‘ஆட்டோகிராஃப்’திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சேரன், சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா, இளவரசு, கிருஷ்ணா, ராஜேஷ், பெஞ்சமின், கணேஷ் பாபு, வேல்முருகன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சேரன்.
ஒளிப்பதிவாளர்கள் :- ரவிவர்மன், விஜய் மில்டன், துவாரகாநாத், ஷங்கி மகேந்திரன்.
படத்தொகுப்பாளர் :- எஸ். சதீஷ், ஜே. என். ஹர்ஷா.
இசையமைப்பாளர் :- பரத்வாஜ், சபேஸ் முரளி.
தயாரிப்பு நிறுவனம் :- ட்ரீம் தியேட்டர்ஸ்.
தயாரிப்பாளர் :- சேரன்.
ரேட்டிங் :- 4. 5./5.
2004 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற இயக்குனர் சேரன் இயக்கி கதையின் நாயகனாக நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திரையரங்குகளில் மறுபடியும் பி ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் , 2k கிட்ஸ், ஏன்? zen zee கிட்ஸ் வரை தொடர்புபடுத்திக் கொள்ளும் அனைவருக்கும் ஆன ஒரு கதையைத்தான் அப்போதே அருமையான படைப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சேரன்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராப் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. என்ற பாடலைப் போல் தங்கள் வாழ்வில் நடந்த காதல், பிரேக் அப், பள்ளி கல்லூரி நாட்கள், நண்பர்கள் தோழிகள் கதை எல்லாமே மனதிற்குள் வந்து உங்களை ஆட்கொண்டு நெஞ்சத்தை கனமாக்கி விடும் என்பது மட்டும் உறுதி.
கதாநாயகன் சேரன் பள்ளியில் படிக்கும் போது உடன்படிக்கும் மல்லிகாவை காதலிக்கிறார்.
இந்த இருவரின் காதல் பள்ளி படிப்பு முடிந்தவுடன் பாதிலேயே முறிந்து போக, கதாநாயகன் சேரன் கேரளா சென்று கல்லூரியில் படிக்கும் சேரனுக்கு உடன் படிக்கும் மாணவி கோபிகா மீது காதல் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் அந்த காதலும் முறிந்து போக காதல் தோல்வியில் வாழ்க்கையை வெறுத்து போன பைத்தியம் பிடித்தது போல் பிரிந்து கொண்டிருக்கும் கதாநாயகன் சேரனுக்கு சினேகாவின் நட்பு கிடைக்கிறது.
அதன் பிறகு கதாநாயகன் சேரன் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கிறது என்பதுதான் இந்த ஆட்டோகிராப் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் கதையின் நாயகனாக இயக்குனர் சேரன் நடித்திருக்கிறார்.
செந்தில் கதாபாத்திரத்தில் பள்ளி மாணவனாகவும் கல்லூரி மாணவனாகவும் மற்றும் காதல் தோல்வி ஏற்ற இளைஞனாகவும் மிகவும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பெருமை சேர்த்திருக்கிறார்.
கமலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மல்லிகா, லத்திகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிகா, திவ்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சினேகா ஆகிய நான்கு பேரும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிற்குள் காதல், சோகம், அழுகை, நட்பு என எல்லா உணர்வுகளையும் தட்டி எழுப்பி விடுகிறார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சினேகா நடித்திருக்கும் திவ்யா கதாபாத்திரம் ஒவ்வொரு இளைஞரையும் இப்படி ஒரு தோழி நமக்கு இல்லையே என்று ஏங்க வைத்து விடும்.
பள்ளி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, கேரளா கல்லூரியில் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருஷ்ணா, கதாநாயகன் சேரனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ், பள்ளியில் சேரனின் நண்பராக நடித்திருக்கும் பெஞ்சமின், நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கணேஷ் பாபு, வேல்முருகன், அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன் துவாரகாநாத், ஷங்கி மகேந்திரன் இவர்களின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஒளிப்பதிவு மூலம் கேரளாவில் திரைப்படமாக்கப்பட்டிருக்கும் அனைத்து காட்சியும் ஒளிப்பதிவை அதிஅற்புதமாக திரைப்படமாக்கி மதிமயங்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையும், பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
இசையமைப்பாளர் சபேஷ் முரளி பின்னணி இசையும் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி திரைப்படத்திற்கு இது பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே… பாடல் வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு அனைவரும் மீண்டும் தன்னம்பிக்கையை கொடுத்து நிமிர வைக்கும்..
காலத்தால் அழிக்க முடியாத திரைப்படங்கள் என்று தமிழில் சில திரைப்படங்களை கூறலாம் அந்த வரிசையில் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம் ஆட்டோகிராப்.
“ஆட்டோகிராப்” – திரைப்படம் தமிழ் திரைப்பட உலகத்திற்கு ஒரு பொக்கிஷம்.











