‘தடயம்’ இனையத் தொடர் விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சமுத்திரக்கனி, ஷிவாதா, ராஜ் திரண்டாஸ், முன்னார் ரமேஷ், சுந்தர்பாண்டியன், பிரேம், கொற்றவை, விஷாகன், புலிப்பாண்டி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :– நவீன்குமார் பழனிவேல்.
ஒளிப்பதிவாளர் :- கே.கே.
படத்தொகுப்பாளர் :- தினேஷ் குமார்.
இசையமைப்பாளர் :- விபின் பாஸ்கர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஜீ 5.
தயாரிப்பாளர் :- அஜய் கிருஷ்ணா.
மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM )
ரேட்டிங் :- 3./5.
தடயம் ஒரு முழுமையான காவல்துறையை சம்பந்தப்பட்ட கதையைக் கொண்ட வெப் சீரிஸ் முதல் பாகத்திலிருந்து கடைசி பாகம் வரைக்கும் மிகவும் விறுவிறுப்பாக இயல்பான நடிப்பில் இந்த வெப் சீரியஸ் ரசிகர்களை கவர்கிறது.
ZEE5 ஓடிடி தளத்தில் சமீப காலமாக வெளியாகும் வெப் தொடர்கள் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், தடயம் தொடரும் அந்த வரிசையில் இணைய உள்ளது.
1995 கால கட்டங்களில் மற்றும் 1999 கால கட்டங்களில் ஆகிய இரண்டு கால கட்டங்களில் கதை நடக்கிறது.
வெப் சீரிஸ் கதையின் தொடக்கத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவர் மற்றும் மனைவி கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
அதனை தொடர்ந்து இரண்டு வீட்டில் உள்ள கணவன் மற்றும் மனைவிகள் அவரவர்கள் வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.
இந்த கொடூரமான கொலை வழக்கு காவல்துறை துணை ஆய்வாளரான கதாநாயகன் சமுத்திரக்கனி வேலை பார்க்கும் அதே காவல் நிலையத்திற்கு அந்தக் கொலை வழக்கு வருகிறது.
காவல்துறையில் பணிபுரியும் கதாநாயகன் சமுத்திரக்கனி தன்னுடைய வேலையை ஒரு மாதத்தில் ரிசைன் செய்துவிட்டு போக உள்ள நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தொடங்குகிறார்.
கதாநாயகன் சமுத்திரக்கனிக்கு இந்த வழக்கை விசாரிப்பதற்காக உறுதுணையாக காவல்துறை ஆய்வாளர் ஷிவதா நாயர் உடன் இருக்கிறார்.
தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப் பகுதிகளில் கொலை நடப்பதால் இவற்றை யார் செய்திருப்பார்கள் என்று காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் இத்தனை கொடூரமான கொலைகளை யார் செய்திருப்பார்கள் என்ற காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கிறது.
அதனை தொடர்ந்து இப்படி கொடூரமான கொலைகளை செய்த குற்றவாளியை பற்றி விசாரணையை மேற்கொள்கின்றனர்.
இறுதியில் கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா?, கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் தடயம் இனையத் தொடரின் மீதிக்கதை.
இந்த தடயம் இனையத்தொடரில் கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு சாதாரண காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதையின் நாயகன் சமுத்திரக்கனி மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முதன்மை கதாபாத்திரத்தில் ஷிவதா நாயர் காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஷிவதா நாயரின் அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் இந்த இனையத் தொடருக்கு பெரிதும் உதவுகிறது.
டிஎஸ்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூணார் ரமேஷ் தன்னுடைய வழக்கமான நடிப்பை மிகவும் சிறப்பாக கொடுத்துள்ளார்.
ஆந்திரா காவல் அதிகாரிகளாக நடித்திருப்பவர்களும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் தாண்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இருவரும் மிகவும் அருமையான நடிப்பை கொடுத்து ரசிக்க வைக்கின்றனர்.
இந்த இனையத் தொடரில் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கே.கேவின் ஒளிப்பதிவு மூலம் இந்த இனையத் தொடருக்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இனையத் தொடருக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
தமிழ் இணையக் தொடர் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான இன்வெஸ்டிகேஷன் இனையத் தொடரை இயக்குனர் நவீன் குமார் பழனிவேல் கொடுத்துள்ளார்.
மொத்தத்தில், இந்த தடயம் இணையத் தொடர் நிச்சயம் கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் ரசிகர்கள் கண்டிப்பாக பிடிக்கும்.











