‘ஜி.டி.என்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஆர். மாதவன், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், சத்யராஜ், வினய் ராய், அதிதி பாலன், கருணாகரன், மோகன் ராமன், தம்பி ராமையா, ஜான் விஜய், தேஜீந்தன் டி.ஜே. அருணாசலம், ஷீலா, ஷில்பா, முரளிதரன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைய்ன் , ஸ்ரீகுமார், நந்தலால், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கிருஷ்ணகுமார் ராமகுமார்.
ஒளிப்பதிவாளர் :- அரவிந்த் கமலாநாதன்.
படத்தொகுப்பாளர் :- பிஜித் பாலா, கே. சசிகுமார்
இசையமைப்பாளர் :- கோவிந்த் வசந்தா.
தயாரிப்பு நிறுவனம் :- டிரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், டிரைகலர் ஃபிலிம்ஸ்.
தயாரிப்பாளர்கள்:- ஆர். மாதவன், சரிதா மாதவன், வர்க்கீஸ் மூலன், விஜய் மூலன்.
மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா ( D one )
ரேட்டிங் :- 4.25./5.
தமிழகத்தில் மாபெரும் அடையாளமாக திகழ்ந்த, தொழில்துறையில் மிகப்பெரிய அளவில் புரட்சியை ஏற்படுத்திய ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு தான் இந்த “ஜி டி நாயுடு” திரைப்படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடித்து ஆகஸ்ட் 07 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்த ஜி டி நாயுடு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தோளோடு தோளாக தோழனாகவே நிற்கிறார்.
ஆங்கிலேயர்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள் மீது அதிகளவில் பிரியம் ஏற்படவே அந்த மோட்டார் சைக்கிளை எப்படியாவது வாங்க வேண்டும் என நினைக்கிறார்.
ஜி டி நாயுடு உழைத்து கஷ்டப்பட்டு அதற்காக தான் வேலை பார்த்து சம்பாதித்த அந்த பணத்தைக் கொடுத்து அந்த மோட்டார் சைக்கிளை வாங்குகிறார்.
வாங்கிய மோட்டார் சைக்கிளை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்ள ஜி டி நாயுடுக்கு ஆர்வம் அதிகரிக்கிறது.
ஜி டி நாயுடு ஆசையாக வாங்கிய அந்த மோட்டார் சைக்கிளை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்கிறார்.
இதனை தொடர்ந்து, புதிய தொழில் தொடங்க, பருத்தி ஆலையிலும் வேலை பார்த்துக் கொண்டே, அங்கிருக்கும் விவசாயிகள் எளிதாக பணிபுரிய சின்ன சின்ன கருவிகளையும் கண்டுபிடித்து அவர்களுக்காக வழங்குகிறார்.
தொழில்துறையில் அடுத்தடுத்த புரட்சியை ஜி டி நாயுடு மேற்கொள்ள பருத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நல்லதொரு சாதனை படைத்த அவர், தனது சொத்துகளை சூதாட்டத்தில் விட்டுவிட முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணமும் செய்து கொள்கிறார்.
தனது ஆங்கிலேய நண்பர் ஒருவரிடம் உதவி கேட்க, அவரிடமிருந்து ஒரு பேருந்தை வாங்கிக் கிடைத்த ஒரு பேருந்தை, தனது கடின உழைப்பால் பலமடங்கு பெருக்கி பேருந்து துறையில் மிகப்பெரிய அளவில் சாம்ராஜ்யத்தை ஜி டி நாயுடு. உருவாக்குகிறார்
தனது பேருந்து தொழில் துறையில் ஒரு சாதனையை படைத்தப் பின்பு, மற்ற பேருந்து தொழில் நடத்தும் முதலாளிகளுடன் கைகோர்த்து UMS என்ற பொதுநிறுவனத்தைத் தொடங்கி, வெளிநாடு வரையிலும் தனது மோட்டார் தொழில் சாதனையை நிகழ்த்தி வருகிறார்.
ஜி.டி. நாயுடுவின் வளர்ச்சியை பிடிக்காத ஆங்கிலேய ஆட்சியர் ஒருவர், ‘ஜி.டி. நாயுடு பெயருக்கு களங்கம் விளைவிக்க, வருமான வரியில் சிக்க வைப்பதற்காக, இந்த ஆங்கிலேய ஆட்சியர் ஒருவர், விரித்த வலையில் ஜி டி நாயுடு சிக்கினாரா? சிக்கவில்லையா? என்பதுதான் இந்த ஜி டி என் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஜி டி என் திரைப்படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடித்திருக்கிறார்.
ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாதவன், தனது ஸ்டைலிஷ் மற்றும் கம்பீரமான தோற்றத்தின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
ஜி.டிநாயுடுவின் இளமைக்கால மற்றும் முதுமைக்கால தோற்றம் என இரண்டு விதமான தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் ஜி.டி.நாயுடு இப்படி தான் இருந்திருப்பார் என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வியக்கும் வகையில் கதையின் நாயகன் மாதவன் நடித்திருக்கிறார்.
அம்பலவானா கிருஷ்ணன் என்ற வருமான வரித்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
காமெடி கலந்த நடிகராக பார்த்த ஜெயராம், இதில் வில்லத்தனம் கலந்த நடிப்புடன், ஒரு நேர்மையான வருமான வரித்துறை அதிகாரியின் கோபத்தையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் பாராட்டு பெறுகிறார்.
சிதம்பரம் பிள்ளை என்ற ஜி.டி.நாயுடுவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜின் தோற்றம் மற்றும் நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
ஜிடி நாயுடுவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன், மற்றும் பிரியா மணி, இருவரும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன், டீஜே அருணாச்சலம், மோகன் ராமன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார், பிரிகிடா சாகா, ஷில்பா ஸ்ரீகுமார் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர்கள் பிஜித் பாலா மற்றும் கே.சசி குமார் ஆகியோரது பணி சிறப்பு.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன், ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலங்களில் மிகவும் அழகாக தன்னுடைய ஒளிப்பதிவு மூலம் ஜெர்மனி பயணம் மற்றும் ஹிட்லரிடம் விருது வாங்குவது போன்ற காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் மிக சரியாக காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
தனிமனிதனின் வாழ்க்கை வரலாறு கதை என்றாலும், அதை முழுக்க முழுக்க கமர்ஷியல் சினிமா பாணியில் பயணிக்க வைத்து சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
மொத்தத்தில், இந்த ‘ஜி.டி.என்’ திரைப்படம் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு தமிழனின் வாழ்க்கை வரலாறு.











