‘கோல்ட் கால்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி. மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தம்பிதுரை.
ஒளிப்பதிவாளர் :- சரவணன்.
படத்தொகுப்பாளர் :- சுரேஷ் ஆறுமுகம் .
இசையமைப்பாளர் :- பிரணவ் கிரிதரன்.
தயாரிப்பு நிறுவனம் :- வாக்த்ரோ என்டர்டைன்மெண்ட்.
தயாரிப்பாளர் :- கேசவ மூர்த்தி.
மக்கள் தொடர்பு :- திரு.
வெளியீட்டு தேதி :- 18 செப்டம்பர் 2026.
ரேட்டிங் :- 2.5/5.
பெங்களூரில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதி வேலைக்கு சேரும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு பேரும் அதே நிறுவனத்தில் வேலைக்கு விற்பனை பிரதிநிதி சேர்ந்து நண்பர்களாகிறார்கள்.
விற்பனை பிரதிநிதி வேலை மிகவும் கடினமானது என்றாலும், நான்கு நண்பர்களும் அதை மிகவும் ஜாலியாகவும் மகிழ்ச்சியாக செய்து வருகிறார்கள்.
இருப்பினும் விற்பனை பிரதிநிதி வேலையில் நிறுவனம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்காததால் நான்கு நண்பர்கள் மீதும் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
இந்த நிலையில், தொழிலதிபர் ஒருவரின் மகன் கடத்தப்பட, அந்த கடத்தல் கும்பலுடன் இனைத்து நான்கு நண்பர்கள் இருப்பதாக காவல்துறையினர் அறிவிக்கிறார்கள்.
இதனால் ஒட்டுமொத்த காவல்துறையினர் நான்கு நண்பர்களையும் தேடுகிறீர்கள்.
தங்களது மீது விழுந்த கடத்தல் குற்றத்திலிருந்து தவிப்பதற்காக விற்பனையாளர் பணி மற்றும் அதற்கான பயிற்சியை பயன்படுத்தி தங்களது மீது விழுந்த கடத்தல் பழியை போக்கி, கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகனையும் காப்பாற்ற நான்கு நண்பர்களும் இணைந்து முடிவு செய்கிறார்கள்.
கடத்தப்பட்ட அந்த தொழிலதிபரின் மகனை காப்பாற்றினார்களா? காப்பாற்ற வில்லையா? நான்கு நண்பர்கள் மீது விழுந்த கொலை பள்ளியில் இருந்து விடுபட்டார்களா? விடுபடவில்லையா? என்பதுதான் இந்த ‘கோல்ட் கால்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘கோல்ட் கால்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகியோர் தமிழ் திரைப்பட உலகத்திற்கு புதியவர்கள் என்றாலும் தங்களது பணியை எந்தவிதமான குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் நான்கு பேரும் ஒவ்வொரு வகையில் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகியோரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நிறுவனத்தின் மேலாளர், விற்ப்னையாளர்களின் பயிற்சியாளர் என்று மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அனைவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சரவணனின் ஒளிப்பதிவு மூலம் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும், கேட்கும்படியும் உள்ள நிலையில் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்றவாறு அளவாக பயணித்திருக்கிறார்.
விற்பனையாளர்கள் பணி எப்படி இருக்கும், என்று சொல்லாமல் அவர்களது வாழ்வில் நடக்கும் எளிய சம்பவங்களையும், மறக்க முடியாத நிகழ்வுகளையும், இனிமையான அனுபவமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை
மொத்தத்தில், ‘கோல்ட் கால்’ திரைப்படம் ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.











