’சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சரவணன்,  நம்ரிதா, அருள் டி சங்கர், சண்முகம்,  திருசெல்வம், விஜயஸ்ரீ & இனியா ராம், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாலாஜி செல்வராஜ்.

ஒளிப்பதிவாளர் :- எஸ் கோகுலகிருஷ்ணன்.

படத்தொகுப்பாளர் :-  ராவணன்.

இசையமைப்பாளர் :-  விபின் பாஸ்கர்.

தயாரிப்பு நிறுவனம் :- 18 கிரியேட்டர்ஸ்.

தயாரிப்பாளர் :- சசிகலா பிரபாகரன்.

ரேட்டிங் :- 3.5/5.

நம்ரிதா சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்துவிட்டுத் நல்ல  வழக்கறிஞரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என போராடுகிறார்.

நம்ரிதா பயிற்சி பெறுவதற்குரிய மூத்த வழக்கறிஞர்கள் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கலாக இருக்க கதையின் நாயகன் சரவணன் நீதிமன்ற வாசலில் ஒரு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞராக சான்றிதழ் கொடுக்கும் வழக்கறிஞராக  இருக்கிறார்.

சட்ட நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்தாலும் அவர் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெற்ற வழக்கறிஞராக ஆகவில்லை.

கதையின் நாயகன் சரவணன்  நோட்டரி பப்ளிக் வழக்கறிஞராக இருந்தாலும் பரவாயில்லை என்று அவரை நம்பி அவரிடம் உதவியாளராக நம்ரிதா சேர்கிறார்.

கடத்தப்பட்ட  தன்னுடைய மகளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று காவல் நிலையங்களில் முறையிட்டும் எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை என தன் மகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கடத்தப்பட்ட அந்தப் பெண்ணின் தந்தை ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழக்கிறார்.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த  எளியவனின் தற்கொலை வழக்கை கதையின் நாயகன் சரவணன் இந்த வழக்கை ஒரு பொது நல வழக்காக கையில் எடுத்துக் கொள்கிறார்

இந்த பொதுநல வழக்கை கையில் எடுத்த கதையின் நாயகன் சரவணன் இந்த எளியவனின் தற்கொலைக்கு அந்த நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஒவ்வொரு முறையும்  தோல்வி மட்டுமே கிடைக்கிறது.

இருந்தாலும் தோல்வி கண்டாலும் இந்த வழக்கை  விடாமுயற்சியுடன் வெற்றிக்காக போராடுகிறார்.

இறுதியில் கதையின் நாயகன் சரவணன் கையில் எடுத்த பொதுநல வழக்கில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இறந்து போனவரின் மரணத்திற்கு நீதி கிடைத்ததா? நீதி கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த சட்டமும் நீதியும் இணைய தொடரில் மீதிக்கதை.

இந்த சட்டமும் நீதியும் இணைய தொடரில் கதையின் நாயகனாக சரவணன் நடித்திருக்கிறார்.

சுந்தரமூர்த்தி என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவணன், மிக எதார்த்தமாக கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக கையாண்டு ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.

கதாநாயகன் சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் நம்ரிதா, தைரியம், துணிவு மிக்க பெண்ணாக நடிப்பில் மிக அருமையாக அசத்தியிருக்கிறார்.

இந்த சட்டமும் நீதியும் இணையத் தொடரில் முடித்திருக்கும் அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம், அனைத்து கதாபாத்திரங்களில்  நடித்திருக்கும் அனைவரும் அளவான நடிப்பு கொடுத்து பரபரப்பான திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  எஸ். கோகுல்கிருஷ்ணன் ஒளிப்பதிவு மூலம் நீதிமன்ற வளாகம், நீதிமன்ற வழக்கு விசாரணை என முழுக்க முழுக்க பல கோணத்தில் காட்சிப்படுத்தி அனைத்து எப்பிசோட்களையும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் மிகவும் அளவாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் அளவாக அருமையாக பீஜியம் மூலம் பல இடங்களில் இந்த கதைக்கு மாஸாக காட்டியிருக்கிறார்.

நீதிமன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களின் சாயல் தெரிந்தாலும், திரைக்கதை மற்றும் திருப்பங்கள் மூலம் அதை வேறு ஒரு பாணியில் சுவாரஸ்யமாகவே இயக்கி இருக்கிறார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ்,

மொத்தத்தில், ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் ஏழு எப்பிசோட்களையும் கண்கள் இமைக்காமல் பார்க்கும் அளவிற்கு அருமையாக உள்ளது.

error: Content is protected !!