்னை அறியாமலயே தன் காதலை கண்கள் மூலமாக கதாநாயகி மனிஷாஜித் வெளிப்படுத்த, அவரது கண்கள் மூலம் அவருடைய காதலை அறிந்துக் கொள்ளும் கதாநாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்கும் கதாநாயகி மனிஷாஜித் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
கதாநாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் கதாநாயகி மனிஷாஜித் இருவரும் தங்களுடைய கண்கள் மூலமாகவே தங்களுடைய காதலை கூத்து நடக்கும் இடத்தில் பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் கதாநாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் கதாநாயகி மனிஷாஜித்திடம் தான் காதலிக்கும் விஷயத்தை கூறுகிறார்.
கதாநாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் தன் காதலை கதாநாயகி மனிஷாஜித்திடம் சொல்ல வர காதலை ஏற்றுக்கொள்ளாமல், கதாநாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்கை அவமானப்படுத்தி பேசி விடுகிறார்.
கதாநாயகி மனிஷாஜித் தன்னை அவமானப் படுத்தியதற்கு காரணம் தெரியாமலும் புரியாமலும், தனது காதலை ஏற்றுக்கொள்ளாததாலும் மனதளவில் தவித்துக் கொண்டிருக்கிறார் கதாநாயகன், ஆர்.எஸ்.கார்த்திக்,
கோவில் திருவிழாவிற்காக ஏழு நாட்கள் நடத்த வேண்டிய தெருக்கூத்தின் இறுதி நாளில் மீண்டும் கதாநாயகி மனிஷாஜித்தை சந்தித்து தனது காதலை பற்றி கூறுவதற்கு முயற்சிக்கும் செய்யும் போது, கதாநாயகி மனிஷாஜித்தின் மாமா மாரிமுத்து கதாநாயகன், ஆர்.எஸ்.கார்த்திக்கை கொலை செய்து விடுகிறார்.
கனவில் கண்ட தன் காதலன் கதாநாயகன், ஆர்.எஸ். கார்த்திக்கை காதலிக்கும் கதாநாயகி மனிஷாஜித்தின் காதல் நிஜத்தில் வெற்றி பெற்றதா? வெற்றி பெறவில்லையா?, என்பதுதான் இந்த ‘ஆர்யமாலா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஆர்யமாலா திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்.எஸ்.கார்த்திக் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.கார்த்திக், இயல்பாக நடித்து கொடுத்து தனது கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
காதல் நிராகரிக்கப்பட்ட பிறகு வருந்தும் காட்சிகளிலும் தனது அழுத்தமான நடிப்பு மூலம் ஆர்.எஸ்.கார்த்திக் குறிப்பாக தெருக்கூத்தில் காத்தவராயனாக நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து விடுகிறார்.
இந்த ஆரியமாலா திரைப்படத்தில் கதாநாயகியாக மனிஷாஜித் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மனிஷாஜித், கிராமத்து கதாபாத்திரத்திற்கு ஏற்ற கிராமத்துப் பெண் போல மிகவும் அழகாக இருக்கிறார்.
தனக்கு இருக்கும் பிரச்சனையை நினைத்து மனதளவில் வருந்துவதும், கனவில் கண்டவரை மனதில் நினைத்துக் கொண்டு வெட்கப்படுவதும் திரைப்படம் முழுவதும் தனது இயல்பான நடிப்பு மூலம் மலர் கதாபாத்திரத்திற்கு அழகிய மலர் போல அழகு சேர்த்திருக்கிறார்.
கதாநாயகி மனிஷாஜித் தாய்மாமனாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜேம்ஸ் யுவன், மண்ணின் மைந்தனாக இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
அமரர் மாரிமுத்து, வில்லனாக சிறிய கதாபாத்திரம் என்றாலும் வழக்கம் போல் தனது தனித்துவமான நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார்.
கதாநாயகி மனிஷாஜித் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எலிசபெத், தெருக்கூத்து குழுவின் வாத்தியராக நடித்திருக்கும் நடன இயக்குநர் அமரர் சிவசங்கர், ஊர் பெரியவராக நடித்திருக்கும் அமரர் தவசி தேவர், கலாநாயகியின் தங்கையாக நடித்திருக்கும் மணிமேகலை நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கு திரைப்படத்திற்கு ஏற்றவாறு சரியாக தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெய்சங்கர் ராமலிங்கம், ஒளிப்பதிவின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பசுமை நிறைந்த கிராமத்தில் பயணித்த அனுபவத்தை மிகவும் அருமையாக கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் செல்வ நம்பியின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
பெண் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் கதையில், வேகம் இல்லாத திரைக்கதை, விறுவிறுப்பில்லாத காட்சிகள் வசனம் மூலம் பெண்களின் காதலை மிக அழுத்தமாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘ஆர்யமாலா’ திரைப்படம் அனைவரையும் கவரும் அளவிற்கு ‘ஆர்யமாலா’ இல்லை.