’மகுடம்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜெய பிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா, சித்ரா லக்ஷ்மன், வம்சி கிருஷ்ணா, சாபுமோன், அபு சலீம் அஜய், அர்ஜய் இளவரசன், பதம் குமார் அன்பு, விஜே ஜான்சி, ஸ்ரீ லேகா வசந்தி, ராதிகா, சபிதா ரோய், அஷ்வின், மாயா, சஞ்சய், ரியான், சாய், சஞ்சன், ஜெரிக் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விஷால்.
ஒளிப்பதிவாளர் :- ரிச்சர்ட் எம் நாதன், அபிநந்தன், ராமானுஜம், ஜெய் கார்த்திக்.
படத்தொகுப்பாளர் :- என்.பி.ஸ்ரீகாந்த்.
இசையமைப்பாளர் :- ஜி.வி.பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- சூப்பர் குட் பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- ஆர்.பி. சௌத்ரி, பி சுரேஷ், ஆர் பி ஜீவன் சௌத்ரி, ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆர் பி சௌதரி.
மக்கள் தொடர்பு :- ரியாஸ் கே அகமது, பராஸ்.
ரேட்டிங் :- 2./5.
மருந்து விற்பனை பிரதிநிதியான கதாநாயகன் விஷால், தனது மனைவி கதாநாயகி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
தனக்கு கிடைக்கும் குறைவான சம்பளமாக இருந்தாலும் குடும்பத்துடன் மனைவி மகன் மகளுடன் மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கதாநாயகன் விஷால் வாழ்ந்து வருகிறார்
கதாநாயகன் விஷால், தனது குடும்பத்தாரின் நீண்ட நாள் கனவான கார் ஒன்றை வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
புதிய கார் வாங்குவதற்காக குடும்பத்துடன் ஒவ்வொரு கார் விற்பனை செய்யும் ஷோரூமுக்கு செல்கிறார்.
அனைத்து கார் ஷோரூம்களிலும் சென்றாலும் புதிய கார் வாங்க முடியாததால் பழைய பி எம் டபிள்யூ கார் ஒன்றை வாங்குகிறார்.
தான் வாங்கிய புதிய காரில் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள்
கதாநாயகன் விஷால் வாங்கிய பழைய பி எம் டபிள்யூ கார்னால் அவருடைய அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்பட, அவரது மனைவி துஷாரா விஜயன், மற்றும் மகளும் கொல்லப்படுகிறார்கள்.
தன்னுடைய மனைவி துஷாரா விஜயன் மற்றும் மகள் கொலைக்கு தனது தந்தை தான் காரணம் என்று நினைக்கும் கதாநாயகன் விஷாலுக்கு, அவர் மீதான ஆத்திரம் அதிகரிக்க இந்த நேரத்தில் அவரது தந்தை அவரை பார்க்க வருகிறார்.
ஆனால், அவரை பார்க்க விரும்பாத கதாநாயகன் விஷால், அவரை அவமரியாதை செய்து திருப்பி அனுப்பி விடுகிறார்.
கதாநாயகன் விஷால் தன்னுடைய தந்தை மீது கோபம் படுவதற்கான காரணம் என்ன ?, அவருடைய தந்தை யார் ?, மனைவி, மகளை கொலை செய்தவர்களை கதாநாயகன் விஷால் பழிவாங்கினாரா ?, பழிவாங்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘மகுடம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘மகுடம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக விஷால் நடித்திருக்கிறார்.
தந்தை மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார்
தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷால் கொஞ்சம் கூட தோற்றம் துளி கூட பொருந்தவில்லை என்பதுதான் உண்மை.
கதாநாயகன் விஷால் மருந்து விற்பனை பிரதிநிதியான நிஜமான தோற்றத்தில் அதில் வெளிப்படுத்தும் நடிப்பிலும் எந்த விதமான குறையில்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த ‘மகுடம்’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் துஷாரா விஜயன், இருவரும் நடித்திருக்கிறார்கள்.
தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷால் ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலி, மீன் விற்பனையாளர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும் நடிப்பில் கொஞ்சம் ஓவராக நடித்திருக்கிறார்.
மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷால் ஜோடியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
தந்தை விஷாலின் நன்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயபிரகாஷ், ஜான் விஜய், விஷால் மாமனார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வம்சி கிருஷ்ணா, சபுமோன் அபுசலிம், அஜய், அர்ஜய் பிரின்ஸ் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் இஷ்ட்டத்திற்கு நடித்திருப்பதோடு, பொருத்தமே இல்லாத கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ஆகியோரது ஒளிப்பதிவு மூலம் மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் பின்னணி இசை அதிரடி மற்றும் ஆரவாரமான காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையிலும் மிகவும் சிறப்பாக பயணித்திருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன் வரவேண்டிய இந்த அப்பா மகன் சென்டிமென்ட் கதையை மிகவும் சுமாரான திரைக்கதையில் நடிகர் விஷால், தனது ஒட்டுமொத்த திரைப்படத் துறையில் தான் கற்றுக்கொண்ட அனைத்து அனுபவத்தையும் கேள்விக்குறியாக்கும் விதத்தில் இந்த ‘மகுடம்’ நிரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஷால்.
நடிகர் விஷால், திரைப்படங்களை இயக்குவதை விட்டு விட்டு ஒரு நல்ல ஆக்ஷன் கதாநாயகனாக மட்டுமே தனது திரைத்துறை பயணத்தை தொடரலாம்.
மொத்தத்தில், இந்த ‘மகுடம்’ திரைப்படம் ‘மகுடம்’ தலைக்கேறவில்லை… ‘மகுடம்’ மண்ணுக்குள் மறைந்துவிட்டது!











