எஸ்பிபி யின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்காத நடிகர் அஜித்குமார் ஏன்.?
சென்னை : 27 செப்டம்பர் 2020
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்காத நடிகர் அஜித்குமார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவுக்கு ஒட்டு மொத்த இசை ப்ரியர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு முதல் இந்தியாவில் எந்த மூலையில் திரும்பினாலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுடைய பாடல்களையே கேட்கிறோம்.
இசை பிரியர்கள் ரசிகர்கள், அரசியல்வாதிகள், மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.
கொரானோ வைரஸ் நோய் தொற்று காரணமாக பலரால் நேரில் அஞ்சலி செலுத்த வர முடியாத சூழ்நிலை உள்ளார்கள்.
ஆனாலும் சில பிரபலங்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்மீது வைத்திருந்த பாசத்தாலும் மரியாதையினாலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுடைய பண்ணை வீட்டிற்குள் அனுமதி இல்லை என தெரிந்தும் தாமரைப்பாக்கத்தில் நடந்த இறுதிச் சடங்கில் நடிகர்கள் விஜய், அர்ஜுன், ரகுமான், வைபவ், மயில்சாமி. உதயநிதி பின்னணி பாடகர் மனோ, நடிகர் அர்ஜுன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் அமீர், உள்ளிட்டவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த கலந்து கொண்டனர்.
ஆனால், தமிழ் திரைப்பட உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவரான இருப்பவர் அஜித்குமார் இரங்கல் தெரிவிக்கவோ அஞ்சலி செலுத்தவோ வரவும் இல்லை சமூக வலைத்தளங்களில் இரங்கலும் தெரிவிக்கவில்லை.
அஜித்குமார் தமிழ் திரைப்பட உலகிற்கு வருவதற்கு முன் சிறு சிறு விளம்பரங்களில் சின்னத்திரையிலும் நடித்து வந்தாராம்.
அப்போதுதான் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் திரைப்படத்திற்கு கதாநாயகன் தேடி கொண்டிருந்தபோது அஜித்குமாரை கதாநாயகனாக போடும்படி பிரேம புஸ்தகம் படத்தை இயக்கியவர் கொல்லுபுடி மாருதி ராவ். நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என சினிமாவில் பல பரிமாணங்களை காட்டியவர்.
இயக்குநர் கொல்லுபுடி மாருதி ராவ் அவர்களிடம் அஜீத்குமாரை அறிமுகப்படுத்தியவரே நம்ம எஸ்.பி பாலசுப்பிரமணியம் தானாம்.
மேலும் எஸ்.பி.பி மகன் சரணும், அஜித்குமாரும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள் என்பதும் தெரிந்த ஒன்றுதான்.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களுடைய இறுதி அஞ்சலிக்கு நேரில் வர முடியாத சூழ்நிலை அஜித்குமாருக்கு இருந்திருக்கலாம்.
ஆனால் ஓர் இரங்கல் அறிக்கையாவது கொடுத்திருக்கலாமே? அதற்கு கூட மனமில்லையா அஜித்குமார் சார்.?
அஜித்குமாரின் சூப்பர் ஹிட் பாடல்களான… உன்னைப் பார்த்த பின்பு நான்…(காதல் மன்னன்) சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.. (அமர்க்களம்) ஆகிய பல பாடல்களை பாடியது எஸ்.பி பாலசுப்பிரமணியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.











