‘ரேகை’ இணையத் தொடர் விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன், இந்திரஜித் E.  மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தினகரன்.எம்.

ஒளிப்பதிவாளர் :- மகேந்திர எம். ஹென்றி.

படத்தொகுப்பாளர் :- துரை.

இசையமைப்பாளர் :- ஆர்.எஸ். ராஜ்பிரதாப்.

தயாரிப்பு நிறுவனம் :- எஸ்.எஸ். குரூப்.

தயாரிப்பாளர் :-  எஸ்.சிங்காரவேலன்.

ரேட்டிங் :- 3.75/5.

கிரைம் நாவல்களின் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ் குமார் 1500 நாவல்கள் தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது.

எழுத்தாளர் ராஜேஷ் குமார்  எழுதிய நாவல்களுக்கு மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் ரசிகர் பட்டாளமே அதிகமாக இருக்கிறது.

அப்படி அவர் எழுதிய ஒரு நாவலின் மையக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்டு ஒரு கதையின் கருவை எடுத்து தனித்துவமான இந்த “ரேகை” இனையத் தொடரை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினகரன்.

இந்த இனையத் தொடர் ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் சீரீஸ் Zee5-ல் 28 நவம்பர் 2025 அன்று வெளியாகிறது.

காவல்துறை துணை ஆய்வாளர் கதாநாயகன் பாலஹாசன் மற்றும் பெண் காவலர் கதாநாயகி பவித்ரா ஜனனி இருவரும் ஒரு மரணத்தை பற்றி விசாரிக்க செல்கிறார்கள்.

அதன்பின் ஆனால் அந்த மரணம் விபத்தல்ல, அதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்க காவல்துறை துணை ஆய்வாளர் கதாநாயகன் பாலஹாசன் மற்றும் பெண் காவலர் கதாநாயகி பவித்ரா ஜனனி இருவரும் இது கொலைதான் என சந்தேகிக்கிறார்கள்.

கொலையை பற்றி காவல்துறை துணை ஆய்வாளர் கதாநாயகன் பாலஹாசன் மற்றும் பெண் காவலர் கதாநாயகி பவித்ரா ஜனனி இருவரும்
சாதாரணமாக விசாரிக்க துவங்கும் அந்த குற்றச் சம்பவம் அடுத்தடுத்த சில மரணங்களால் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது.

விபத்து என்பது மாறி கொலை என்பதை கதாநாயகன் பாலஹாசன் மற்றும் பெண் காவலர் கதாநாயகி பவித்ரா ஜனனி இருவரும்
கண்டறிகிறார்கள்.

இவர்கள் அனைவரையும் கொலை செய்தது யார்? இந்த சாதாரண மனிதர்களை கொன்றது யார்? அந்த ஐந்து பேருக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்? கொலையாளி யார்? கொலையாளியை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ரேகை இனையத் தொடரின் மீதிக்கதை.

இந்த ரேகை இனையத் தொடரில் கதாநாயகனாக பாலஹாசன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பாலஹாசன் காவல்துறை துணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்திப் இருக்கிறார்.

நடந்த கொலை வழக்கை விசாரிப்பதும, அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது, ஆக்ஷன்காட்சிகளில் அசத்துவது என இந்த கதைக்களத்துக்கு ஏற்றவாறு மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இந்த ரேகை இனையத் தொடரில் கதாநாயகியாக பவித்ரா ஜனனி நடித்துள்ளார்

கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவித்ரா ஜனனி  பெண் காவலர் கதாபாத்திரத்தில் இயல்பாக நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

பல திரைப்படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வினோதினி வைத்யநாதன் இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்திராத கதாபாத்திரத்தில் இந்த இனையத் தொடரில் வில்லி  கதாபாத்திரத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சலி ராவ் போபலன் பிரகதேஷ், ஸ்ரீராம், இந்திரஜித் ராஜ் பிரதாப்
என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம்.ஹெண்ட்ரி, ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தி  பார்வையாளர்களை தொடருடன் ஒன்றி போக செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாபின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின்  புலனாய்வு காட்சிகளில் மூலம்  அதிர்ச்சியூட்டும் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

கிரைம் நாவல்களின் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்களின் கிரைம் கதையின் ஒரு கருவை எடுத்துக் கொண்டு அதை மிகச்சிறப்பாக ஒரு இணையத் தொடரை தர எடுத்திருக்கும் முயற்சி மிகப்பெரிய அளவில் பாராட்டுக்குரியது.

இந்த இனையத் தொடருக்கு பின்பு கிரைம் நாவல்களின் கதை மன்னன் எழுத்தாளர்  ராஜேஷ்குமாரின் பல நாவல்கள் பல இயக்குனர்களால் தூசு தட்டப்படும் என்பது உறுதி.

மொத்தத்தில், ‘ரேகை’ இணையத் தொடர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிறைந்த அருமையான இணைய தொடர் நிச்சயம் Zee5 OTT-யில் குடும்பத்துடன் பார்த்து  கண்டிப்பாக ரசிக்கலாம்.

error: Content is protected !!