‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சசிகுமார், விவேக் பிரசன்னா, அர்ஜுன் நந்தகுமார், அனகா, அபர்ணா தாஸ், ரேவதி ஷர்மா, யஷ்வந்த், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆண்ட்ரூ லூயிஸ்.

ஒளிப்பதிவாளர் :- சரவணன் ராமசாமி.

படத்தொகுப்பாளர் :- ஏ. ரிச்சர்ட் கெவின்.

இசையமைப்பாளர் :- சைமன் கே. கிங்.

தயாரிப்பு நிறுவனம் :- வால்வாட்சர் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- எஸ்.குஹப்ரியா, எஸ்.நந்தகுமார், கௌதம் செல்வராஜ், புஷ்கர் – காயத்ரி.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

ரேட்டிங் :-  4./5.

மதுரை மாவட்டத்தில், எட்டு வழி சாலைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு மத்திய மந்திரி கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகாக பள்ளம் தோண்டும் போது ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது.

அரசு நிகழ்ச்சியின் போது அந்த எலும்புக்கூடு கிடைத்ததால் ஒட்டுமொத்த ஊடகமும் மற்றும் சோசியல் மீடியாக்களிலும் அந்த ஒரு சம்பவத்தை பற்றியே பேசிக்கொண்டிருக்க, அந்த எலும்புக்கூட்டின் பின்னணியில் உள்ள நபர் யார்? என்று கண்டுபிடிக்கும் பொறுப்பு உதவி காவல்துறை ஆய்வாளர் சசிகுமார் அவர்களிடம் கொடுக்கப்படுகிறது.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், ஒரு கை இல்லாமல், சிதைந்த நிலையில் இருக்கும் அந்த எலும்புக்கூட்டை வைத்துக்கொண்டு விசாரணையை ஆரம்பிக்கும் உதவி காவல்துறை ஆய்வாளர் சசிகுமார், அதே இடத்தில் மேலும் ஒரு எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை  கண்டுப் பிடிக்க இரண்டு எலும்புக்கூடுகளும் பெண்கள் என்பதையும், அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதையும்  கண்டுபிடிக்கிறார்.

இரண்டு எலும்புக்கூட்டின் பிரச்சனை முடிந்ததால் மதுரை மாவட்ட காவல்துறை நிம்மதியடைய, சசிகுமார் அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களையும், இரண்டு பெண்களை கொலை செய்த உண்மையான குற்றவாளி யார் ? என்பதையும் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.

உதவி காவல்துறை ஆய்வாளர் சசிகுமாரின்   விசாரணை மூலம், பல புதிய மர்மங்கள் பூதாகரமாக உருவெடுக்க, அந்த மர்மத்திற்க்கு உரிய உண்மையான கொலையாளியை உதவி காவல்துறை ஆய்வாளர் சசிகுமார் கண்டுபிடித்தாரா?, கண்டு பிடிக்கவில்லையா?, இந்த இரண்டு கொலைகளுக்கான காரணம் என்ன ? என்பதுதான் இந்த‘வதந்தி – சீசன் 2’ இணைய தொடரின் மீதிக்கதை.

இந்த‘வதந்தி – சீசன் 2’ இணைய தொடரில் கதையின் நாயகனாக சசிகுமார் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக மூசா ராசா என்ற உதவி காவல் துறை ஆய்வாளர்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், முதல் முறையாக காவல்துறை அதிகாரி மற்றும் காக்கி உடை அணிந்திருந்தாலும், தனது உருவம் மற்றும் நடிப்பில். கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனகா, காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையாக பொருந்தியிருக்கிறார்.

காக்கி சீருடை கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, மிக சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் யஷ்வந்த், மதுரை மாவட்ட இளைஞராக பொருந்தி இருக்கிறார்.

கதையின் நாயகன் சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபர்ணா தாஸ், கதாபாத்திரத்திற்கு கதை  திரைக்கதையில் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லை.

முடக்கத்தான் மணியின் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேவதி ஷர்மா, சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

‘வதந்தி’ முதல் சீசனில் நடித்த அதே ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரும் தங்களது பணியை எந்த விதமான குறையின்றி செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி, கிரைம் திரில்லர் என்பதால் அதிகமான இருளை பயன்படுத்தாமல், இயற்கையின் வெளிச்சத்தில் ரம்மியமான காட்சிகளை திரைப்படமாக்கி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையில் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

வதந்தி வெலோனியின் கட்டுக்கதை முதல் சீசனில் கொலையாளி யார் ? என்பதை தேடும் பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றது போலவே, இந்த இரண்டாவது சீசனில், கொலையாளியாக தண்டனைப் பெற்றவரை நிரபராதி என்பதை நிரூபிக்கும் பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.

மொத்தத்தில், ‘வதந்தி – சீசன் 2’ கிரைம் த்ரில்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் கிரைம் திரில்லர் தொடரை ரசிகர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு தரமான இனையத்தொடர்

error: Content is protected !!