‘காந்தாரா – அத்தியாயம் 1’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரிஷப் ஷெட்டி.

ஒளிப்பதிவாளர் :- அரவிந்த் S காஷ்யப், ISC.

படத்தொகுப்பாளர் :- சுரேஷ்.

இசையமைப்பாளர் :- B. அஜனீஷ் லோக்நாத்.

தயாரிப்பு நிறுவனம் :-  ஹோம்பாலே ஃபிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- விஜய் கிரகந்தூர்.

ரேட்டிங் :- 3.5/5.

காந்தாரா வனப்பகுதியில் மிளகு, கிராம்பு ஏலக்காய் விலையுர்ந்த விளை பொருட்கள் நிறைந்த வனப்பகுதியை கைப்பற்ற  அந்த நாட்டின் அரசன் முயற்சி செய்கிறார்.

வனப்பகுதியை கைப்பற்ற நினைத்த அரசனுக்கு தோல்வியடைந்த நிலையில், அரசனின் மகனும் வனப்பகுதியை கைப்பற்ற
அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு இருந்து விடுகிறார்கள்.

காந்தாரா வனப்பகுதியை பழங்குடி இனத்தைச் சேர்ந்த கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, வனப்பகுதியை விட்டு வெளியேறி, தங்களிடம் இருக்கும் விலை உயர்ந்த விளைபொருட்களை விற்பனை செய்ய  முயற்சிப்பதோடு, சர்வ சாதாரண மக்களை அடிமைத்தனமாக அடைத்து வைத்திருக்கும் மக்கள் மீது போடப்பட்டிருந்த தடைகளை அதிரடியாக தகர்த்தி, பொருட்கள் பொருட்கள் விற்பனை செய்யும்  துறைமுகத்தை கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். 

காந்தாரா மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசன் ஜெயராம், காந்தாரா வனப்பகுதி சேர்ந்த கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, மற்றும் மக்களிடம்
சமரசமாக பேசி, அவர்களுக்கான அனைத்து மரியாதையையும் வழங்குவதாக  அறிவிப்பதோடு, மட்டுமல்லாமல் அவர்களின் சக்திகளை கட்டுப்படுத்தி, காந்தாரா என்ற கடவுளை
கைப்பற்ற அரசன் ஜெயராம்,
சதி செய்கிறார்.

அரசன் ஜெயராமின் சதி திட்டத்தில் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?, கதாநாயகன் ரிஷப் ஷெட்டி காந்தாரா என்ற கடவுளையும் அந்த வனப்பகுதியில் உள்ள மக்களையும் காப்பாற்றினாரா ? காப்பாற்றவில்லையா? என்பதுதான் ‘காந்தாரா – அத்தியாயம் 1’ திரைப்படத்தின் மீதிக்கதை.
 
இந்த காந்தாரா அத்தியாயம் 1 திரைப்படத்தில் கதையின் நாயகனாக ரிஷிப் ஷெட்டி நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி, பழங்குடியினர் கதாபாத்திரத்தில் மிகவும் கனக்கச்சிதமாக  பொருந்தியோடு மட்டுமல்லாமல் அவரின் நடிப்பு மற்றும் இறுதி காட்சியில் கடவுளாக மாறி நடித்திருப்பது மிக சிறப்பு.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி, இறுதி கட்ட காட்சியில்
“ஓ…ஓ….” என்று சத்தம் போட்டு தனக்குள் காந்தாரா வந்துவிட்டது என சாமியாடும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பு மூலம் அசதி இருக்கும்,  கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, அவருடைய உடல் மொழி மற்றும் கண்களில் காட்டும் கோபம் ஆகியவற்றை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி அனல் பறக்கும் நடிப்பை கொடுத்து தெறிக்க விட்டிருக்கிறார்.

இந்த காந்தாரா அத்தியாயம் 1 திரைப்படத்தில் கதையின் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்.
 
கதையின் நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் மிகவும் அழகாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் அமைதியாக வரும், கதையின் நாயகி ருக்மணி வசந்த் திடீரென்று இறுதிக்கட்ட காட்சிகளில் விஸ்வரூபம் எடுத்து மிகவும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அரசர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம் மற்றும் அவரது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிகவும்  பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

இந்த காந்தாரா அத்தியாயம் 1 திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபத்தைகளும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கே.காஷ்யப் ஒளிப்பதிவு மூலம் அனைத்து காட்சிகளை மிகவும் பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்  மிகப்பெரிய அளவில் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற முயற்சிக்கும் அரசர், அவரை எதிர்த்து போராடும் பழங்குடி இன மக்கள், இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை, ஆன்மீகத்தோடு இணைத்து, கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் பிரமாண்டமான திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரிஷிப் ஷெட்டி.

மொத்தத்தில், ‘காந்தாரா- அத்தியாயம் 1’ திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை என்பதுதான் உண்மை.

error: Content is protected !!