காட்சிகளுக்குப் பின்னால் ஒரு புதிய தலைமை… SICA-வின் அடுத்த மூன்றாண்டு பயணம் தொடங்கியது!” – 2026–2029 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோலாகலம்!

காட்சிகளுக்குப் பின்னால் ஒரு புதிய தலைமை… SICA-வின் அடுத்த மூன்றாண்டு பயணம் தொடங்கியது!” – 2026–2029 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோலாகலம்!

சென்னை 02 நவம்பர் 2026 தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (Southern India Cinematographers’ Association – SICA) 2026–2029 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு சென்னையில் உள்ள  சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல்வேறு திரைப்படத் துறை அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மாண்புமிகு அமைச்சர் திரு இராஜ்மோகன் ஆறுமுகம் அவர்கள் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் திரு R.K. செல்வமணி, SICA அறங்காவலர் திரு P.C. ஸ்ரீராம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் திரு விக்ரமன் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி மாண்புமிகு நீதிபதி M. கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் பல்வேறு திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் திரு நாகர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் திரு ரவிகொப்பார்க்கரா.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு G.K.M. தமிழ்முரசன்

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் திரு T. சிவா

M.G.R. அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத் தலைவர் திரு மனோஜ் பரமஹம்சா

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் திரு தனஞ்செயன்

NFDC பொது மேலாளர் திரு D. ராமகிருஷ்ணன்

FEFSI பொதுச்செயலாளர் திரு B.N. சுவாமிநாதன்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் திரு சேரன்

FEFSI பொருளாளர் திரு S.P. செந்தில்குமார்

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச்செயலாளர் திரு R.V. உதயகுமார்

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொருளாளர் திரு பேரரசு

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திருமதி குஷ்பு சுந்தர்

தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு உ. தயாசங்கர்

ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

2026–2029 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைவர்: திரு S. சரவணன்.

பொதுச்செயலாளர்: திரு A. ரமேஷ்குமார்.

பொருளாளர்: திரு M. வெற்றிவேல்.

துணைத் தலைவர்கள்:

திரு R. தினகரன்.
திரு S. லோகநாதன்

இணைச் செயலாளர்கள்:

திரு R. வேல்ராஜன்
திரு சோவிலோராஜா
திரு J. லஷ்மணகுமார்

செயற்குழு உறுப்பினர்கள்:

திரு S. அருள் வின்சென்ட்
திரு M. மாதேஸ்வரன்.
திரு R.S. சரவணன்
திரு J. கோபிநாத்.
திரு ராஜேஷ் பாதல்
திரு K. ரவிசங்கரன்
திரு A. சக்திவேல்.
திரு D. சினிவாசன்
திரு G. ரவீந்திரநாத்.
திரு S. அருண்குமார்
திரு R. முத்துக்குமரன்
திரு S.S. ரவி மாறன் சிவன்.
திரு B. ஆருண்மொழி வர்மன்
திரு V. கல்யாணசுந்தரம் (அ) அகிலன்.
திரு K.C. ரமேஷ்

திரைப்படத் துறையின் முக்கிய அங்கமாக விளங்கும் ஒளிப்பதிவாளர்களின் நலன், தொழில் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம், இளம் ஒளிப்பதிவாளர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு எதிர்காலப் பணிகளுக்கு இந்தப் புதிய நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு திரைப்படத் துறையினரிடையே ஏற்பட்டுள்ளது.

திரைப்பட உருவாக்கத்தில் ஒளிப்பதிவின் பங்களிப்பு இன்றியமையாதது. ஒரு திரைப்படத்தின் காட்சியமைப்பு, கலைநயம், தொழில்நுட்பத் தரம் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் காட்சிமொழி ஆகியவற்றில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு மிக முக்கியமானது.அத்தகைய சிறப்புமிக்க ஒளிப்பதிவாளர்களின் அமைப்பான தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பது திரைப்படத் துறையில் புதிய எதிர்பார்ப்புகளையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய நிர்வாகிகளுக்கு திரைப்படத் துறையினர் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவினருக்கு எங்களது  https://moviewingz.com/இணையதளம் சார்பாக  மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

CLOSE
CLOSE
error: Content is protected !!