தென்னிந்தியாவில் திரையரங்குகள் மூடப்பட்டதால் அரசுக்கு எவ்வளவு கோடி நஷ்டம் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களை தற்போது மிக பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் கொரானா வைரஸ்.

இது சம்பந்தமாக அந்தந்த நாடுகள் பல விதமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கிறது.

ஆம் அனைவரும் தினம் தோன்றும் பயன்படுத்தும் கைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது தமிழ்நாட்டிலும் பல விஷயங்கள் இதற்காக செய்யப்பட்டு வருகிறது.

ஆம் இந்த கொடிய நோய் பரவாமல் தடுக்க பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் மால்கள். பார்கள் தியேட்டர்கள் பல ஐடி நிறுவனங்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகளையும் சில நாட்களுக்கு மூடவேண்டும் என்று தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த வாரம் வெளிவர காத்திருந்த பல திரைப்படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஏன் இதனால் ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவர காத்திருந்த தளபதி விஜய்யின் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கூட தள்ளி போய் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

மேலும் மார்ச் 31ஆம் தேதி வரை தென்னிந்தியாவில் அனைத்து திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் என்பதினால், ரூபாய் 8000 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் மத்தியஅரசுக்கு மாநில அரசுக்கும் கிடைக்கும் ஜி.எஸ்.டி ரூபாய் 1000 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!