மெர்சல்’ படத்தின் சம்பள பாக்கி குறித்து மேஜிக் கலைஞர் வழக்குப்பதிவு ?

அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய் இரண்டு வேடங்களிலில் நடித்தார். அதில் ஒன்று மேஜிக் கலைஞர் ரோல். அதற்காக விஜய்க்கு சர்வதேச அளவில் பிரபலமான மேஜிக் கலைஞர் ஒருவர் பயிற்சி கொடுத்தார். ஆனால் அதற்கான சம்பளத்தை தேனாண்டாள் நிறுவனம் இதுவரை தரவில்லை என அவர் சென்ற வருடமே புகார் கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது அவர், “இன்னும் 4 லட்சம் சம்பள பாக்கி உள்ள நிலையில், பலமுறை கேட்டும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. தேனாண்டாள் நிறுவனம் பண நெருக்கடியில் இருக்கிறது என்பதை ஏற்கமாட்டேன்‌‌. ஏனெனில், சமீபத்தில் கூட ஹேமா ருக்மணி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மிகப்பெரிய ஷோரூமில் பர்சேஸ் செய்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். எனவே தான் கஷ்டப்பட்டு பணிபுரிந்ததற்கான சம்பளத்தை வாங்காமல் விடப்போவதில்லை” என்றும், “சில மாதங்கள் முன்பு கனடாவில் இருந்து சென்னை வந்து வழக்கறிஞர் மூலம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்” என்றும் கோபமாக பேசி ஓர் விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அதன் பதிவு

error: Content is protected !!