பூக்கி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- அஜய் திஷன், ஆர்.கே.தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, கருப்பு பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜே. ஸ்ரீராம், ராதா, அஸ்வின் ராம், ஷியாரா ஷர்மி, பிரியங்கா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  கணேஷ் சந்திரா.

ஒளிப்பதிவாளர் :- கணேஷ் சந்திரா.

படத்தொகுப்பாளர் :- விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளர் :- விஜய் ஆண்டனி.

தயாரிப்பு நிறுவனம் :- விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்.

தயாரிப்பாளர் :- பாத்திமா விஜய் ஆண்டனி.

மக்கள் தொடர்பு :- சதீஷ்.

ரேட்டிங் :- 3./5.

சமூக வலைதளங்களில் ஒரு வார்த்தை பிரபலமானது  ‘பூக்கி’ காதலர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியதோடு, மட்டுமல்லாமல் காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலை வெளிபடுத்தும் வலிமையான வார்த்தையாகவும் தற்போது உருவெடுத்துள்ளது.

கதாநாயகன் அஜய் திஷன், மற்றும் கதாநாயகி ஆர்.கே.தனுஷா, தங்களுக்குள் ஏற்படும் சிறு கருத்து வேறுபாடல் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். 

கதாநாயகன் அஜய் திஷன், மற்றும் கதாநாயகி ஆர்.கே.தனுஷா, காதலர்கள் இருவரும் சிறு மோதலால் பிரிந்தாலும், அவர்கள் இருவருக்குள் தங்களது பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகன் அஜய் திஷன், மற்றும் கதாநாயகி ஆர்.கே.தனுஷா, இருவரும் காதல் பிரிவில் இருந்து தப்பிப்பதற்காக இருவரும் பல்வேறு விதமான பல முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

காதல் தோல்வியில் இருக்கும் கதாநாயகன் அஜய் திஷன், மற்றும் கதாநாயகி ஆர்.கே.தனுஷா இருவரும் அந்த காதல் தோல்வியில்,  ஏற்பட்ட வலிக்கு மருந்து  மற்றொரு காதல் தான், என்ற  மனநிலைக்கு  கதாநாயகன் அஜய் திஷன், மற்றும் கதாநாயகி ஆர்.கே.தனுஷா இருவரும் தள்ளப்படுகிறார்கள்.

அதன்படி, கதாநாயகன் அஜய் திஷன், மற்றும் கதாநாயகி ஆர்.கே.தனுஷா இருவரும் வெவ்வேறு காதலை நோக்கி செல்ல, அந்த கதல் அவர்களது காதல் பிரிவு வலிக்கு மருந்தாக  அமைந்ததா?, மருந்தாக அமையவில்லையா?, இருவரும் மீண்டும் காதலில் இணைந்தார்களா?, காதலில் இணையவில்லையா?, என்பதுதான் இந்த ‘பூக்கி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘பூக்கி’ திரைப்படத்தில் கதாநாயகனாக அஜய் திஷன், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன், துடிப்பு மிக்க  நடிப்பால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன் அனைத்து கதாபாத்திரத்திற்கும் எற்ற  கச்சிதமாக பொருந்தும் முகமாகவே  இருக்கிறார்.

இந்த ‘பூக்கி’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஆர்.கே.தனுஷா, நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே.தனுஷா, எளிமையான அழகோடு மட்டுமல்லாமல் நடிப்பில் நடனத்திலும் அசத்தியிருக்கிறார்.

மிகவும் அழுத்தமான காட்சிகளில்  அசால்டாக நடிப்பை கொடுத்து, திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை  வியக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன், போலி சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனில், மனநல மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லக்‌ஷ்மி மஞ்சு, கதாநாயகன் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா ஆகியோர் தங்களது கொடுக்கப்பட்ட வேலையை எந்தவிதக்  குறையில்லாமல் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பாக உள்ளது.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

காதல் கதையாக அல்லாமல் காதல் தோல்வி கதையை, இந்த காலகட்டத்தில் உள்ள நவீன இளைஞர்களின் உலகத்தின் பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா.

மொத்தத்தில், ‘பூக்கி’ திரைப்படம் காதல் தோல்வி வலி மற்றும் காதல் பிரிவு மற்றும் அதை எதிர்கொள்ளும் தற்போதையை காலக்கட்ட இளைஞர்களின் வாழ்வியலை, கலகலப்பாக சொல்லியிருக்கிறார்.

error: Content is protected !!